நோய் அணுகா நெறி .

திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல்
பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்
நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி
உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி.

பாலுண்போம் எண்ணெய் பெறி¢ன் வெந்நீ¢ரில் குளிப்போம்
பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த
வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு

மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம்
முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம்
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே

****வேறு

பொன்னின் பெயர். .

.இனியான இயலென்று , இரணியமென்றும்
நிலையான சையென்றுமிதற்குப்பேரு
தனியான டக மருந்து என்றுமிதற்குப்பேரு
தருவான வருணமென்றதற்குப்பேரு
வனியாடான அத்தமென்றதற்குப் பேரு
வசனித்தோம் அரியென்றும் அதற்குப்பேரு
துனியான நாகஒளி பவனி வரும் போதம்
சொல்லிவிட்டோம் பொன்னிடப் பொருளின் பேரே.

தங்கத்தின் பெயர்.

பொருளான பரியென்றும் திரியென்றும் பேரு
பூமல குறமென்றதற்குப் பேரு
அருளான அன்னமென்றும் கள்ளமென்றும் பேரு
அசுபதி என்றதற்கு அதீதப்பேரு
மருளான சகாபரி மாற்றென்றும் பேரு
மக்கனியென்றதற்கு அதீதப்பேரு
இருளான வீரமென்றதற்குப் பேரு
என்ன சொல்வோம் அதன் பேரு தங்கத்தின் பேரே .

Advertisements