ஸ்தான கோலாகலம் .

“முன்னூற்கணக்கால் மொழிந்தவைதன்னை
என்னால் திவிளியென்ற மரியாதி
சின்னூற்கணக்காய்த் திரட்டி யக்கணக்கும்
நன்னூல்வர் முன் நயந்துரைப்பேனே!” (1)

“நாலாகலை நிபுணர் மிக்கான குணசீலர் நல்லறிவுள்ளோர்கள்
மேலான யெக்கணக்கும்தான் வகையுள்ளதெல்லாம் விளம்பிரீதென்ன
பாலான வாரிதனிற் பிறந்தவமிர்தம் போலும் பண்பாகு மாஸ்தான
கோலாகலமென்னும் பேர்வகுத்து மாப்பாரறியக் கூறினேனே ! (2 )”

“கூடலில் நாகம் குணம் ஓர்வளித்த
வர்தாரின நாவிலிப்¦பௌமாள்
பாடலைப் பாணர் பதம் பணிவோன்
நாடவர் நகைக்க நயந்துரைப்பேனே !”

“ எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்று ஒளவை சொன்னாற்போலும் “ பொன்னொன்று பணிபல வென்றாற்போலும் சகலமான கணக்கும் எண்சுவடி
என்னுமதாய்,பள்ளிக்கூடம் விட்டுக் கணக்கெழுதப் பொனவுடனே எண்சுவடி மறந்து தடுமாறுகின்ற பேரும் உண்டு. யுக்திகாரன் நினைவிட்டுக்கொண்டு கேட்டவகைக்கெல்லாம் தடுமாற்றமில்லாமல் சொல்லுகிற பேருமுண்டு.

இந்தச்சுருக்கம் கத்திருந்து வகை வந்தால் யுக்திகாரனுக்கு எந்த உரையிலே எழுதினாலும் நாலு கணக்குப் பிள்ளைகளுக்கு முன் கேட்டவகை சரிக்கட்டிச் சொல்லும் பேருண்டாக்கி வைக்குமாகையினாலே , இந்தச்சுருக்கம் அங்கத்தால் (எண்களால்) மந்தனாக இருக்கின்ற பேரும் யுக்திகாரனாக இருக்கின்ற பேரும் கேட்ட வகை சொல்ல வல்லவனாக இருப்பான் . யுக்திக்காரராக இருக்கிற பேர் கற்றால் பொற்பூவில் வாசனை பிறந்தாற்போல யிரத்தில் ஒருவன் என்று சொல்லயிடமாக இருக்கும். மத்த அதிகாரம் விரிவிட்டுச் சொல்லிவைத்தபடியினாலே ஒன்று வந்தும் ஒன்று வராமலுமிருக்கும்.

உதாரணத்தில் வந்தவைகள் சிலவும் வராதவைகள் சிலவுமாக இருக்குமாகையால் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள் யாவும் பொது வழியிலேயே என்பது அவசியம் உணரத்தக்கதாம்.

Advertisements