மயமதம் _ மண் பரிசோதனை _
MAYAMATHAM SOIL TESTING PART 2

தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் நீண்ட சதுரச்சரமாகவும் , குற்றமற்றதாகவும் ,தெற்கில் அல்லது மேற்கில் உயர்ந்தும் இருக்கின்ற பூமியின் வடிவமானது , சிறந்ததாகக் கூறப்பட்டு இருக்கிறது.

குதிரை , யானை , மூங்கில் ,வீணை , சமுத்திரம் ,துந்துபி வாத்தியம் இவைகளின் சப்தம் போன்ற சப்தமுடையதும் , புன்னை , ஜாதி முல்லைப்பூ , தாமரைப்பூ ,தானியம் , பாதிரிப்பூ , இவைகளுடைய மணமுடையதும் , பசுவின் வாசனையைப் போன்ற வாசனை உடையதும் ,
சகல விதமான விதைகளும் முளைக்கக் கூடியதுமான பூமியானது சிரேஷ்டமாகும்.

ஒரே விதமான நிறமுடையதும் அழுத்தமானதும் பசையுள்ளதும் , சுககரமான ஸ்பரிசமுள்ளதும் (கைக்கு இதமான உணர்ச்சியுடையதுமான ) பூமியானது சிறந்தது ஆகும்.

பில்வம் , வேம்பு ,நொச்சில் , பிண்டிதம் (மருக்காரை ) ஏழிலைப்பாலை , கட்டிமாமரம் இந்த ஆறு விதமான மரங்களும் முளைத்து சம தளமாக இருப்பதும் , கசப்பு , உரப்பு , துவர்ப்பு , உப்பு , புளிப்பு , இனிப்பு
ஆகிய ஆறு விதமான சுவையுள்ளதுமான பூமியானது சகல விதமான சம்பத்துகளையும் அளிப்பதாகும்.

பிரதட்சினமான ஜலமுடையதும் , நிறம் , மணம், சுவையுடையதுமான
பூமியானது சுபகரமாகும்.

புருஷனுடைய கை எடுப்பு மட்டத்தில் தண்ணீர் காணப்படுகின்ற பூமியானது மனதுக்கு இன்பத்தையளிப்பதாகும்.

மண்டை ஓடுகள் இல்லாததும் பாறைகள் இல்லாததும் ,எலும்புகள் இல்லாததும் ,புற்றுகள் புழுக்கள் இல்லாததும் , பொந்துகள் இல்லாததும்
ஸன்னமான (சிறிய) மணல்களுடன் கூடியதும் , கெரி மரங்களின் வேர்கள்
பற்பல விதமான சூலங்கள் ( சூலத்தைப் போன்ற கூர்மையான முளைகள்)
சேறுடன் கூடிய பாழும் கிணறுகள் ,கல்லுகள் , சர்க்கரைகள் , (கூழாங்கற்கள் அல்லது சலங்கை மணல் ) சாம்பல் , உமி இவைகள் இல்லாததும் ஆன பூமி சகல சாதியினருக்கும் சகல விதமான சம்பத்துகளையும் அளிக்கக் கூடியதாகும்.

தயிர் , நெய் , தேன் , இவைகளின் மணமுள்ளதும் எண்ணெய் இரத்தம் இவைகளின் நாற்றமுள்ளதும் சலம் , மீன் , பறவை இவைகளின் நாற்றமுள்ளதுமான பூமியானது வாஸ்து சாஸ்திரம் அறிந்த பெறியோர்களாலே நிந்திக்கப் பட்டதாகும்.

சபையின் சமீபத்திலிருப்பதும் , நாற்சந்துகளின் சமீபத்தில் இருப்பதும் , ராஜ கிரகத்தை ஒட்டியிருப்பதும் , தேவாலயத்தின் சமீபத்தில் இருப்பதும் , முள்ளு மரங்களுடன் கூடியதும் , வட்டம் மற்றும் வடிவமாகவும் முக்கோண வடிவமாகவும் வஜ்ராயுதம் போல் பல வளைவுகளுடன் இருப்பதும் , மயைப்போலிருப்பதும் , சண்டாளர்களின் வீட்டில் உள்ள
மரம் முதலியவைகளின் நிழலுடன் கூடியதும் , சர்ம காரனுடைய (தோல் பதனிடும் தொழில் செய்பவனின் ) வீட்டையொட்டி இருப்பதும் ஒன்று , இரண்டு, மூன்று , அல்லது நான்கு வழிகள் உள்ளதும் , தரிதமானதும் , தெளிவில்லாத வழியுடையதும் , பள்ளமாக இருப்பதும் , பிரணவத்தின் வடிவமாக இருப்பதும் , பெரிய மரங்களுடன் கூடியதும் , யக்ஞ பூமியின்
விருட்சங்களுடன் கூடியதும் , தேக்கு அல்லது ல மரத்துடன் கூடிய நாற்கோண வடிவமானதும் , பாம்புகளுக்கு இருப்பிடமானதும் , சங்கரனுடைய பூந்தோட்டமாக இருப்பதும் , மயானமாக இருப்பதும் , ஸ்ரம ஸ்தானமாக இருப்பதும் , குரங்கு , பன்றி மலைப் பாம்பு போன்ற வடிவமுள்ளதும் , டங்கம் ( உளி அல்லது கோடாலி) போலும் முறம் , உரல் போலிருப்பதும் சங்கு போலிருப்பதும் முளைகளுடன் கூடியதும் , பூனை போலும் ஓணான் போலும், உப்பு படிந்த பூமியாய் இருப்பதும் வீட்டுப்பல்லியின் வடிவமாக இருப்பதுமான பூமியானது பூ தத்துவத்தை அறிந்தவர்களாலே நிந்திக்கப்பட்டது கும்..

வெளுப்பு _ சிவப்பு _ மWசள் _ கருப்பு நிறமானதும் , குதிரை யானையின் சத்தமுடையதும் , ஆறுவிதமான சுவையுடையதும் , ஒரே விதமான நிறமுடையதும் , பசு _ தானியம் _ தாமரைப்பூ இவைகளின் மணமுடையதும் , கருங்கல் உமி முதலியவைகள் இல்லாததும் , தெற்கு _ மேற்கு திக்கில் உயர்ந்தது கிழக்கு அல்லது வடக்கில் செல்லுகின்ற நீரூத்தத்தை உடையதும் , சிறந்த காமதேனுவைப்போன்றதும் , சூலங்கள் (முளைகள் ) இல்லாததும் கெரி பொந்துகள் இல்லாததுமான பூமியானது சகல ஜாதியாருக்கும் யோக்கியமான பூமியாகும் என்று முற்காலத்திலிருந்த முனிவர்கள் கூறியிருக்கிறார்கள்.(பூ பரீட்சை என்னும் அத்தியயம் முற்றும்.)

Advertisements