மயமதம்
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மயமதம் என்ற சொல்லைக் கணிணியில் காணும் வாய்ப்பு வருமென்று கனவுகூட கண்டதில்லை. இந்த நூலை எனக்கு அறிமுகப்படுத்திய தோழர் அரிராமன் காலமாகி 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன அவரிடம் நூலின் முதற்பகுதி மட்டுமே இருந்தது. இன்று வரை இரண்டாம் பகுதி கிட்டவே இல்லை. நான் ஒரு தொழில்முறை ஆய்வாளனோ கல்வித்துறையோடு
நெருக்கமோ இல்லாதவன் என்பதால் விரும்பும் நூல்களைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன.

ஜோசஃப் நீதாம் அவர்களது நூற்றாண்டும் அதனையொட்டி வெளிவந்த மலரும்தான்(refer :SITUATING THE HITORY OF SCIENCE) சீனாவின் பண்டைய தொழில் நுட்பங்கள் போன்று ( காண்க : science and culture of china by Joseph Neethaam) தமிழர்களின் பண்டைய தொழில் நுட்பம் பற்றித் தேடத் தூண்டியது, திண்ணையில் எழுதவும் நேர்ந்தது. ( காண்க : ‘அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.’ http://www.thinnai .com)இப்போது பலர் மயமதத்தின் இரண்டாம் பகுதியைக் கண்டு பிடித்து அப்பணியைத் தொடர்வது பேருவகை அளிக்கிறது.

ஆனாலும் தமிழர்களின் கட்டிடக்கலை உன்னதத்தை
கட்டிடக்கலை நிபுணர்கள் ஆய்ந்து எழுதுவது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, 1960 ஆம் ஆண்டில் சேத்தியாத்தோப்புக்கு அருகில் ஒருகிராமத்தில் நடந்த திருமணத்துக்கு சென்ற நான் சாலையோர அறிவிப்புப் பலகையில் சில மைல் தூரத்தில் கங்கை கொண்ட சோழபுரம் இருக்கிறது என அறிந்து நடந்தே போய்ப் பார்த்தேன். கொயிலும் அதன் பிரமாண்ட வடிவமைப்பும் பல மைல் தூரத்துக்கு முன்பிருந்தே என்னை ஈர்த்தது என்பது தவிர அதன் உள்கட்டமைப்பின் உன்னதம் பற்றி 15 வயது சிறுவனாகிய எனக்கு ஏதும் தெரியாது. சாலை _ போக்குவரத்து வசதிகள் இன்றிருக்கும் அளவு வளராத அக்காலத்தில் வெகு சிலரே அக்கோயிலைக் காண்பதற்கு வந்து சென்றனர். தWசைப் பெரிய கோயிலைக் கட்டிய இராசராச சோழனின் மகன் இராசேந்திர சோழன் கட்டியது அதுவென்பதுடன் அதே போன்ற வடிவமைப்பு கொண்டது.

பல பWசலோக சிலைகள் கம்பிக்கதவுக்குள் பத்திரமாகப்பூட்டி வைக்கப்பட்டிருந்தன. வெறிச்சோடிக் கிடந்த அக்கோயிலுக்குள் ஒரு அர்ச்சகரும் இருந்தார்.அங்கிருந்த காவலாள் ஒருவர் என்னை கோபுரத்தின் முதல் விதானம் வரை ஒரு குறுகிய படிக்கட்டு வழியே மிகுந்த எச்சரிக்கையோடு அழைத்துச் சென்று அறை குறை வெளிச்சத்தில் இருந்து ஆகாய வெளிச்சத்தில் நிறுத்தியபோது வியப்பு மேலோங்கி நின்றது. சிறுவனாய் இருந்த எனக்கு அவர் விளக்கிச் சொன்னதை அப்படியே நினைவு படுத்தி உங்களுக்கு நான் சொல்கிறேன்.

அப்படிக்கட்டின் சிறப்பு என்னவெனில் சுமார் இரண்டடி நீளம் ஓரடி அகலம் கொண்ட கடைசிப்படியானது, 18 x 18 அடி மூலஸ்தானத்துக்கு வெளியே 24×24 அடி கொண்டதொரு உட்பிரகாரத்துக்கும் 36×36 அடி கொண்டவெளிப்பிரகாரத்துக்கும் இடையில் வடகிழக்கு மூலையில் கீழிருந்து மேலாக சுவற்றையொட்டித் தொடங்கி ஒன்றின் மேலொன்றாக முதல் விதானத்தைச் சென்றடைந்தது. இயல்பான மாடிப்படிகளில் ஏறுவது போல் நாம் நிமிர்ந்து மேலே பார்த்துக் கொண்டு ஏறிவிட முடியாது.குனிந்து தலைக்கு மேல் உள்ள படிக்கட்டு நம் தலையில் இடித்து விடாதபடி எச்சரிக்கையோடு ஏறவேண்டும்.இது கோட்டையாகவும் பயன் படுத்தப் பட்டதால் எதிரிகள் சுலபமாக மேலேறி வந்துவிடாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.இந்தப் படிக்கட்டே முதல் விதானத்தை நாம் சென்றடையும் போது 24 அடி பிரகாரமும் 36 அடி பிரகாரமும் மேலேயுள்ள கடைசிப்படியால் ஒற்றைச் சுவராக மாறி அதன் மேலிருந்து கோபுரத்தின் தளங்கள் முற்றிலும் பாரமான கருங்கல் கொண்டு மேல் நோக்கி எழும்புகின்றன. இப்போது அந்தப் படிக்கட்டு பொது மக்கள் பார்வைக்கு மூடி விடப்பட்டிருக்கிறது.

ENGINERING MATHS படித்தவர்கள் யாராவது விளக்குவார்களா ?

புதுவை Wஆனம்
j.p.pandit @ gmail.com

Advertisements