பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயித்திறள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே

இயலரு ளொளியோ ரேகtதேசத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்த மெய்ச்சிவமே

{ 28 . திருவருள் வல்லபம் }

அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே

அருளுறின் எல்லாம் ஆகுமீ துண்மை
அருளுற முயல்கவென்று அருளிய சிவமே ( 980 )

அருள் நெறி யொன்றே தெரு நெறி மற்றெலாம்
இருள் நெறி என்றெனக்கு இயம்பிய சிவமே

அருள் பெறின் துரும்புமோர் ஐந்தொழில் புரியும்
தெருள் இதுவெனவே செப்பிய சிவமே

அருளறிவொன்றே அறிவு மற்றெல்லாம்
மருளறிவென்றெ வகுத்த மெய்ச்சிவமே

அருட்சுகம் ஒன்றே அரும்பெறற் பெரும் சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச் சிவமே

அருட்பேரதுவே அரும்பெறற் பெரும்பேர்
இருட்பேரறுக்கும் என்று இயம்பிய சிவமே ( 990 )

அருட்டனி வல்லப மதுவே யெலாம்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்ற மெய்ச் சிவமே

அருளறி யார்தமை யறிவார் எம்மையும்
பொருளறியாரெனப் புகன்ற மெய்ச்சிவமே

அருணிலை யொன்றே அனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே

அருள்வடி வதுவே யழியாத்தனி வடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மியல் அருளே நம்முரு
அருளே நம்நடுவாமென்ற சிவமே ( 1000 )

அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம் வடிவாமென்ற சிவமே

அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குணமா மென்ற சிவமே

அருளே நம்மதி யருளே நம்பதம்
அருளே நம்மிடமா மென்ற சிவமே

அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப்பாமென்ற சிவமே

அருளே நம்பொருள் அருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே ( 1010 )

அருளே நங்குலம் அர்ளே நம்மினம்
அருளே நாமறிவாயென்ற சிவமே

அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாமறிவாய் என்ற சிவமே

அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளரசு இயற்றுக என்று அருளிய சிவமே !

{ 29 . சிவபதி }

உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர்சிவ பதியே ( 1020 )

நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே

சுத்த சன்மார்க்க சுகநிலை தனிலெனை
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புரிந்த கதிசிவ பதியே

துன்பந் தொலைத்தருட் சோதியால் நிறைந்த
இன்ப மெனக்கருள் எழிற்சிவ பதியே

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே ( 1030 )

கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவபதியே

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே !

{ 30 . அருள் குரு }

பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
திரமுற வருளிய திருவருட் குருவே ! ( 1040 )

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்தும் தெரிந்த சற்குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்தும்
குணமுதற் தெரித்துட் குலவு சற்குருவே

பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம்
மதியுறத் தெரிந்துள் வயங்கு சற்குருவே

பிரம ரகசியம் பேசியென்னுளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே (1050 )

சிவரகசியமெல்லாம் தெரிவித்தெனக்கே
நவநிலை காட்டிய Wஆன சர்க்குருவே

சத்திய லனைத்தும் சித்தியன் முழுதும்
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லாம் அறிவித்து என்னுள்ளே
பிறிவற விளங்கும் பெறிய சற்குறுவே

கேட்பவை எல்லாம் கேட்பித்தென்னுள்ளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே ( 1060 )

காண்பவையெல்லாம் காட்டுவித்தெனக்கே
மாண் பதமளித்து வயங்கு சற்குருவே

செய்பவை யெல்லாம் செய்வித் தெனக்கே

உய்பவை பளித்தெனுள் ஓங்கு சற்குருவே

உண்பவை யெல்லாம் உண்ணுவித்தென்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே

சாகாக் கல்வியின் தரமெலாங் கற்பித்து
ஏகாக்கரப்பொருள் ஈந்த சற்குருவே

சத்தியமாம் சிவ சக்திகள் அனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்கு சற்குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லான் எனவெனை வைத்த சற்குருவே ! ( 1070 )

{ 31 . உயிர்த்தாய் }

Advertisements