அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி

22 . அருலில் நெருட்டல்

தோற்றமா மாயைத் தொடர்பறுத்தருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெரும் சோதி

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளி
அத்தகை காட்டும் அருட்பெரும் சோதி

எனைத்து ஆணவமுதலாம் தவிர்த்தே
அனுக்கிரகம் புரி அருட்பெரும் சோதி

விடய மறைப்பெலாம் விடுவித்துயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருட்பெரும் சோதி ( 840 )

சொரூப மறைப்பெலாந் தொலைப்பித்துயிர்களை
அருளினிற்றெருட்டும் அருட்பெரும் சோதி

மறைப்பின் மறைந்தன வருவித்தாங்கே
அறத்தொடு தெருட்டும் அருட்பெரும் சோதி

எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருட்பெரும் சோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க்கின்பம்
அடையுறத்தெருட்டும் அருட்பெரும் சோதி

சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க்கின்பம்
அத்துறத்தெருட்டும் அருட்பெரும் சோதி ( 850 )

சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெரும் சோதி

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெரும் சோதி

காக்கும் தலைவர்கள் கணக்கில் பல்கோடியை
ஆக்குறக்காக்கும் அருட்பெரும் சோதி

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கும் அருட்பெரும் சோதி

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெரும் சோதி ( 860 )

தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந்தெருட்டும் அருட்பெரும் சோதி

ஐந்தொழி லாதிசெய் ஐவராதிகளை
ஐந்தொழி லாதிசெய் அருட்பெரும் சோதி

இறந்தவரெல்லாம் எழுந்திட உலகில்
அறந்தலை அளித்த அருட்பெரும் சோதி

செத்தவரெல்லாம் சிரித்தாங் கெழில்திறல்
அத்தகை காட்டிய அருட்பெரும் சோதி

இறந்தவர் எழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை எனக்கருள் அருட்பெரும் சோதி ( 870 )

செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழும்பிட
அத்திறல் எனக்கருள் அருட்பெரும் சோதி

சித்தெலாம் வல்ல திறலெனக்களித் தெனக்கே
அத்தனென்றோங்உம் அருட்பெர்ம் சோதி

{ 23. தனிப்பொருள் }

ஒன்றதி ரண்டது ஒன்றினில் இரண்டது
ஒன்றினில் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே

ஒன்றல ரண்டல ஒன்றினில் ரண்டல
ஒன்றினில் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே

ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே ( 880 )

Advertisements