சிற்சபை விளக்கம்

சோறு வேண்டினும் துகில் அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலாற்சுகமாம்
வேறு வேண்டினும் நினையடைந்தன்றி
மேவொணாதெனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பு அறியேன்
சாறு வேண்டிய பொழில் வடலரசே
சத்தியச்சபைத் த்னிப்பெரும் பதியே.

எWசலின்றிய துயரினால் இடரால்
இடுக்கணடைய னின்னருள் விரும்பி
வWச நெWசினேன் வந்து நிற்கின்றேன்
அWச லென்றனை யாட்கொளல் வேண்டும்
அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
தWசமென்றவர்க்கு அருள் வடலரசே
சத்தியச்சபை தனிப்பெரும் பதியே.

சூழ்விலாதுழல் மனத்தினாற் சுழலும்
துட்டனேன் அருட்சுகப்பெரும் பதிநின்
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பு அறியேன்
ஊழ்விடாமையில் அரைக்கணமெனினும்
உன்னைவிட்டு அயல் ஒன்றும் உற்றறியேன்
தாழ்விலாத சீர்தரு வடலரசே
சத்தியச்சபைத் தனிப்பெரும் பதியே.

ஆட்டமோய்கிலா வWசக மனத்தால்
அலைந்து ஐயவோ வயர்ந்துள மயர்ந்து
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பறியேன்
நாட்ட நின்புடை யன்றி மற்றறியேன்
நாயினேன் பிழை பொறுத்திதுதருணம்
தாட்ட லந்தருவாய் வடலரசே
சத்தியச்சபை தனிப்பெரும் பதியே.

கருணை யொன்றிலாக் கன்மனக்குரங்கால்
காடு மேடு ழன்றுள மெலிந்து அந்தோ
வருண நின்புடை வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பு அறியேன்
அருணன் என்றெனை அக்ற்றிடுவாயேல்
ஐய வோதுணை யறிந்தில னிதுவே
தருண மேற்கருள் வாய் வடலரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே.

கரண வாதனையான் மிகமயங்கிக்
கலங்கினேன் ஒரு களைகணு மறியேன்
மரண நீக்கிட வந்து நிற்கின்றேன்
வள்ளலே யுன்றன் மனக்குறிப்பறியேன்
இரணனென்றெனை யென்னிடேல் பிறிதோர்
இச்சையொன்றிலேன் எந்தை நின் உபய
சரண மீந்தருள் வாய் வடலரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

தூய நெWசினே ன்ன்று நின் கருணைச்
சுகம் விழிந்திலே னெனினும் பொய்யுலக
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே யுன்றன் மனக்குறிப் பறியேன்
ஈய வாய்த்த நற்றருணமீ தருள்க
எந்தை நின்மலரடி யல்லால்
தாய மொன்றிலேன் தனி வடலரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

சிரத்தையாதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்திலேன் அருட்செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பறியேன்
கரத்தை நேருளக் கடையனென் றனை நீ
கைவிடேலொரு கணமினி யாற்றேன்
தரத்தை யீந்தருள் வாய்வடலரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

பத்தியம் சிறிதுற்றிலேன் னுனொபாற்
பத்தியொன்றிலேன் பரம நின் கருணை
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன்
வள்ளலே யுன்றன் மனக்குறிப்பறியேன்
எத்தி யWசலை எனவருளாயேல்
ஏழையே னுயிரிழப்பன் உன்னாணை
சத்தியம் புகன்றேன் வடலரசே
சத்தியச்சபைத் தனிப்பெரும் பதியே.

கயவு செய்மதக் கரியெனச் செருக்கும்
கருத்தினேன் மனக்கரிசினாலடைந்த
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன்
வள்ளலே யுன்றன் மனக்குறிப்பறியேன்
உயவு வந்தருள் புரிந்திடாயெனிலென்
உயிர் தரித்திடா துன்னடி யாணை
தயவு செய்தருள் வாய்வடலரசே
சத்தியச்சபை தனிப்பெரும் பதியே.

அருட்பெரும்சோதி.

Advertisements