ஓங்கிய வண்டம் ஒளிபெற முச்சுடர்
அங்கிடை வகுத்த அருட்பெரும் சோதி

சிருட்டித் தலைவரை சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெரும் சோதி

காவல்செய் தலைவரை காவலண் டங்களை
ஆவகை அமைத்த அருட்பெரும் சோதி

அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த அருட்பெரும் சோதி

மறைத்திடு தலைவரை மற்று மண்டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெரும் சோதி ( 590)

தெலிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த வருட்பெரும் சோதி

விந்துவாம் சத்தியை விந்திண டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெரும் சோதி

ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காங்க வமைத்த வருட்பெரும் சோதி

சத்தத் தலைவரை சாற்று மண்டங்களை
அத்தகை வகுத்த வருட்பெரும் சோதி

நாதமாம் பிரமமும் நாதவண்டங்களும்
ஆதரம் வகுத்த அருட்பெரும் சோதி (600)

பகர்பரா சத்தியைப் பதியுமண்டங்களை
அகமற வகுத்த வருட்பெரும் சோதி

பரசிவ பதியை பர சிவாண்டங்களை
அரசுற வமைத்த அருட்பெரும் சோதி

எண்ணில்பல்சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெரும் சோதி

அளவில்பல் சத்தரை யளவிலண்டங்களை
அளவற வகுத்த வருட்பெரும் சோதி

உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெரும் சோதி. (610)

{11 .கடல்வகை .}

களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெரும் சோதி

கடலவை அனைத்தும் கரையின்றி நிலையுற
அடலென வமைத்த வருட்பெரும் சோதி

கடல்;களு மலைகளுங் கதிகளு நதிகளும்
அடலுற வகுத்த வருட்பெரும் சோதி

கடலிடைப் பல்வளம் கணித்ததிற் பல்லுயிர்
அடலுற வகுத்த அருட்பெரும் சோதி.

{ 12 .மலை வளம் }

மலையிடைப் பல்வலம் வகுத்ததிற் பல்லுயிர்
அலைவற வகுத்த வருட்பெரும் சோதி. ( 620 )

{ 13 .எண்வகை }

ஒன்றினி லொன்றே ஒன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த அருட்பெரும் சோதி

பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெரும் சோதி

நூற்றிடை யிலக நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெரும் சோதி .

கொடியி லனந்த கோடிபல்கோடி
ஆடுற வகுத்த வருட்பெரும் சோதி

{ 14 . வித்தும் விளைவும் }

வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெரு சோதி ( 630 )

விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவு செய்தமைத்த வருட்பெரும் சோதி

வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திறலமைத்த வருட்பெரும் சோதி

வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெரும் சோதி

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெரும் சோதி

விளைவினுள் விளைவும் விளவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெரும் சோதி ( 640)

முளையதன் முளையும் முளையுணுன் முளையும்
அளைதரவகுத்த வருட்பெரும் சோதி

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துறவமைத்த வருட்பெரும் சோதி

பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெரும் சோதி .

{15 . ஒற்றுமை வேற்றுமை இயல் .}

ஒற்றுமை வேற்றுமை யுரிமைகள னைத்தும்
அற்றென வகுத்த அருட்பெரும் சோதி

பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த வருட்பெரும் சோதி ( 650 )

உறவினி லுறவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த அருட்பெரும் சோதி

பகயினிற் பகையும் பகையினிலுறவும்
அகைவுற வகுத்த வருட்பெரும் சோதி

பாதியும் முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெரும் சோதி

துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
அணைவுற வகுத்த வருட்பெரும் சோதி

உருவதினுருவும் உருவினுள் ளுருவும்
அருளுறவமைத்த வருட்பெரும் சோதி ( 660 )

அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளியவமைத்த வருட்பெரும் சோதி

கரணமு மிடமும் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வர்ய்ட்பெர்ம் சோதி

உருவதி லருவும் மருவதி லுருவும்
அருளுறவமைத்த வருட்பெரும் சோதி

வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
அண்ணுற வமைத்த வருட்பெரும் சோதி

சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதற வகுத்த வருட்பெரும் சோதி ( 670 )

பெருமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அருநிலை வகுத்த வருட்பெரும் சோதி

திண்மயிற் றிண்மையும் திண்மையினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெரும் சோதி

மென்மையின் மென்மையும் மென்மையில் வண்மையும்
அண்மையிற்றமைத்த வருட்பெரும் சோதி

அடியினுள்ளடியும் மடியிடை யடியும்
அடியுற வமைத்த வருட்பெரும் சோதி

நடுவிணுண் நடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வகுத்த வருட்பெரும் சோதி ( 680 )

முடிவிணுண் முடிவும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெரும் சோதி

{ அகப்புறப் பூ }

அகப்பூ வகவுறுப்பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த அருட்பெரும் சோதி

புறப்பூ புறத்திற் புனையுறு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெரும் சோதி

அகப்புறப் பூவகப் புறப்பியற்றிட
அகத்திடை வகுத்த அருட்பெரும் சோதி

புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த அருட்பெரும் சோதி ( 690 )

{ 17 .நால்வகைத் தோற்றவிரி }

பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கு மருட் பெரும் சோதி

ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெரும் சோதி

அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெரும் சோதி

அறிவொரு வகைம்தலைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெரும் சோதி

வெவ்வேறியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வாறமைத்த வருட்பெரும் சோதி

சித்திர விசித்திர திருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெரும் சோதி .

{ 18 . ஆண் பெண் இயல் }

பெண்ணிணுள் ளாணுமாணிணுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெரும் சோதி

பெண்ணிணுண் மூன்றுமாணிணுள்ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெரும் சோதி

பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெரும் சோதி

பெண்டிறல் புறத்து ஆண்டிறலகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெரும் சோதி

பெண்ணியன் மனமும் மாணியலறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெரும் சோதி

தனித்தனி வடிவினும் தக்கவாண் பெண்ணியல்
அனைத்துற வகுத்த வருட்பெரும் சோதி.

{ 19 . காத்தருள் விரின் }

உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெரும் சோதி

ஓவுறா வெழுவகை யுயிர் முதலனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெரும் சோதி ( 720 )

பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
ஐபெற வகுத்த வருட்பெரும் சோதி

தாய்கருப்பையுணுட் டடங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தருளருட்பெரும் சோதி

முட்டைவாய்ப் பயிலு ழுழுவுயித்திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெர்ம் சோதி

நிலம் பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அலம்ப்ர்றக் காத்தருள் அருட்பெரும் சோதி

வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெரும் சோதி ( 730 )

உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை
அடலுறக் காத்தருள் அருட்பெரும் சோதி

சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தருள் அருட்பெரும் சோதி

உயிருறு முடலையும் முடலிறு முயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெரும் சோதி

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக்காத்தருள் அருட்பெரும் சோதி

முச்சுடராதியால் எச்சக உயிரையும்
அச்சறக் காத்தருள் அருட்பெரும் சோதி

வான்முகிற் சத்தியான் மழைபொழிவித்துயிர்
ஆன்றக்காத்தருள் அருட்பெரும் சோதி

இன்புறு சத்தியாலெழின் மழை பொழிவித்து
அன்புறக் காத்தருள் அருட்பெரும் சோதி

எண்ணியற் சத்தியாலெல்லா உலகினும்
அண்ணுயிர் காத்தருள் அருட்பெரும் சோதி

அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக்காத்தருள் அருட்பெரும் சோதி

தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்து
ஆவகை காத்தருள் அருட்பெரும் சோதி ( 750 )

அகப்புற வமுதளித்து ஐவராதிகளை
அகப்படக் காத்தருள் அருட்பெரும் சோதி

தருமக வமுதாற் சத்தி சத்தர்களை
அருளினிற் காக்கும் அருட்பெரும் சோதி

காலமும் தியதியும் காட்டியெவ்வுயிரையும்
ஆலுறக் காத்தருள் அருட்பெரும் சோதி

விச்சையை யிச்சையை விளைவித்துயிர்களை
அச்சறக் காத்தருள் அருட்பெரும் சோதி

போகமும் களிப்பும் பொருந்துவித்துயிர்களை
ஆகமுட்காக்கும் அருட்பெரும் சோதி ( 760 )

கலையறிவளித்துக் களிப்பினில் உயிரெலாம்
அலைவறக்காத்தருள் அருட்பெரும் சோதி

விடய நிகழ்ச்சியான் மிகுமுயிரனைத்தையும்
அடைவுறக் காத்தருள் அருட்பெரும் சோதி

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தருள் அருட்பெரும் சோதி

கரணேந் திரியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந்த் தளித்தருள் அருட்பெரும் சோதி

எத்தகை யெவ்வுயிர் எண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தருள் அருட்பெரும் சோதி ( 770 )

எப்படி யெவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கப்படி ய்ளித்தருளருட்பெரும் சோதி

ஏங்காங் துயிர்த்திரள் எங்கெங்கிருந்தன
ஆங்காங் களித்தருள் அருட்பெரும் சோதி

சொல்லுறு மகத்தத் தொல்லுயிர்க்கவ்வகை
அல்ல்லிற்காத்தருள் அருட்பெரும் சோதி

சுத்தமும் அசுத்தமும் தோயுர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெரும் சோதி

வாய்ந்திடும் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெரும் சோதி ( 780 )

எவையெலாம் எவையெலாம் மீண்டின வீண்டின
அவையெலாம் காத்தருள் அருட்பெரும் சோதி

{ 20 .அடக்கியருள் விரி }

அண்டத்துரிசையும் அகிலத்துரிசையும்
அண்டறவடக்கும் அருர்ட்பெரும் சோதி

பிண்டத்துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டறவடக்கும் அருட்பெரும் சோதி

உயிருரு மாயையின் உறுவிரிவனைத்தும்
அயிரறவடக்கும் அருட்பெரும் சோதி

உயிருறு மிருவினை யுறுவிரிவனைத்தும்
அயர்வற வடக்கும் அருட்பெரும் சோதி (790 )

காமப்புடைப்புயிர் கண்டொராவகை
ஆமறவடக்கும் அருட்பெரும் சோதி

பொங்குறு வெகுளிப் புடைப்புகளெல்லாம்
அங்கறவடக்கும் அருட்பெரும் சோதி

மதம்புரை மோகமும்மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற வடக்கும் அருட்பெரும் சோதி

வடுவுறும் அசுத்த வாதனையனைத்தும்
அடர்பற வடக்கும் அருட்பெரும் சோதி

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை
அத்தகை யடக்கும் அருட்பெரும் சோதி ( 800 )

நால்வயிற் றுரிசும் நண்ணுயிராதியில்
ஆலற வடக்கும் அருட்பெரும் சோதி

நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
ஆலறவடக்கும் அருட்பெரும் சோதி

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத்தடக்கும் அருட்பெரும் சோதி

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிட மடக்கும் அருட்பெரும் சோதி

தத்துவச்சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை யடக்கும் அருட்பெரும் சோதி ( 810 )

சுத்தமா நிலையிற் சூழுரு விரிவை
அத்தகை யடக்கும் அருட்பெரும் சோதி

{ 21 திரை விளக்கம் }

கரைவின் மாயைக் கரும்பெருந்திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெரும் சோதி

பேருறு நீலப்பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெரும் சோதி

பச்சைத்திரையால் பரவெளியதனை
அச்சுற மறைக்கும் அருட்பெரும் சோதி

செம்மைத்திரையால் சித்துறு வெளியினை
அன்மையின் மறைக்கும் அருட்பெரும் சோதி ( 820 )

பொன்மைத்திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெரும் சோதி

வெண்மைத்திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெரும் சோதி

கலப்புத்திரையாற் கருதனுபவங்களை
அலப்புபுற மறைக்கும் அருட்பெரும் சோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெரும் சோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கும் அருட்பெரும் சோதி ( 830 )

திரைமறைப்பெல்லாந் தீர்த்தங்காங்கே
அரசுறக்காட்டும் அருட்பெரும் சோதி

{ 22 . அருளில் நெருட்டல் }

Advertisements