{ 6 . வெளி இயல் விரி }

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற வமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுறவமைத்த அருட்பெரும் சோதி

வெளியினில் ஒலிநிறைவியநிலை அனைத்தும்
அலியுறவமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த அருட்பெரும் சோதி (500)

வெளியிடைமுடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெரும் சோதி

வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
அளியுற வகுத்த அருட்பெரும் சோதி

வெளியிடை பலவே வகுத்த்திற் பற்பல
அளிதர வமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடை உய்ரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த அருட்பெரும் சோதி
வெளியினனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த அருட்பெரும் சோதி

{ 7 .அகப்புற விரி }

புறநடு வொடுகடை புணர்பித் தொருமுதல்
அறமுற வகுத்த அருட்பெரும் சோதி

புறந்தலை நடுவொடு புணர்பித் தொருகடை
அறம்பெற வகுத்த அருட்பெரும் சோதி

அகப்புற நடுக்கடை யணைவாற்ப் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெரும் சோதி

அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த அருட்பெரும் சோதி (520)

கருதக நடுவொடு தலையணைத் தகமுதல்
அருளுற வமைத்த அருட்பெரும் சோதி

தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
அணியுற வகுத்த அருட்பெரும் சோதி

அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த அருட்பெரும் சோதி

அகநடு புறத்தலை யனைந்தகப் புறக்கடை
அகலிடை வளர்த்த அருட்பெரும் சோதி

அகநடுவதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெரும் சோதி (530)

அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட வமைத்தாருட்பெரும் சோதி

புறநடு வதனால் புறப்புற நடுவை
அகமுற வகுத்த அருட்பெரும் சோதி

புகலருமகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெரும் சோதி

புறப்புறக் கடைமுதற் புணற்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெரும் சோதி

புறத்தியல் கடை முதற் புணர்பாற் புறப்புறம்
அறக்கணம் வகுத்த அருட்பெரும் சோதி ( 540)

அகப்புறக் கடைமுதலணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெரும் சோதி

அகக்கடை முதற்புணர்ப்பதனால்அக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெரும் சோதி

( 8 .ஐம்பூதக் கலப்பின் விரி )

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெரும் சோதி

நெருப்பிடை நீரும் நிரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெரும் சோதி

நீர்மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருட்பெரும் சோதி (550)

புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த அருட்பெரும் சோதி

பகுதி வான் வெளியிற் படர்ந்த மாபூத
வகல் வெளி வகுத்த அருட்பெரும் சோதி

{ 9 .வெளிவகை விரி }

உயிர்வெளி யிடையே உரைக்கரும் புகுதி
அயவெளி வகுத்த அருட்பெரும் சோதி

உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த அருட்பெரும் சோதி

கலவெளியதனை கலப்பரு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெரும் சோதி (560)

சுத்தநல்வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெரும் சோதி

பரவெளி யதனை பரம்பர வெளியில்
அரசுர வகுத்த அருட்பெரும் சோதி

பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெரும் சோதி

பராபர வெளியை பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த அருட்பெரும் சோதி

பெருவெளி யதனை பெரும்சுக வெளியில்
அருளுற வகுத்த அருட்பெரும் சோதி (570)

குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெரும் சோதி

மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அன்புற வகுத்த அருட்பெரும் சோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெர்ம் சோதி

துரிசறு கருவிகள் சுத்த நல்வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெரும் சோதி

இவ்வெளி யெல்லாம் இலங்க வண்டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெரும் சோதி (580)

Advertisements