அருட்பெரும் சோதி அகவல் தொடர்ச்சி 451 . . . .

தீயிடை உயிர்பல த்கழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெரும் சோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெரும் சோதி

தீயினிற் பக்குவம் சேர்குணம் இயற்குணம்
ஆய்பல வகுத்த அருட்பெரும் சோதி

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த அருட்பெரும் சோதி

தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப்புரிந்த அருட்பெரும் சோதி (460)

{ 5.காற்றியல்விரி }

காற்றிடை யசையியல் கலையியல் உயிரியல்
ஆற்றலின் அமைத்த அருட்பெரும் சோதி

காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த அருட்பெரும் சோதி

காற்றினி லூறியல் காட்டுறு பலபல
ஆற்றலினமைத்த அருட்பெரும் சோதி

காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி

காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி (470)

காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெரும்சோதி

காற்றினிற் குணம்பல கணம்பலா வ்ணம்பல
ஆற்றலி னமைத்த அருட்பெரும் சோதி

காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த அருட்பெரும் சோதி

காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலினமைத்த அருட்பெரும் சோதி (480)

காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருட்பெரும் சோதி

காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த அருட்பெரும் சோதி

காற்றிடைச் செயலெலாம் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி

காற்றினிற் பக்குவ கதியெலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருட்பெரும் சோதி

காற்றினிற் காலம் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி (490)

காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெரும் சோதி

{ 6 . வெளி இயல் விரி }

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற வமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுறவமைத்த அருட்பெரும் சோதி

வெளியினில் ஒலிநிறைவியநிலை அனைத்தும்
அலியுறவமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த அருட்பெரும் சோதி (500)

வெளியிடைமுடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெரும் சோதி

வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
அளியுற வகுத்த அருட்பெரும் சோதி

வெளியிடை பலவே வகுத்த்திற் பற்பல
அளிதர வமைத்த அருட்பெரும் சோதி

வெளியிடை உய்ரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த அருட்பெரும் சோதி
வெளியினனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த அருட்பெரும் சோதி

{ 7 .அகப்புற விரி }

Advertisements