சொக்கநாத வெண்பா முதற்பகுதி .

ஆடரவம்சூழ் அம்மானே! அன்பருடன்
கூடவிளையாடி வரும் கோமானே! _ நீடுபுகழ்
மென்மேலு மென்றனுக்கு மேவியிடப் பொல்லாத
என்மேல் வினை கெடுப்பாயே .

புண்கட்டுத் தோலைப் புதுக்கி மயக்கமுறக்
கண்கட்டு வித்தைபோற் காட்டுவாய் _ பண்கட்டுப்
பூணுவேன் றன்னைஉஇன்பப் பூரணத்திற் பூணவருள்
தானுவே! சொக்க நாதா !

ஏடாரும் நாரியரை ஐயோ! யமன் பிடிக்கும்
மாடாவதியென்று பாராமல் _ கேடாரப்
பூண்டமா பாதனென்று போடாதெனையருளில்
ஆண்டவா! சொக்கநாதா!

காக்கைநரி Wஆளி கழுகு பருந்துக்கிறையாம்
ஆக்கையினை யானென்று அலையாமல் _ வாக்கு மனம்
எட்டாத வீட்டிலெனைக்காட்டு துட்டருளம்
தட்டாத சொக்கநாதா !

பWசமா பாதகனை யாண்ட புகழ் பார்மீதிற்
கொWசமா வீறுபுகழ் கூறுமே _ வWசமே
பூண்டளவில் பாதகம் செய் பொல்லாத நாயேனை
ஆண்டளவிற் சொக்க நாதா!

வறிWஅர்தமை ஒக்கவைக்கும் மன்னர்போல
அறிWஅர் தமையாள்வதன்றி _ பொறிபுலனால்
வெம்புவேன் றன்னை விடுத்தாள்வதே பாரம்
சம்புவே சொக்கநாதா!

என்னால் உனையடைய வல்லேன் எனில் இடரில்
இந்நாள் அளவும் இருப்பேனோ? _ பன்னாகம்
பூண்டவா! வேணிப்புனிதா! மதுரை நகர்
ஆண்டவா சொக்கநாதா!

எல்லாமும் வல்ல சித்தர் என்றக்கால் என்னுடைய
பொல்லாக் கருத்தகற்றப் போகாதோ! _ அல்லாடும்
பொங்கரா வேணிப்புனிதா! மதுரைநகர்ச்
சங்கரா! சொக்கநாதா!

பேசானுபூதி பிறக்க என துளத்தில்
ஆசா பசாசை அகற்றுவாய் _ தேசாரும்
சிற்பரானந்த திருவாலவாயுறையும்
தற்பரா! சொக்கநாதா!

இறந்தும் பிறந்தும் இளைத்தேன்: இனியான்
மறந்தும் பிறவா வரம் தா _ சிறந்த புகழ்
ஆலவாயாமுடிக்கு நாட்டு சூளாமணியாம்
ஆலவாய் சொக்கநாதா!

உலக வெறுப்பும் உடல் வெறுப்பும் உள்ளத்
திலகு மலவெறுப்பும் எல்லாம் _ அலகிறந்த
தந்நாத இன்பக்க நாட்டின் விருப்பமுறத்
தந்தாள்வை சொக்கநாதா! (11)

எப்போது மும்மலம் விட்டேறுவேன்? பூரணமாய்
எப்போதுன் இன்பகத்து எய்துவேன் _ எப்போதும்
நித்தியா! சுத்தா! நிராமயா! சொற்றவறாச்
சத்தியா! சொக்கநாதா!

காயமோ காலன் கருத்தோ மகா காலன்
Wஆயமோ சற்றும் நடப்பதில்லை _ பேயனேன்
மாளுவனோ தென்மதுரை மாமணியே! என்னை உகந்து
ஆளுவையோ சொக்கநாதா!

எரி சுடுவதல்லால் இரும்பு சுடுமோ?
அரியயற்கும் வாசவற்கும் யார்க்கும் _ பெரியவர்க்கும்
பூணுமே தந்தொழிலின் பொன்னருளாற் றென்மதுரைத்
தானுவே சொக்கநாதா!

ஆரிடத்தில் வந்தும் அடியேன் உளத்திருந்தும்
ஓரிடத்தில் உற்பவித்தும் உள்ளபடி _ பாரிடத்தில்
நாயேன் உளமகிழ நன்றா வுணர்த்திடுவாய்
தாயே நீ சொக்கநாதா!

நித்தம் எழுந்தருளி நின்மலனே! என்றனக்குப்
புத்தி மிகமிகவும் போதித்துச் சித்தமயல்
போக்குவாய் இன்பசுக பூரணத்தின் இரண்டறவே
ஆக்குவாய் சொக்கநாதா!

மறையாகம விதியும் வந்த உடறன்னின்
நிறையூழ் விதிமுன்னா னின்றான் _ மறை விதிக்கே
ஏற்கவே செய்வேனிசைத்தால் ஊழ் வேறதனோ
யார்க்காவேன் சொக்கநாதா!

மலம் விதைக்கும் முன்பதத்தினால் ஆளவைப்பதல்லால்
மலம் விளைக்கும் சோறருந்த வைத்தாய் _ சலம் விளைக்கும்
சென்னியா! மாமதுரைச் செல்வா! எல்லாம் வல்ல
தன்னியா! சொக்கநாதா!

ஆர்வந்தென் ஆர்போயென் ஐயாவுன் ஆனந்தச்
சீருளத்தே யென்றும் செறிதிலதேற் _ காரிருண்ட
கண்டனே! ஓர் புருடன் காதல் கொண்டான் போன்மதுரை
அண்டனே! சொக்கநாதா!

கான்ற சோறாயுலகம் காணவில்லை இன்பவெள்லத்
தூன்ற அடியேனுறங்கவில்லை _ ஏன்ற
இருள் சகல நீங்கவில்லை ஏழயேற்குன்றன்
அருளுறுமோ சொக்கநாதா!

(இதன் தொடர்ச்சியை முன்னரே பதித்து விட்டோம்,காண்க WordPress,com
/puthuvaignanam Dated. 8.9.2009. . . . )

சொக்கநாத வெண்பா முதற்பகுதி .

ஆடரவம்சூழ் அம்மானே! அன்பருடன்
கூடவிளையாடி வரும் கோமானே! _ நீடுபுகழ்
மென்மேலு மென்றனுக்கு மேவியிடப் பொல்லாத
என்மேல் வினை கெடுப்பாயே .

புண்கட்டுத் தோலைப் புதுக்கி மயக்கமுறக்
கண்கட்டு வித்தைபோற் காட்டுவாய் _ பண்கட்டுப்
பூணுவேன் றன்னைஉஇன்பப் பூரணத்திற் பூணவருள்
தானுவே! சொக்க நாதா !

ஏடாரும் நாரியரை ஐயோ! யமன் பிடிக்கும்
மாடாவதியென்று பாராமல் _ கேடாரப்
பூண்டமா பாதனென்று போடாதெனையருளில்
ஆண்டவா! சொக்கநாதா!

காக்கைநரி Wஆளி கழுகு பருந்துக்கிறையாம்
ஆக்கையினை யானென்று அலையாமல் _ வாக்கு மனம்
எட்டாத வீட்டிலெனைக்காட்டு துட்டருளம்
தட்டாத சொக்கநாதா !

பWசமா பாதகனை யாண்ட புகழ் பார்மீதிற்
கொWசமா வீறுபுகழ் கூறுமே _ வWசமே
பூண்டளவில் பாதகம் செய் பொல்லாத நாயேனை
ஆண்டளவிற் சொக்க நாதா!

வறிWஅர்தமை ஒக்கவைக்கும் மன்னர்போல
அறிWஅர் தமையாள்வதன்றி _ பொறிபுலனால்
வெம்புவேன் றன்னை விடுத்தாள்வதே பாரம்
சம்புவே சொக்கநாதா!

என்னால் உனையடைய வல்லேன் எனில் இடரில்
இந்நாள் அளவும் இருப்பேனோ? _ பன்னாகம்
பூண்டவா! வேணிப்புனிதா! மதுரை நகர்
ஆண்டவா சொக்கநாதா!

எல்லாமும் வல்ல சித்தர் என்றக்கால் என்னுடைய
பொல்லாக் கருத்தகற்றப் போகாதோ! _ அல்லாடும்
பொங்கரா வேணிப்புனிதா! மதுரைநகர்ச்
சங்கரா! சொக்கநாதா!

பேசானுபூதி பிறக்க என துளத்தில்
ஆசா பசாசை அகற்றுவாய் _ தேசாரும்
சிற்பரானந்த திருவாலவாயுறையும்
தற்பரா! சொக்கநாதா!

இறந்தும் பிறந்தும் இளைத்தேன்: இனியான்
மறந்தும் பிறவா வரம் தா _ சிறந்த புகழ்
ஆலவாயாமுடிக்கு நாட்டு சூளாமணியாம்
ஆலவாய் சொக்கநாதா!

உலக வெறுப்பும் உடல் வெறுப்பும் உள்ளத்
திலகு மலவெறுப்பும் எல்லாம் _ அலகிறந்த
தந்நாத இன்பக்க நாட்டின் விருப்பமுறத்
தந்தாள்வை சொக்கநாதா! (11)

எப்போது மும்மலம் விட்டேறுவேன்? பூரணமாய்
எப்போதுன் இன்பகத்து எய்துவேன் _ எப்போதும்
நித்தியா! சுத்தா! நிராமயா! சொற்றவறாச்
சத்தியா! சொக்கநாதா!

காயமோ காலன் கருத்தோ மகா காலன்
Wஆயமோ சற்றும் நடப்பதில்லை _ பேயனேன்
மாளுவனோ தென்மதுரை மாமணியே! என்னை உகந்து
ஆளுவையோ சொக்கநாதா!

எரி சுடுவதல்லால் இரும்பு சுடுமோ?
அரியயற்கும் வாசவற்கும் யார்க்கும் _ பெரியவர்க்கும்
பூணுமே தந்தொழிலின் பொன்னருளாற் றென்மதுரைத்
தானுவே சொக்கநாதா!

ஆரிடத்தில் வந்தும் அடியேன் உளத்திருந்தும்
ஓரிடத்தில் உற்பவித்தும் உள்ளபடி _ பாரிடத்தில்
நாயேன் உளமகிழ நன்றா வுணர்த்திடுவாய்
தாயே நீ சொக்கநாதா!

நித்தம் எழுந்தருளி நின்மலனே! என்றனக்குப்
புத்தி மிகமிகவும் போதித்துச் சித்தமயல்
போக்குவாய் இன்பசுக பூரணத்தின் இரண்டறவே
ஆக்குவாய் சொக்கநாதா!

மறையாகம விதியும் வந்த உடறன்னின்
நிறையூழ் விதிமுன்னா னின்றான் _ மறை விதிக்கே
ஏற்கவே செய்வேனிசைத்தால் ஊழ் வேறதனோ
யார்க்காவேன் சொக்கநாதா!

மலம் விதைக்கும் முன்பதத்தினால் ஆளவைப்பதல்லால்
மலம் விளைக்கும் சோறருந்த வைத்தாய் _ சலம் விளைக்கும்
சென்னியா! மாமதுரைச் செல்வா! எல்லாம் வல்ல
தன்னியா! சொக்கநாதா!

ஆர்வந்தென் ஆர்போயென் ஐயாவுன் ஆனந்தச்
சீருளத்தே யென்றும் செறிதிலதேற் _ காரிருண்ட
கண்டனே! ஓர் புருடன் காதல் கொண்டான் போன்மதுரை
அண்டனே! சொக்கநாதா!

கான்ற சோறாயுலகம் காணவில்லை இன்பவெள்லத்
தூன்ற அடியேனுறங்கவில்லை _ ஏன்ற
இருள் சகல நீங்கவில்லை ஏழயேற்குன்றன்
அருளுறுமோ சொக்கநாதா!

(இதன் தொடர்ச்சியை முன்னரே பதித்து விட்டோம்,காண்க WordPress,com
/puthuvaignanam Dated. 8.9.2009. . . . )

Advertisements