அருட்பெரும் சோதி அகவல் தொடர்ச்சி 3
____________________________

1,ஐம்பூத இயல் வகை .
___________________

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெர்ம் சோதி

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெரும் சோதி

காற்றினுள் காற்றாய் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும் சோதி

காற்றுறு காற்றாய் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெரும் சோதி

அனலினு அனலாய் அதனடு அனலாய்
அனலுற விளங்கும் அருட்பெரும் சோதி

அனலுறும் அனலாய் அனனிலை அனலாய்
அனலுற வயங்கும் அருட்பெரும் சோதி

புனலினுட் புனலாய் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கும் அருட்பெரும் சோதி (350)

புனலுறு புனலாய் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகும் அருட்பெரும் சோதி

புவியுனுட் புவியாய் புவிநடுப் புவியாய்
அவயதா வயங்கும் அருட்பெரும் சோதி

புவியுறு புவியாய் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரித்த அருட்பெரும் சோதி

விண்னிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த அருட்பெரும் சோதி

வளிநிலை சத்தியின் வளர்நிலை யலவி
அளியுற வமைத்த அருட்பெரும் சோதி (360)

நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த அருட்பெரும் சோதி

நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த அருட்பெரும் சோதி

புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி
அவையுற வகுத்த அருட்பெரும் சோதி

2.மண்ணியல் விரி .

மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த அருட்பெரும் சோதி

மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை (370)
யண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி

மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐய்ந்திறம்
அண்ணுற வமைத்த அருட்பெரும் சோதி

மண்ணினி நாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புகுந்த அருட்பெரும் சோதி

மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப்புரிந்த அருட்பெரும் சோதி

மண்ணினில் ஐய்ந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி

மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி (380)

மண்ணிலை ஐந்தைந்து வகையும் கலந்து கொண்டு
அண்ணுறப் புரிந்த அருட்பெரும் சோதி

மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி

மண்ணுறு சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி

மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெரும் சோதி

மண்கணச்சத்திகள் வகை பலபலவும்
அண்கொள வமைத்த அருட்பெரும் சோதி (390)

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த அருட்பெரும் சோதி

மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவாய்
அண்கொள வமைத்த அருட்பெரும் சோதி

மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வேறு
அண்ணுறப் புரிந்த அருட்பெரும் சோதி

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல் பல
அண்ணுற வமைத்த அருட்பெரும் சோதி

மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்னுறவமைத்த அருட்பெரும் சோதி (400)

மண்னியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற அமைத்த அருட்பெரும் சோதி

3 . நீரியல் விரி .

நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த அருட்பெரும் சோதி

நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த அருட்பெரும் சோதி

நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த அருட்பெரும் சோதி

நீரிடைச் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
ஆருறப் புரிந்த அருட்பெரும் சோதி

நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருட்பெரும் சோதி

நீரிடை நான்கியலின் உலவுவித்து அதிற்பல
ஆர்தர வகுத்த அருட்பெரும் சோதி

நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப்புரிந்த அருட்பெரும் சோதி

நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த அருட்பெரும் சோதி

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த அருட்பெரும் சோதி (420)

நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப்புரிந்த அருட்பெரும் சோதி

நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த அருட்பெரும் சோதி

நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொளவமைத்த அருட்பெரும் சோதி

நீருறு பக்குவ நிறையுறு பயன்பல
ஆருற வமைத்த அருட்பெரும் சோதி

நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெரும் சோதி (430)

4 .தீயியல் விரி .

தீயினில் சூட்டியல் சேர்பரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெரும் சோதி

தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த அருட்பெரும் சோதி

தீயிடைப் பூவெலாம் திகழுறுதிறமெலாம்
ஆயுற வகுத்த அருட்பெரும் சோதி

தீயிடை ஒளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த அருட்பெரும் சோதி

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆயுறவமைத்த அருட்பெரும் சோதி (440)

தீயிடை மூவியல் செறிவித்து அதிற்பல
ஆய்வகை அமைத்த அருட்பெரும் சோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுறவமைத்த அருட்பெரும் சோதி

தீயிடை பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுறவமைத்த அருட்பெரும் சோதி

தீயிடைச் சித்துகள் செப்புறுமனைத்தும்
ஆயுற வமைத்த அருட்பெரும் சோதி

தீயிடைச்சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெரும் சோதி (450)

Advertisements