அருட்பெரும் சோதி அகவல்.
_________________________

அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி

எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான்றனையே ஏத்து

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றென்று வருமோ அறியேன் எம்கோவே
துன்று மல வெம்மாயை அற்றுவெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.

திருச்சிற்றம்பலம்.

அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி
அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி

அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெரும் சோதி

ஆகம முடிமேல் ஆரன முடிமேல்
ஆக நின்றோங்கிய அருட்பெரும் சோதி

இகநிலைப் பொருளாய் பரநிலைப்பொருளாய்
அகமறப்பொருந்திய அருட்பெரும் சோதி

ஈனமின்றிக பரத்திரண்டின் மேற்பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெரும் சோதி

உரை மனங்கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசு செய்தோங்கும் அருட்பெரும் சோதி

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரு ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெரும் சோதி

எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருட்பெரும் சோதி

ஏறா நிலைமிசை ஏற்றியென்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெரும் சோதி

ஐயமும் திரிபும் அறுத்து எனதுடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெரும் சோதி ( 20)

ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெரும் சோதி

ஓதாதுணர்த்திட ஒளியளித்தெனக்கே
ஆதாரமாகிய அருட்பெரும் சோதி

ஒளவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்த பேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெரும் சோதி

திருநிலைத் தனிவெளி சிவஒளி எனும் ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெர்ம் சோதி

சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகை சிற்சபை அருட்பெரும் சொதி ( 30 )

சுத்தமெய்WWஆன சுகோதய வெளியெனும்
அத்து விதச்சபை அருட்பெரும் சோதி

தூய கலாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற்சபையில் அருட்பெரும் சோதி

Wஆன யோகாந்த நடஹ்ஹிரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை அருட்பெரும் சோதி

விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமல சிற்சபையில் அருட்பெரும் சோதி

பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெரும் சோதி (40)

சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை அருட்பெரும் சோதி

சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெரும் சோதி

தகரமெய் Wஆனப் தனிப் பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி அருட்பெரும் சோதி

தத்துவா தீதத் தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு அம்பலத்து அருட்பெரும் சோதி

சச்சிதா னந்தத் தனிப்பர வெளியேனும்
அச்சியல் அம்பத்து அருட்பெரும் சோதி (50)

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகாயத்து ஒளிர் அருட்பெரும் சோதி

காரண காரியம் காட்டிடு வெளியெனும்
ஆரணச்சிற்சபை அருட்பெரும் சோதி

ஏகம் அனேகம் எனப்பகர் வெளியெனும்
ஆகம சிற்சபை அருட்பெரும் சோதி

வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
ஆதாரமாம் சபை அருட்பெர்ம் சோதி

என்றாதியசுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெரும் சோதி (60)

சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமயும் திருச்சபை அருட்பெரும் சோதி

முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுடராம் சபை அளித்திடும் சோதி

துரியமும் கடந்த சுக பூரணந்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெரும் சோதி

எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகை சிற்சபை அருட்பெரும் சோதி

இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம்
அயர்ப்பிலா சிற்சபை அருட்பெரும் சோதி (70)

சாக்கிராதீதத் தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெரும் சோதி

சுட்டுதற்கரிதாம் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை அருட்பெரும் சோதி

நவந்தரும் நிலைகளும் நன்னுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெரும் சோதி

உபய பக்கங்களும் ஒன்றெனக்காட்டிய
அபய சிற்சபையில் அருட்பெரும் சோதி

சேகரமாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகமாம் சபை அருட்பெரும் சோதி (80)

மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிசபையில் அருட்பெரும் சோதி

ஓதிநின்று உணர்ந்து உணர்தற்கரிதாம்
ஆதிசிற் சபையில் அருட்பெரும் சோதி

வாரமும் அழியா வரமும் தரும் திரு
வாரமுதாம் சபை யருட்பெரும் சோதி.
இழியாப் பெருநலம் எல்லாமளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெரும் சோதி

கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெரும் சோதி (90)

எனைத்தும் துன்பிலா இயலளித்து எண்னிய
அனைத்தும் தரும்சபை அருட்பெரும் சோதி

பாணிப்பிலதாய் பரவினோர்க்கு அருள்புரி
ஆணிப்பொன் அம்பலத்து அருட்பெரும் சோதி

எம்பலமெனத் தொழுது ஏத்தினார்க்கருள்புரி
அம்பலத்தாடல் செய் அருட்பெரும் சோதி

தம்பர Wஆன சிதம்பர மெனுமோர்
அம்பரத்தோங்கிய அருட்பெரும் சோதி

எச்சபை பொதுவென இயம்பினர் அறிWஅர்கள்
அச்சபை இடம் கொளும் அருட்பெரும் சோதி (100)

வாடுதல் நீக்கிய மணிமன்றிடையே
ஆடுதல் வல்ல அருட்பெரும் சோதி

நாடகத் திச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
ஆடகப் பொதுவொளிர் அருட்பெரும் சோதி

கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை அருட்பெரும் சோதி

ஈன்ற நற்றாயினும் இனிய பெரும் தயவாம்
ஆன்ற சிற்சபையில் அருட்பெரும் சோதி

இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புறத்தரு சபை அருட்பெரும் சோதி (110)

Advertisements