சொக்கநாத வெண்பா . 2 .

கான்ற சோறாயுலகம் காணவில்லை இன்பவெள்ளத்
தூன்ற அடியேன் உறங்கவில்லை _ ஏன்ற
இருள் சகல நீங்கவில்லை ஏழையேற்கு உன்றன்
அருள் உறுமோ சொக்கநாதா! (20)

நீயே பரசிவன் ஆனக்கால் நின்மலனே!
நாயேன் உளமகிழ நன்றாகப் _பேயேன்
கருத்தடங்க நின் கருணை காட்டி இன்ப வெள்ளம்
அருந்திடுவை சொக்கநாதா!

விதிமார்க்கம் எப்பொழுதுமே வறியன் ஊழின்
விதிமார்க்கமல்லாது மெய்யாம் _ கதிமார்க்கம்
காட்டுவாய் நாயேன் கரையேற எவ்வுலகும்
ஆட்டுவாய் சொக்கநாதா!

அருவருப்பே மெத்தியிடும் ஆகத்தைச் சற்றும்
அருவருக்கத் தோற்றுதில்லை ஐயோ! _ அருவருக்கத்
தோற்றியிடாதென்னை வினை துய்ப்பித்து அறுப்பதற்கோ
சாற்றிவிடாய் சொக்கநாதா!

தவமோ சிறிதறியேன் தாரணிமேற் செய்யும்
அவமோ அளவில்லை ஆனால் _ சிவமோ
பெறுமாறு என் கூடற்பிரானே! முப்பாசம்
அறுமாறு என் சொக்கநாதா!

அனைத்துயிக்கும் பாசம் அறுத்து முத்தி கூட்ட
மனத்துயரம் செய்தல் மருந்தோ? _ மனத்துயரம்
செய்யாமல் தீர் மருந்து சித்தா! அறிந்திலையோ
ஐய்யாவென சொக்கநாதா!

உணர்த்தில் உணர்வேன் உணர்த்தாயேல் நாயேன்
கணத்தும் உணரும் வகை காணேன்! _உணர்த்தியென்னுட்
பூண்ட மலமாயை கன்மம் போக்கிச் சிவானந்தத்
தாண்டருள்வை சொக்கநாதா! ( 26)

பிரிந்தேன் மலத்துனது பேரருளினாலே
அறிந்தேன் உனை நன்றாய் ஐயா! _ செறிந்த இன்பப்
பூரணா!செங்கமலப் பொற்பாதா! கூடலில் வாழ்
ஆரணா சொக்கநாதா!

கெடுங்காலம் வந்தால் கெடுப்பை கதியில்
விடுங்காலம் வந்தால் விடுவை _ கொடுந்தவங்கள்
பண்ணிடினும் பாவம் பயிற்றிடினும் ஆரேனும்
அண்ணலே சொக்கநாதா !

என்ன வினை நாயேற்கு இருக்கிறதோ இக்காயத்து
என்ன வினை நின் தாள் இயற்றுமோ_ என்ன வினை
வந்திடுமோ என்றறியேன்! வந்தாலும் நின்னருளே
தந்திடுவாய் சொக்கநாதா!

ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் கன்மத்தும்
மாறாதெந்நாளும் மயங்காமற் _பேறாக
நித்தனே! நின்மலனே! நின் பதத்தில் ஆள் மதுரை
அத்தனே சொக்கநாதா!

அடியேன் உன்னை வேண்ட அப்படியே என்றும்
கொடியேன் கருத்திசையைக் கூறி _ அடியேனை
மீண்டும் பிறவாதுன் விரை மலர்த்தாள் சூட்டியெனை
ஆண்டவனே சொக்கநாதா!

ஆசான் உளத்திருந்தும் ஆன்மா உள்ளிருந்தும்
ஆசார் மலத்தை அறுத்தருளி _ நேசா
ஒளித்திருந்த இன்பவெள்ளம் ஒன்ற உயிர்க்கு என்றும்
அளிப்பவன் நீ சொக்கநாதா!ஸ்

ஆற்றையணி வேணி அமலனே! மெய்யதனில்
நீற்றைப் புணையும் நிமலனே! _ கூற்றைக்
குமைத்தவனே! என் சிரத்துன்கோ கனகத்தாளை
அமைத்தவனே! சொக்கநாதா! (33)

கால வசமோ கடையேன் வினை வசமோ
Wஆல வசமோ அருளை நாடியே _ கோலமறச்
சிற்பரானந்த வெள்ளம் சேர்ந்தறிந்தும் சேர்கிலேன்
தற்பரா! சொக்கநாதா!

நீநாட் பிறந்திறந்து நின்ற துயர் நீயறிவை
வீணாட்கழிந்து விடாமலே _ பூணவருள்
நண்ணரிய பேரின்ப நாடி அதுவாக
அண்ணலே சொக்கநாதா!

ஆறாறு தத்துவத்தும் ஆணவத்தும் சாராமல்
மாறாத பேரின்ப வாரிதியே _ பேறாகச்
சார்ந்திருக்க வல்ல சதுரர் உள்லத்ததுவாய்
ஆர்ந்திருக்கும் சொக்கநாதா!

காடோ வனமோ கனகிரியோ காசினியோ
நாடோ சகல கலை Wஆனமோ_ வாடி
ஒடுங்குவதோ மெய்வீடுயிர்க்களித்தல் போதம்
அடங்குவதோ சொக்கநாதா!

எக்காலம் இக்காயம் இற்றிடுமோ! என்வினைகள்
எக்காலம் மும்மலங்கள்இற்றிடுமோ! _ எக்காலம்
ஆனந்த சாகரத்தில் ஆடிடுமோ என்னுளந்தான்
ஆனந்தா சொக்கநாதா!

எக்காலம் மெய்க்கே இரையிடுதல் இற்றிடுமோ!
எக்காலம் இக்கரணம் இற்றிடுமோ! _ எக்காலம்
பேசா அனுபூதி பிறந்திடுமோ என்னுளத்தில்
ஆசானே சொக்கநாதா! (40)

வாக்கிலுரை பொய்யே, மனம் நினைப்பதுவும் கவடே,
ஆக்கை தினம் செய்வது அகிர்த்தியமே_ நோக்கில்
திரி விதமும் இப்படி நீ செய்வித்தால் முத்தி
தருவிதமென் சொக்கநாதா!

இக்காலதில் இன்னவினை என்ற அமைப்பை,அப்படியே
அக்காலத்து அவ்வூழ் அறுத்திடுவை _ இக்காலம்
தப்புவார் உண்டோ தமியேற்குத் தப்பரிதே
அப்பனே சொக்கநாதா!

மோகாபிமானம் இன்னும் முற்றும் மறக்கவில்லை
தேகாபிமானம் சிதையவில்லை _ ஓகோ!
உனையடைந்தும் பாசம் ஒழியவில்லை கூடல்
தனையடைந்த சொக்கநாதா!

பத்தி மெத்தச் சித்தம் பதியவில்லை, அட்டமா
சித்தி அவாவெறுக்கச் செய்யவில்லை _ முத்தியுளம்
கூடவில்லை எந்நாளும் கூடலிலே மாறி நடம்
ஆடவல்ல சொக்கநாதா!

என்னவனை பாச அரண் இன்னமும் நீ கொள்ளவில்லை
அன்னையனை நீ பதனம் ஆனாலும் _ முன்னை மலம்
ஓடவே எவ்வுயிர்க்கும் ஓட்டும் அருட்சேனை
சாடியிடும் சொக்கநாதா!

சேகரத்தின் உச்சியின் மேல் செந்தேனுக்கு இச்சித்தே
போகவசமாகுமோ போகாதார்_ தாகம்
மிகவறவே உள்ளத்தில் வேண்டில் உன்றாட் செந்தேன்
அகமுறுமோ சொக்கநாதா!

அடியார் பரிபாகமெல்லாம் அறிந்து
படிகீழ்ப் பதமேற்பதத்தில்-கொடுபோய்
இருத்திடுவை சேர இனிமேலாம் போகம்
அருத்திடுவை சொக்கநாதா!

வாழ் ஐம்மலத்தால் வருந்தி மிகவுடைந்த
ஏழையேனுக்கு ஐயோ இரங்குவாய் _ கோழையனாய்
போனேன் புலப்பகையாற் பொன்னடியை நின்னருளால்
தானே தா சொக்கநாதா!

எக்காலந் தாகங்கள் இற்றிடுமோ! காயங்கள்
எக்காலம் ஆசை சினம் இற்றிடுமோ_ எக்காலம்
நல்லார் குணம் வருமோ நாதா எல்லாமுமாய்
அல்லானே! சொக்கநாதா!

உள்ளம் உனையல்லால் ஒன்றுள்ளவில்லை, நின்றொளிக்குங்
கள்ளமற நீயும் கருதவில்லை _ எள்ளளவும்
நற்றவமோ செய்யவில்லை, நாயேன் உனையடைதற்
கற்றதென்ன சொக்கநாதா! (50)

ஆர்க்குக் கிடைக்கும் அடியேன் முன் வந்து மறைக்
கேற்கக் கருத்துக்கிசையவே _ யார்க்குந்
தெரிவறியா வேதசிகை சித்தாவுரைத்தாய்
அரியறியாச் சொக்கநாதா!

எவ்விதையை மாக்கள் பயிரிட்டார்கள் இட்டவரே
அவ்விதையின் போகம் அருந்துதல் போல் _செவ்விதாய்
துன்மார்க்கம் செல்வாற்குத் தோன்றும் பிறப்பு முத்தி
சன்மார்க்கம் சொக்கநாதா!

எல்லார் கருத்தும் இதமாய் உரைக்கறியேன்
நல்லாங்கு தீங்கு இதுவென நாடறியேன் _ எல்லாரும்
நீரூரும் வேணி நிமலா! மதுரையில் வாழ்
ஆரூரா, சொக்கநாதா!

உரையிறந்த பேரின்ப உல்லாச வீட்டிற்
றிரையிறந்து தூங்கித்திளையேன் _ வரை பெருகப்
பேசுவேன் யானென்றே பெற்றவர் தம் உள்ளத்துக்
காகவே சொக்கநாதா!

ஆறாறு தத்துவமும் அத்திலுறை மூர்த்திகளும்
பேறாம் வினையினையும் பொதித்து _ மாறாமல்
ஆட்டுவதும் நீயானால் ஆகாமியம் என்பாற்
சாட்டுவதென் சொக்கநாதா! (55)

முன்னளவில் மாக்களுக்கு முத்தி கொடுத்தவருள்
என்னளவில் சும்மா இருப்பதேன்? _ முன்னளவிற்
சேர் பெற்றாரேலுன் திருவருள் ஒத்தாசையின்றி
ஆர் பெற்றார் சொக்கநாதா!

நோயால் வருந்தியுனை நூறு குரல் கூப்பிட்டால்
நீயாரெனாதிருக்கை நீதியோ? _ தாயாய்
அலை கொடுத்த கேழல் அருங்குழவிக்கன்று
முலை கொடுத்தாய் நீயலவோ முன்.

தாயார் மகவருத்தம் சற்றும் தரியார்கள்
ஆயவினைக்கீடாய் அமைத்தாலும் _ காயம்
பரிக்குந் துயரமெல்லாம் பார்க்க உனக்கு என்றும்
தரிக்குமோ சொக்கநாதா!

தீவினையால் இன்னமின்னந் தேகமுறச் செய்வையோ
தீவினையற்றுன் மயமாய்ச்செய்வையோ! _ தாவிதமாய்
இன்னபடி மேல் விளைவ தென்றறியேன் ஈதறிந்த
அன்னையே சொக்கநாதா!

என்னது யான் என்பதுவும் யான் பிறர் செய்தாரெனலும்
மன்னுமதி பாதக மேல் வாWசைகளும் _ இன்னமின்னம்
சொல்லுகின்ற இச்செயல் நீ தூண்டுதலற்றென் செயலால்
அல்லவே சொக்கநாதா!

ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்த லிங்கம் _ பாலொளியாம்
அத்தனே! கூடல் மதுராபுரியுமையாள்
அத்தனே! சொக்கநாதா! (61)

எல்லாம் உனது பதம் எல்லாம் உனது செயல்
எல்லம் உனதருளே என்றிருந்தாய் _ பொல்லாத
மாதுயரம் நீங்கும் ம்மருவும் உனதடிக்கே
ஆதரவாய்ச் சொக்கநாதா!

தீதாம் அவாநந்தச் செய் மதுரை வாழ் வேந்தா!
நாதா! சிவானந்தம் நல்குவால் _ வேதச்
சிரகரா! நித்தா! திரிபுரா! சுத்தா!
அரகரா! சொக்கநாதா!

மற்றொருவர் தWசமின்றி வந்தடைந்தக்கால் எனை நீ
சற்றும் இரங்காதிருக்கை தன்மமோ? _ கொற்றவா!
பாவலா! கூடற்பரமா! பரதேசி
காவலன் நீதான் ஆனக்கால். (64)

தன்னந்தனியே தமியேன் முறையிட்டால்
இன்னந்திருச்செவியில் ஏறாதோ? – மன்னவனே!
தென்மதுரை மேவித்திருந்திய செங்கோல் செலுத்தும்
தன் மதுரை நீயலவோ தான்?

என்போல் மலகடினர் எவ்விடத்துங் கண்டதுண்டோ
இன்பேர் மதுரைக்கிறைவரே! அன்பேதும்
இல்லாதெனையாண்ட எண்ணத்தால் தேவரீர்
எல்லாமும் வல்ல சித்தரே!

நீயே ஒளித்திருப்பை நீ என்றும் காணாமல்
நீயே ஒளித்தபடி நின்னருளால் _ நீயேதான்
காட்ட அன்னியமாய்க்கண்டேன், உனது விளை
யாட்டதென்ன சொக்கநாதா!

பேரன்பன் அல்லேன், பிழை செய்யான் றான் அல்லேன்,
ஓரன்புமில்லா உலுத்தனேன் _ பேரன்பு
காட்டியெனைக் காட்டியுனைக் காட்டி இன்பத்தொட்டிலிலே
ஆட்டி வளர் சொக்கநாதா!

இடாசனத்தில் இரவு பகல் அற்றிடத்தில்
முட்ட்திருக்க அருள் முற்றும் தா _ அட்டாங்க
யோகந்தான் நீங்கி ஒழியாச் சிவான்ச்ந்த
ஆகந்தா சொக்கநாதா!

மோகம் கரைய முழுதும் மலம் கரைய
ஆகங்கரைய அறிவானந்த _ மோகமாய்ப்
பூரணமாய் எங்கெங்கும் பொன்கியெழ விழித்த
ஆரணனே சொக்கநாதா!

ஊணதுவான உடலொடு அணுகாமல் அருள்
ஆனசிவ போகமது வாயருள்வாய் _ Wஆனக்
கரும்பொருளே! வாழ்மதுரைக் கண்ணுதலே! யாருக்கும்
அரும் பொருளே! சொக்கநாதா!

பூண்டமலம் மாண்டுவிடல் போந்த சிவானந்த வெள்ளத்
தாண்டுமெனை மீண்டுவிடம் ஆகுமோ? _ நீண்டமால்
வீரென்பார் தாரா விமலா! எனைக்கண்டார்
ஆரென்பார் சொக்கநாதா!

முன்னை மலமகற்றி மூதற்வானந்தமயந்
தன்னையறிந்த போதனருள் _ என்னையுள் நீ
ஆண்டு பரிச் சொக்கநாதாந்தமருள் கூடலிலே
தாண்டு பரிச் சொக்கநாதா!

கருணாநிதியே! கடவுளே அன்பர்
பொருளான பேரின்பப் பொற்பே! _ ஒருநாளும்
நீங்காதெனதறிவில் நின்ற சுகானந்தமே!
ஆங்காணீ சொக்கநாதா!

நீரிலே மூழ்கிலுமென், நித்தமருச்சிக்கிலுமென்
பாரிலே சுற்றிப் பணியிலுமென் _வேரிலே
உற்றிருந்தால் அன்றோ உயிர்க்குறுதி? ஒன்றிரண்டும்
அற்றவனே சொக்கநாதா!

என்செயலே என்றென்றியற்றுவதும் என்செயலும்
உன்செயலே என்றென்றுணர்த்துவதும் _ நின் செயல
தாகுமே என அடியேற்குணர்த்தலும் நீ
ஆகுமோ சொக்கநாதா! (76)

ஈண்டுமெனை ஆண்டிலையேல் என் வினைக்கீடாயானே
வேண்டும் பவங்களினீ விட்டாலும் _ பூண்டருளால்
அங்கங்கே என்னோடன்னியமாய் என்னுருவிற்
றங்கியருள் சொக்கநாதா!

உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை ஆதலினால்
என்னைவிட நீங்குவதுமில்லை நீ _ பொன்னைவிடப்
பூந்தேன் அவருடையாய்! பொங்கு மதுராபுரியில்
வேந்தே பிரியா விடை.

அன்பற்கருள் புரிவதல்லாமற் றேவரீர்
வன்பர்க்கருள் மாட்டீரேல் _ உம்பர் தொழும்
நல்லார் புகழ் மதுரை நாதரே! தேவரீர்க்
கெல்லாமும் வல்ல சித்தரேன்?

நரகம் இனி நாட நாடோம் உமையாள்
விரகர் தமிழ் மதுரை மேவித் _ துரகம் நரி
ஆக்கினார் வைகையினீராடினோ அவ்வெல்லைப்
போக்காலம் யாந்திரிந்திப்போது.

நானோ தனுகரணம், நானோ மலமாயை
இவைகள் நடத்துவது _ நானோ தான் பூண்ட
வினையறுப்போன் புன்னியா பாவம் புரிவோன்?
ஆண்டவனே சொக்கநாதா!

அரும்பாச நன்மை தின்மை யாகம் அதன் மேல்
விரும்பாது நிட்டையிலே மேவித் _ திரும்பாத
வானந்தா என்னறிவில் மாறாது பொங்கியெழும்
ஆனந்தா சொக்கநாதா! ( 82 )

துWசப்பிணமென்னச் சுற்றத்தார் இட்டத்தார்
அWசச்சலிக்க அருவருக்கக் _ கொWசமுற
வந்த தனுவிருந்து வாழ்த்து நானென்னவைத்து
தந்திரமென் சொக்கநாதா!

தனுவாதி யாக்கியுயிர் தன்னிலிசைத்தாட்டி
எனுமாகமம் கருணை என்றும் _ தினமும் நீ
ஆச்சர்யம் யானெனதென்றாட்டல் மறந்தொன்றுரைத்தல்
ஆச்சரியம் சொக்கநாதா!

தேகாதியெல்லாம் செடம் பிணம் பொய்யென்றிருக்க
மோகாதியெல்லாம் முடிந்திருக்க _ ஏகமாய்
எப்போது மின் வெள்ளத்தேயிருக்க வாழ்வையென்னுள்
அப்போதே சொக்கநாதா!

நின்பாடல் என்று நினப்பாடல் அன்றியே
என் பாடல் எங்கே இறைவனே! _ நின் பாடல்
ஆமே தனுவாதி ஆகம நால்வாக்காதி
ஆமே நீ சொக்கநாதா!

நீயற்ற ஓர் பொருளை நிச்சயித்த நாயேனும்
போயியற்றல் செய்யப்புரிகுவேன் _ நீயியற்றல்
ஆக்காதனுவும் அசையுமோ? அவ்விகற்பந்
தாக்காத சொக்கநாதா!

அன்றுமுதல் இன்றளவும் மேலும் அடியேனுக்
கென்றுநீ நன்மை செய்வதன்றி நான் _ ஒன்றேனும்
செய்யுமாறெங்கன்? சிவனே! இனி நாயேன்
உய்யுமாறெங்கன்? உரை. ( 88 )

அறிவு பரமானந்தம் ஆகவில்லை! ஆகம்
பொறி கரணம் யானெனதும் போக _ நெறிதவWசேர்
பேரன்போ இல்லை பினை நான் உனக்கடிமைக்
காரென்பேன் சொக்கநாதா!

நின்னலவில் ஆனந்தம் நின் கருணை சற்றேனும்
என்னளவிற்றோற்றாதிருந்தக்கால் _ நின்னளவிற்
பூரணம் பொய்யானந்தம் பொய்கருணை பொய்யுரைத்த
ஆரணம் பொய் சொக்கநாதா!

தேவே! மதுரை நகர்ச் சிற்பரனே! எவ்வுயிர்க்கும்
கோவே எனையாளும் கோமானே! _ நாவே
உனைத்துதிக்கச் சிந்தை உனை நினைக்க என்றும்
கனத்திலுனை வணங்கக் காண்.

உன்னைச் சிங்காரித்து உனதழகு பாராமல்
என்னைச் சிங்காரித்து இடர்ப்பட்டேன் _ பொன்னை
அரிவையரையே நினையும் அன்பிலேற்கு உன்றாள்
தருவையோ சொக்கநாதா!

சொக்கநாதா உனையே சொல்லும் அடியேனுடைய
பக்கமாய் நின்று வினையாற்றியே _ எக்காலும்
மீண்டு வாராத கதி மேவுவிப்பாய் தென்மதுரைத்
தாண்டவனே சொக்கநாதா!

ஆறுதலை இல்லை அடியேனுக்கன்பாகத்
தேறுதலை சொல்வார் சிலரில்லை _ வேறெனக்குத்
திக்கருமில்லை சிவனே! பழிக்கWசி
சொக்கே! நின்றானே துணை.

புண்டரிகத்தானைப் புகழ்ந்து புகழ்ந்து தினம்
அண்டமரர் கொண்டிரைWசும் ஆதியே _ தொண்டுபடு
நாயேனை யாண்டுகந்து நன்னெறிகள் காட்டுவித்த
தாயே நீ சொக்கநாதா!

மிண்டு செய்யு மும்மலமிக்கவினை நல்குரவும்
பண்டுபோவென்னை வந்து பற்றாமல் _ கொண்டுபோய்
நின்னருளிற் சேர்க்க நினைகண்டாய் தென்மதுரை
மன்னவனே சொக்கநாதா!

கூரியவெம்பாசக் குளிர் நீங்க நின்னருளாம்
சூரியனெனப் போது வந்து தோன்றுமோ _ பாரறியக்
கொட்டமிட்ட சண்டனுயிர் கொள்ளையிட்ட மாமதுரை
இட்டமிட்ட சொக்கநாதா!

உனக்குப் பணிசெய்ய உன்றனையெந்நாளும்
நினைக்கவரமெனக்கு நீ தா _ மனக்கவலை
நீக்குகின்ற தென் மதுரை நிர்மலனே! எவ்வுலகும்
ஆக்குகின்ற சொக்கநாதா!

சன்மார்க்கம் செய்யும் தபோதனரோடு என்னையும் நீ
நன்மார்க்கம் செய்யவருள் நாடுமோ? _ துன்மார்க்கம்
செய்கின்ற முப்புரத்தைத் தீயாக்கித் தென்மதுரை
வைகின்ற சொக்கநாதா!

வ்ந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை
இந்தவகை ஆசையெல்லாம் என் மனத்தின் _ வந்தினிச்
சேராமல் வாழ நினை கண்டாய் தென் கூடற்
பேராத சொக்கநாதா!

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழாசான்
திரு பாலசுப்ரமணியம் அவர்கள் நினைவாக:
புதுவை Wஆனம்.

Advertisements