NOTES ON SIDDHA MEDICINE .
சித்த மருத்துவக் குறிப்புகள் .

விலாமிச்சம் .

“மேகம் விழி எரிச்சல் வீறி இரத்த பித்தமொடு
தாக மத மூர்ச்சை பித்தங்கள் மயக்கம் _ சோகம்
சிர நோய் இவை ஏகும் செய்ய விலாமிச்ச
எரிகரமும் இல்லை இசை.”

வில்வம் .

“விவத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்
சொல்ல ஒண்ணாப் பித்த தொடர் சோபை _வல்லகப
தாகசுரம் நீறேற்றம் சந்நியொடு மெய்வலியும்
வேகமொடு நீங்கும்ர்ர்.”

விளா .

“அழ்ன்ற கணவேக அதிதாகம் தீரும்
சுழன்று வரு பித்தம் தொலையும் _ உழன்று
பொரு நிலை மேகத்துடனே புண்சுரமும் போகும்
அரு நில விளாவுக்கு அயர்ந்து.”

விஷ்ணுகிரந்தி .

“செய்ய மாலின் கிரந்தி தீராத வல்லசுர
ஐய அறுக்கும் அனல் தணிக்கும்_ வெய்யகப
வாச இருமலையும் கட்டறுக்கும் வாதத்தால்
ஊடாகும் பிணிபோக்கும்.”

வேங்கை.

“குத்திருமல் வெட்டையொடு கூறு மூல மாந்தம் இலை
எத்திசையும் வாறா இடையும் காண் _ சத்தியமாய்
புண்ணிருமல் சீழ் ஒழுகற்போகு மலம் இறங்கும்
கண் ஒளிரும் வேங்கைக்குக் காண்.”

வேப்ப நெய் .

“வாதம் போம் பித்தமிகு மாறாக் கிரந்தியொடு
மோது கரப்பான் சிரங்கு முன் இசிவும் _ ஓதுடலில்
நாப்பணுறு சுரமும் சந்நியும் தொலையும்
வேப்பநெய் என்றொருக்கால் விள்ளு.”

வேப்பம் பிண்ணாக்கு.

“சந்நியுடன் வாதம் தலைநோய் போம் வாதம் அறும்
முன்னி நின்ற தோடம் முறியும் காண் _பண்ணு தமிழ்
வல்லவரே வேம்பின் வழி வந்த பிண்ணாக்கு என்றொருகால்
சொல்ல ஐயம் போமே தொலைந்து.”

வெந்தயம் .
“பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொள்ளை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.”

வெள்ளருகு .

“குன்மமொடு வாயு குடல் வாதம் சூலை இவை
சென்மம் விடுத்தோடிச் சிதையும் காண் _ வன்முலையாய்
உள்ளுருகிக் கிரந்தி சொறி ஒட்டிய சிரங்கும் அறும்
வெள்ளருகு தன்னை விரும்பு.”

வெங்காயம் .

“வெப்ப மூலங் கிரந்தி வீறு ரத்த பித்தமுன்
செப்பு நா அக்கரம் தீராத தாகம் _ வெப்பு
கடுப்பு அறும் மந்தம் சந்நி காசம் வயிற்று உப்பல்
தடிப்பேறும் வெங்காயத்தால்.”

வெற்றிலை .

“ஐயம் அறும் காண் அதன் பாரம் கொண்டக்கால்
பைய சைத்தியம் போம் பைந்தொடியே _மெய்யின்
கடியின் குணம் போகும் கர வெற்றிலைக்குப்
படியும் முத்தோடம் இதைப்பார்.”

வெள்ளாட்டுப்பால்.

“வெள்ளாட்டுப் பாலுக்கு மேவிய நல் தீபனம்
தள்ளாடு வாத பித்தம் சாந்தமாம் _ உள்ளிரைப்பு
சீதமதிச்சாரம் சிலேத்தும அறும் புண் ஆறும்
வாதக்கிலேசமும் போம் அறி.”

வெண் நொச்சி .

“நாசம் தருவாதம் நாசிப்பிணி அழல்
சுவாசம் த்சன உருவன் தோடம் _ காசம் அறல்
உச்சி உடையை உறைதோயும் என்படுமோ
நொச்சி அடையை நுவல்.”

வெட்டிவேர் .

“பித்தவிதாகம் சசிகாமிலங் கறை பித்த அனல்
தந்திடு குட்டம் சிர நோய் களமடி தாதுநட்ட
டந்த புனல் புண் வன் மூர்ச்சை வரி விழி நோய்
வித்திர மேகத்தின் கட்டியும் போம் வெட்டி வேரினுக்கே.”

வால் மிளகு .

“வாத பித்த ஐயம் வயிற்றுவலி தாகம்
சீதம் பல நோய் சிதையும் காண் _ போத
அதி தீபனம் அணங்கரசே நாளும்
துதி வால் மிளகு அருந்தச் சொல்.”

வெட்பாலை .

“வெட்பாலை தன் அரிசி வீறு பித்த வாதமொடு
கொட்பார் கரப்பன் குடல் வாதமொடு
காணாமலே நாளும் கண்டிக்கும் காசினியில்
பூணார் முலையாய் புகல்.”

வெண் காட்டான் வேர் .

“மாதரால் வந்த வெட்டை வன்மேகம் சென்னிவலி
ஓது சுரம் விழி நோயோடும் _ பேதியொடு
மாக்கட்டாஞ் சீதம் அறும் மாமூலியாம் வெள்ளை
காக்கட்டான் வேரைக்கருது.”

வெதுப்படக்கி .

“வெள்ளெடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
அள்ளெடுக்கு மாந்தம் அதி மாந்தம் _ தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன் தழையும் காய்ச்சலொடு
கோதேறி இரத்தமும் போக்கும்.”

வெள் வேல் .

“பித்த மயக்கம் அறும் பேருலகின் மானிடர்
குற்ற சுரவாத ஓடும் காண் _ குத்துகின்ற
சந்துக் குடைச்சல் விடும் சர்வாங்க வாதம் போகிக்
கொத்துலவும் வெள் வேலுக்கு.”

வெள்ளரி.

“பிஞ்சு வெள்ளரிக்காய்க்குப் பேசு திரி தோடம் போம்
வந்சியரே முற்றிய காய் வாதமுமாம் _ நைந்த கனி
உண்டால் சைத்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நீர் இறங்கும் காண்.”

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements