Notes on siddha medicine .
சித்த மருத்துவக் குறிப்புகள் .

மருக்காரை .

“மருக்காரையின் வேர் தான் வாந்தி மருந்தால்
திருக்காஞ் சிலேத்தும் அதைத் தீர்க்கும் _ முருக்காருஞ்
செய்யவிதழ் மாதே திரிதோடமும் போக்கும்
வெய்ய மருந்தெனவே விள்.”

மணத்தக்காளி .

“வெவ்வழலும் மாறும் விரிகம்மல் போகும்
ஒவ்வு சிசுவுக்காம் உலவை விடும் _ செவ்வி
அருமணி கச்சி ஆயிழையே கேளாய்
கருமணி தக்காளி தனைக் கண்டு.”

மருத மரம் .

“ஓதும் என நீரிழிவை ஓட்டும் பிரமேகம்
காதம் என ஓடக்கடத்தும் காண் _போத
மயக்கமொடு தாக மாறா சுரத்தின்
தயக்க மறுக்கும் மருதம் சாற்று.”

மலை வேம்பு .

“மலட்டுப் புழுவும் வயிற்றின் வலியும்
மலட்டு வாயுவும் மடக்கி _கொலட்டும்
உலைவேகம் சினவேற்கண் திமமே கேளாய்
மலை வேம்பின் பேரை வாழ்த்து.”

மனோசிலை .

“மடலரிதாரத்தில் வரும் கரடி இரண்டும்
உடல் விடங்களைக் களையும் உண்மை _ கொடிய குட்டம்
காய்ச்சல் நடுக்கல் அசகல்லி இரைப்பு சிலந்தி
பேச்சறு மனோசிலைக்குப் பேசு.”

மிளகு .
“சீத சுரம் பாண்டு சிலேத்துமம் கிராணி குண்மம்
வாதம் அருசி பித்தம் மாமூலம் _ ஓதுச்ந்நி
யாசம் அபஸ்மாரம் அடன் மேகம் காசம் இவை
நாசம் கரி மிளகினால்.”

மிளகு தக்காளி .

“மந்தாகினி சோபை வாந்தி கழல் வாயு வெப்பம்
இந்து நோய் பாண்டோ எதிர் விக்கல் _முந்த
வளகு முத்தோடம் நோய் மாற்றும் கைப்பான
மிளகு தக்காளி இலை மெய்.”

மாதுளை .

“சங்கையறச் சொற்றவிர்க்கும் சந்நியாசம் சத்தி
அங்கை அதிதாக மனம் சேருமோ _கங்கை
இருந்தாழ மக்கட் கிரத்தலைச் செய்நோய் போம்
இருந்தாழ மக்களிகட் எண்.”

மாவலிங்கப் பட்டை .

“மாவலிங்கப் பட்டையினால் வாதமொடு சந்நிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் ஆறுமே _ மாவெருக்கம்
பட்டை சந்நிவாதம் பல்விடம் போக்கும் கருவேல்
பட்டை நாநோய் தீர்க்கும் பார்.”

மாமரம் .

“சீதரத்தப்போக்கை சிக்கெனவெ தான் பிடிக்கும்
போத வயிற்றுக்கடுப்பை போக்கும் காண் _ ஏதுகின்ற
வாந்தியையும் தீர்க்கும் வெளி மாமரத்தின் வேர்ப்பட்டை
பூந்துகின் மாதே புகல்.”

மாவிலக்கிழங்கு .

“புளி நாளையின் கிழங்கோ பொன் போலச்செம்பைத்
தெளிவாகச் சுத்தியது செய்யும் _ வெளியான
மூல முள்ளை அறுக்கும் முது சுவைக்கு ஏதுவுமாம்
கோல மட மயிலே கூறு.”

மாசிக்காய் .

“அக்கரங்கள் போக்கிவிடும் ஆறாத வெப்பாற்றும்
மெய்க்குறுதி மாசிக்காய் மேன் மேலும் _ தக்கதொரு
பாலர் கணநோய் போக்கும் பன் மேகமும் தொலைக்கும்
வேலனைய கண்ணாய் விளங்கு.”

முசுமுசுக்கை .

“இருமலுடன் ஈளை இரைப்பு புகைச்சல்
மருகின்ற நீர் தோடம் மாறும் திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி அவ்விலையைத்
தானே அருந்துவர்க்குத் தான்.”

முருங்கை .

“முருஙை வேர்ப்பட்டைக்கு மூடுகபம் தோட
எருங்குறாச்சந்தி சுரம் ஓடும் _ அருங்கை
வட்டைப் பெருமுலையாய் வாய்வொடு வ்டங்களும் மேற்
பட்டைக்குப் போமே பறந்து.”

{ கொடி }முந்திரிப்பழம் .

” வெப்ப ருசி தாகம் விரணம் சுவாசகாசம்
எய்யப்புடைய பித்தம் இரத்த பித்தம் _செப்பும்
மடி மந்தம் மேகம் பத மூர்ச்சையும் போம்
கொடி முந்திரி கனிக்குக் கூறு.”

முட்காவேளை .

“வாகாதி மந்தம் அதிசாரம் அதிவறட்சி
போகாச் சுரம் தாகம் போக்க மருந்தோகையில்
சிக்காவேளை பதத்தை த்ன்னச்செய்விக்க என்றான்
முக்காவேளைப் பதத்தை முன்.”

மூக்கரட்டை .

“சீதம் அகற்றும் தினவடக்கும் காந்தி தரும்
வாத வினையை அடிக்கும் காண் _ பேதி
கொடுக்கும் அதை உண்டாக்கால் கோமளமே பித்தம்
அடுக்குமே முக்கரட்டையாய்.”

வல்லாரை .

“அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றுக்கடுப்பு
தக்க இரத்தக் கடுப்பு தான் ஏகும் _ பக்கத்தில்
எல்லாரையும் அருந்து என்றே உரைத்து தன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை.”

வாகை .

“வாகை அனல் விரணம் வாத வறட்சியுடன்
தாக சுரமும் தணிக்கும் காண் _ஆகமதில்
அக்கரமெல்லாம் அகற்றிடிவீர் பூவனமே
அக்கணத்தில் என்றே அறி.”

வாய் விளங்கம் .

“பாண்டு குட்டம் குன்மம் பருந்தூல நோய் வாதம்
தீண்டு திரிவிடம் சிரம் துண்டம் _ பூண்டமடி
நோய் விளங்க காட்டாத நுண்கிருமி ஆசனப்புண்
வாய் விளங்கம்காட்ட விடுமால்.”

Advertisements