Notes on siddha medicine .
சித்த மருத்துவக் குறிப்புகள் .

பரங்கிப்பட்டை.

“தாகம் பல வாதம் தாது நட்டம் புண் பிள்ளை
மேகம் கடி கிரந்தி வீழ் மூலம் _ கோமுடம்
குட்டை பசுந்தர மேற்கொள் மனம் போம் பரங்கிப்
பட்டையினை உச்சரித்துப் பார்.”

பச்சைக்கற்பூரம்.

“அட்ட குன்மம் சூலை அணுகாது வாதமொடு
துட்ட மேகப்பிணியும் தோற்றாதே _மட்டலரும்
கூந்தன் முடிமாதே கொடிய கபம் போகும்
சார்ந்த பச்சைக் கற்பூரத்தால்.”

பசுந்தயிர் .

“பசுவின் தயிரால் பசி மிக உண்டாகும்
இசிவுறும் சீரண நோய் ஏகும் _பசை அகன்ற
தாக இளைப்பிருமல் தாங்கொணா மெய் எரிவும்
ஏகு உலகில் இயல்பு.”

பசு மோர் .

“வீக்க மகோதரம் வீறு குன்மம் பாண்டு பித்தம்
தாக்கு மருந்திட்ட அதிசாரமொடு _ கூக்குரலே
மாறா திரி தோடமந்த மனத்தாகம் போம்
வீறாவின் மோருக்கு மெய்.”

பனை வெல்லம் .

“தெங்கின் வெல்லத்தால் செரியா குணம் சோபை
அங்கமுறு நீரும் அதிகரிக்கும் _ தங்குபனை
வெல்லத்தால் வாத பித்தம் வீறுகபம் ச்ந்நிநோய்
வல்லருசி குன்மம் அறுமால்.”

பற்பாடகம் .

“சீதவாத சுரம் போம் தீராத தாகம் போம்
போத இரு கண் குளிரும் பொய்யலவே _ பூதலத்துள்
வற்பார் பயித்தியமும் மாபித்தமும் தொலையும்
பற்பாடகத்தை உன்னிப்பார்.”

பருத்தி இலை .

“பருத்தி இலை மொட்டிரண்டை பாலில் அரைத்துண்ண
வருத்துகின்ற மேகம் எல்லா மாறும் _பருத்த
இரத்த பித்தமொடு விரண வீக்கம் போம்
அரத்த இதழ் மாதே அறை.”

பசும்பால் .

“பாலர் கிழவர் பழம் சுரத்தோர் புண்ணாளி
சூலையோர் மேகத்தோர் துர் பலத்தோர் _ ஏறுமிவர்
எல்லார்க்கும் ஆகும் இளைத்தவர்க்குச் சாதகமாம்
நல்லாய் பசுவின் பால் மாட்டு.”

பாவட்டை இலை .

“சீதவாதங்கள் அறும் தீபனமோ உண்டாகும்
வாதம் கபம் ஒழியும் வார்குழலே _போதவே
ஆவட்டைத்தாக சுரம் அற்றுவிடும் தோடம் போம்
பாவட்டைப் பத்திரிக்குப் பார்.”

பாகல் இலை .

“பிரியா கிருமி அறும் பேதி உண்டாம் தோடம்
முறியும் இரதம் முறியும் _குறியாத
மா கற்புடைய மட மயிலே எப்போதும்
பாகல் தழைக்குப் பயந்து.”

பிரண்டை .

“பிரண்டையை நெய்யால் வறுத்து பின்பரைத்து மாதே
சேர்ந்த மூலம் கபம் உட் செம்புனலை போக்கோந்த நடை
எல்லாம் அகலும் எழும்பும் அதிகப்பசி
மல்லர் பிரண்டை உண்டு வா.”

பிரப்பங்கிழங்கு .

“தந்த ரோகத்தை தணியாத வாதத்தை
உந்து சூலைப்பிடிப்பை ஓட்டுங்காண் _ வந்து
காப்பு திறப்பு எனக்காட்டு நகை மாதே
பிரப்பங்கிழங்கதனைப் பேணு.”

பீர்க்கங்காய் .

“தின்றவுடன் பீர்க்கங்காய் சீதம் உறும் காண்பித்தம்
ஒன்று மூன்றாக உயருமே _ மன்றலணி
காராளகக் கச்சை முலைக்காரிகையே வாதம் கபம்
நேரளவைத் தாண்டும் நினை.”

பூசனிக்காய் .

“பெரும் பூசனிக்காய்க்கு பித்தமொடு உட்காய்ச்சல்
அருஞ்சார நீர்க்கட்டருகல்_ மருந்த்டுதல்
பித்தசுரம் அத்திகரம் பேய் வறட்சி மேகமும் போம்
மெல்ல அனிலம் உறும் விள.”

பூவரச சமூலம் .

“நூற்றாண்டு சென்றதொரு நுண்பூவரசம் வேர்
தூறாண்ட குட்டம் தொலைக்கும்காண் _ வீறிப்
பழுத்த இலை விதை பூ பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரோசனமும் போம்.”

பெருங்காயம் .

“தந்த வேதந்த மூலத்தெழும் பிணி
சருவகாளம் விருச்சிக கீடம்மா
மந்தம் வாதம் உதாவர்த்தம் அல்குல் நோய்
மார்பணம் கட்ட குன்மம் மகோதரம்
உந்து கர்ப்பத்தின் வித்திரஞ் சூலைசூர்
உதிரப்பூச்சி சிலேத்துமம் ஊறும் வலி
வந்த மெய் கடுப்பொடு இவை முற்றுமே
மாயு நாறு நற் காயம் கிடைக்கினே.”

பெருஞ்சீரகம் .

“யோனி நோய் குன்மம் உருட்சை மந்தம் பொருமல்
பேதனம் உறு காசம் பீலிகம் இரைப்பீனா உரை
சேர்க்கின்ற வாதமும் போம் சீர்பெரிய சீரகத்தால்
மூக்கு நோயில்லை மொழி.”

பெருமருந்து .

“பெரு மருந்தின் வேர் பித்தம் பீறிரைப்பு காசம்
வரு சுரம் உடம்பு வலி வாதம் _ உருவுவிடம்
ஒன்றிய மாகடிகள் ஓட்டும் உலகிலிது
அன்றியது கோசிகிச்சைக்காம்.”

பொன்னாங்காணி.

“காசம் புகைச்சல் கருவிழி நோய் வாத அனல்
கூசும் பீலிகம் குதாங்குர நோய் _ பேசியவையால்
எனாங் காணிப்படிவமேமாம் செப்ப எண்ணெய்
பொன்னாங் காணிக் கொடியைப் போற்று”

பொடுதலை.

“பொடுதலையி பேருரைத்தால் பேராமம் போக்கும்
அடுதலை செய் காசமும் அடங்கும் _ கடுகிவரு
பேத்யொடு சூலை நோய் பேசரிய வெண்மேகம்
வாதமும்போ மெய்யுரைக்கும் வாழ்த்து.”

பொற்றலைக்கையான் .
“பொற்றலைக்கையாந்தகரை பொன்னிறமாக்கும் உடலை
சுத்தமுற கட்கு சுகம் கொடுக்கும் _சிற்றிடையாய்
சிந்தூரங்ககு ஆகும் சிந்தை தனைத் துலக்கும்
உர்தி வளர் குன்மம் ஒழிக்கும்.”

பொன் முசுட்டை .

“வாதமொடு பித்தத்தை மாற்றுமே மாநிலத்தில்
சீதம் அகற்றும் தினவடக்கும் _ மாதே கேள்
உண்டிக்கும் வாசனையாம் ஓங்கு வளர் அனலை
கண்டிக்கும் பொன்முசுட்டை காண்.”

பொரிகாரம் .

“வெங்காரம் சர்ப்பவிடம் ஐயம் நீரடைப்பு
மங்கா கிராணி ரத்தமாம் மூலம் பங்கம் செய்
வாயுவுடன் கல் அடைப்பு வன் கிருமி அட்ட குன்மம்
ஓயும்படி புரியும் ஓது.”

மயிலிறகு .
“அத்திப் பிரமேகம் போமாடைகட்ட சாம்பலுக்கு
தந்தி வரு இரத்தம் தடைபடும்காண் _ சத்தியமாய்
கம்பலச் சாம்பல் சந்தி காதும் மஞ்சை தோகை பற்பம்
கும்பு விக்கல் வாந்தி கெடுக்கும்.”

மர மஞ்சள் .

“அழன்ற கண மூலம் அருசியுடனே
உழன்ற கண சுரமும் ஓடும் _ சுழன்றுள்ளே
மீறு சுரமும் தணியும் வீசு மாமஞ்சளுக்கு
தேறு மொழி யனமே செப்பு.”

மருக்காரை .

Advertisements