திண்ணைப்பள்ளிக்கூடம்
நடத்துபவர் -ஆண்டி வாத்தியார் (புதுவை ஞானம்)
(பகுதி – 3)

உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும் வரிசைப்படுத்தி பாடல்களாகப் பாடியதைப் போலவே, மெய்யெழுத்துகள் பதினெட்டையும் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லின் முதலில் வரும் எழுத்துகள், இடையில் வரும்
எழுத்துகளை அவ்வாறே வரும்படி பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒளவையின் ‘ஆத்திசூடி’ யிலேயே அதற்கான பாடல்கள்கள் உள்ளன.

ஆத்திசூடி :

கண்டு ஒன்று சொல்லேல்
ங -ப்போல் வளை
சனி நீராடு
ஞயம்பட உரை
இடம் பட வீடு எடேல்
இணக்கம் அறிந்து இணங்கு
தந்தை தாய்ப் பேண்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர் செய்
மன்று பறித்து உண்ணேல்
இயல்பு அலாதன செயேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செயேல்
இளமையில் கல்
அறனை மறவேல்
அனந்தல் ஆடேல்

எந்த மொழிக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழ்மொழியில் உண்டு. அது ‘ழ’ என்னும் சிறப்பு எழுத்து.
ஆனால் பலருக்கும் அதனை உச்சரிப்பதில் சங்கடம் இருக்கிறது. அதற்காகவே அந்த எழுத்தை பழகிக்
கொள்வதற்கான பாடல்கள் சில உண்டு. அது தவிர வல்லின மெல்லின இடையின வேறுபாடுகளை அறிந்து
கொள்ளவும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாப்பயிற்சிப் பாடல்கள் என்று சொல்வார்கள்.
உங்களின் பயிற்சிக்காக ஒரு சில பாடல்கள் மட்டும் இங்கே கொடுக்கப்படுகிறது.

‘நாப்’ பயிற்சிக்காக (Tongue Training)

” வருது பாரு வண்டி
மாடு ரெண்டும் சண்டி
வண்டிக்காரன் நொண்டி

தோத்தான் தொல்லி
தோலு குத்தற கொறவா
நொண்டி நொடிச்சிக்கோ
வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ ”

‘நாப்’ பயிற்சிக்கு

” ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி
கிழ நரி முதுகுல ஒரு பிடி நரை முடி
வாழைப்பழம் கொழகொழவென
அழுகிக் கீழே விழுந்தது .

யாரு தச்ச சட்ட இது
தாத்தா தச்ச சட்ட இது”

இதையே கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு என்று பார்த்தால் வேறுவிதமான பாடல்கள் இருக்கின்றன.

” ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே
உழக்காழாக்கு நெல்லுக்கு
ஏழு வாழைப்பழம் ”

இப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் ‘ழ’கர எழுத்து நாவுக்குப் பழக்கமாகும். நாவிலேயே
தங்கியும் இருக்கும்.

அடுத்த வகுப்பில் சந்திப்போம்…..

Advertisements