NOTES ON SIDDHA MEDICINE
சித்த மருத்துவக் குறிப்புகள்.

சென்பகப்பூ .
“வாத பித்தம் அத்திகரம் மாமேகம் சுத்தசுரம்
தாது நட்டம் கண் அழற்சி _ மாதே கேள்
திண்புறு மணக்களிப்பாம் திவ்ய மணம் உட்டினம் சேர்
சண்பகப் பூவதற்குத்தான் .”

சேங்கொட்டை .

“குட்டம் சயரோகம் கொல்லும் விஷபாகம்
துட்டம் தரு கிருமி சூலையும் போம் _ மட்டவரும்
கூந்தன் மயிலே கிரந்திக்கூட்டம் போம் செங்கையில்
ஏந்து சேங்கொட்டை தானே.”

தகரை .

“தகரை படர் தாமரையைச் சொறியை
தகரவடிக்கு மந்தன் தன்னோடு இகலான
அத்தி சுரத்தையும் அதம் செய்யும் இம்மூலி
உத்தம மாஎன்றே உரை.”

தழுதாழை .

“வாதப்பிடிப்பென்ற வற்தாலியைப் புலிபோல்
போதப்பிடிக்கும் புகலவன்றோ_ காத
அழுதாழை பீனசத்தை அண்டா அகற்று
தழுதாழைப் பன்ன அதுதான்.”

தண்ணீர் விட்டான் .

“நீரிழிவைப்போக்கும் நெடுநாள் சுரத்தை எல்லாம்
ஊரை விடுத்தோட உரைக்கும் காண் _ நாரியரே
வெண்ணீர் பெய் சோம நோய் அனல் தணிக்கும்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்.”

தலைச்சுருளி .

“பாண்டகற்று மெய்யில் படர் குட்ட நோய் விலக்கும்
நீண்ட இருதய நோய் நீக்கும் காண் _ தாண் அதப்பை
முன்னே ஒழித்துவிடு மூவாத்தலைச்சுருளி
என்னே உலகிலிசை.”

தராய் .

“சூலையொடு மேகம் இவை தோன்றாமல் ஓட்டிவிடும்
மேலைவரு காலை விலக்கும் காண் _ ஆல
அராமேவிய அல்குல் ஆரணங்கே வெட்டை
தராவென்னும் உலோகம் அது தான்.”

தக்கோலம் .

“பாண்டு சுரம் போகும் பகரில் பலஞ்சேரும்
தீண்டும் உபயாசிமும் தீரும் காண் _ நீண்டதொரு
தாது விருத்தியாகும் தளர்ந்த மலமும் கட்டும்
கோது அகலும் தக்கோலம் கொள்.”

தாமரைப்பூ .

“பருத்த நற்தாமரைப்பூ பல்வாந்தி சோபை
துரத்திவிடும் இன்னும் சொலவோ _ சுரத்தில்
எடுத்து அணைக்கக் கண் குளிரும் ஏகும் சுரமும்
எடுத்த வீதாகமும் போம்.”

தான்றிக்காய் .

“சிலந்தி விடம் காமியப்புண் சீழான மேகம்
சிலந்தி வரும் வாத பித்தம் காலோடு அலர்ந்து உடலில்
ஊன்றிக்காய் வெப்பமுதிர பித்தும் சுரக்கும்
தான்றிக்காய் கையில் எடுத்தால்.”

தாளிச பத்திரி .

“நாசி களப்பிணிகள் நாட்பட்ட காசம்
வாசம் அருசி வமனங்கால் _
மேக மந்தம் அத்திசுரம் விட்டேகும் தாளிசத்தால்
ஆகும் சுகப்பிரசவம்.”

தாழம்பூ .

“தலை நோய் சலதோடம் சண்ணுகபம் காசம்
உலைவாதம் எல்லாம் ஒஉங்கும் _நிலசேர்
திருந்துடற்கு காந்திதரும் செம்மணமும் சூடும்
பொருந்துகிறை செந்தாழம்பூ.”

தாமரைக்கிழங்கு .

“கண்ணுக்கு ஒளிகொடுக்கும் காசபித்தம் போக்கும்
எண்ணும் குளிர்ச்சி தரும் ஏந்திழையே _ புண்ணுகளில்
தாமரைப்புண்ணும் போக்கும் தொந்திக் கடுப்பகற்றும்
தாமரைக் கந்தமது தான்.”

திப்பிலி மூலம் .

“தாகம் பித்தம் சோகந்தணியா சுரம் இருமல்
மேகம் குரற்கம்மல் மெய்கடுப்பும் _ஏகும் காண்
திப்பிலிமூலம் கண்டத்திப்பிலியதாம் நறுக்கு
திப்பிலி என்றே எருக்கால் செப்பு.”

திப்பிலி .

“இருமல் குன்மம் இரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சன்னியாசம் அரோசகம்
பொருமல் ஊதை சிரப்பிணி மூர்ச்சை நோய்
பூரிக்கும் சலதோடம் பீலிகமும்

வருமலப்பெருக்கோடு மகோதரம்
வாதம் முத்தோடச்சுரம் குளிர்
பெருமலைப்புரி மேகப்பிடகமும்
பெரும் திப்பிலிப் பேரங்குரைப்பவே.”

திரிபலை ,

“வித்திரதி நாசிநோய் வெண்குட்டம் ஆசனப்புண்
குத்திருமல் பாண்டு குட்டம் குன்மம் இரை _ பெற்று
மூர்ச்சை பிலிகம் பிரமியமொடு நண் சர்வ விட
மூர்ச்சையது முப்பலந்தான் முன்.”

திரிகடுகு .
“முக்கடுகால் ஆசிய நோய் மூலம் கொடிறு பிணி
திக்கடுகு பாண்டோடு சிரத்துறு நோய் _ அக்கடுக்குந்
தாவர நஞ்சென்றுலகில் சாற்று இந்நோய் முழுவதும்
தீவிர நஞ்சுண்டிறக்கும் நேர்.”

Advertisements