சித்த மருத்துவக் குறிப்புகள் .

சிறு காஞ்சோரி வேர்.

“சிறுகாஞ்சோரி வேர் சிலேத்தும சுவாசத்தைக்
குறியாத மூச்சுரக் குழாத்தை _சொரியும்
கரப்பான் சிறு சிரங்கைக் காலைத்தாகத்தை
உரப்பாகச் சாடுமென ஓது.”

சிவதை .

“உள்ள மலமும் உதாவர்த்தமும் வயிற்றைக்
கொள்ளு பித்த வாதமும் போம் _ கூறுங்கால்
பிள்ளைகட்கு செப்பு கிரகமும் போம் தேனே
உலகத்துள் தப்பில் சிவதைக்குத் தான்.”

சிலாசத்து .

“கல்லடைப்பு மேகம் கனதூலம் வித்திரதி
சொல்லடைக்கு நீர் அருகல் சோணிதக்கால் _மெல்லிடையார்
இல்லச்சத்தில்லை எனும் இந்திரிய நட்டமாம்
கல்லச் சத்தில்லை எனும் கால்.”

“வாந்தி அருசி குன்மம் வாம்நோய் பிலிகம் இரைப்
பேந்திருமல் கல்லடை பிலாஞ்சனம் உட் _ சேர்ந்த கம்மல்
ஆசன குடாரி எனும் அந்தக் கிராணியும்
போசன குடாரி உண்ணப்போம்.”

சீனி .

“சீனிச்சர்க்கரைக்கு தீராத வன் சுரமும்
கூனிக்கும் வாதத்தின் கூட்டுறவும் _ஏனிற்கும்
வாந்தியோடு கிருமி மாறாத விக்கலுமே
போந்திசையை விட்டுப்புரண்டு.”

சீதேவி கழுநீர்ப்பூ .

“உடற்குக் குளிர்ச்சியதாம் உள் அழலை மாற்றும்
அடற்கப அரோசகத்தை ஆற்றும் _கடற்குள்
எழு நீர்க்குமிழி இகழு முலையாய்
கழு நீர் மலர் எனவே காண்.”

சீந்தில் .

“சீந்தில் கிழங்கு அருந்த தீபனமா மேகவகை
போந்த உதிரப்பித்தம் பொங்கு சுர _மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பல் நோயோடே
கதி விடமும் கெட்டு விடும் காண்.”

சுக்கு .

“சூலை மந்தம் நெஞ்செரிப்பு தோடம் ஏப்பம் அழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் _ வாலகப
தோடம் அதிசாரம் தொடர் வாத குன்மம்
நீர் தோடம் ஆமம் போக்கும் சுக்கு.”

செவ்வியம் .
“சூலை அருசி சன்னி தொல் இருமல் ஈளை பித்தம்
மேலை குரல் கம்மல் வெங்கள நோய் _ மூலசுரம்
கவ்வியந்தேறு கன தாவிர விடமும்
செவ்வியங் கொள்ளவிடும் நேர்.”

செவ்வல்லி.
“செவ்வல்லிப்பூவுக்கு சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
ஒவ்வு மேகப்பிணியும் ஓய்வதன்றி _ இவ்வுலகில்
கண்ணின் நோய் தீரும் கனத்த பித்த இரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்.”

செரிகீரை .

“வயிற்றுக்கடுப்பு மலஞ்சீதம் பேதி
நியத்த ரத்தப்போக்கியை நிறுத்தும் _ குயத்தை ஒரு
பார் சரியக்கிஆட்டும் பருவ வணங்கரசே
பார் செரிக்கீரையது பார்.”

Advertisements