NOTES ON SIDDHA MEDICINE .

சித்த வைத்தியக் குறிப்புகள்.

சவ்வாது .
“சுரமும் தலைவலியும் துண்டத்தடைப்பும்
உரமுந்து நோயோடு உடற்குள் _ பரவி மிகக்
குத்துகின்ற வாயுவும் போம் கோதில் சவ்வாதினுக்கு
மெத்த வசியமுமாம் விள்.”

சங்கங்குப்பி .

“கரப்பான் கிரந்தி கருங்குட்ட ரோகம்
உரப்பான மேகம் ஒழியும் _ கருவாம்
கருங்கிரந்தி செவ்வாப்பு கட்டிகளும் ஏகும்
அருஞ்சங்கங்கங் குப்பிக் கறி.”

சதுரக்கள்ளி .

“கரப்பான் சொறியும் கடியும் கபமும்
உரப்பான குன்மம் ஒழிக்கும் _ நிரப்பான
பேதி தரும் சீதமென்ற பேச்சகற்றும் பூவுலகில்
சாது சதுரக்கள்ளிதான்.”

சம்பீரம் .

“தாகம் குனக நோய் தாழா சிலிபத நோய்
வேகங்கொள் உன்மாதம் வீறு பித்தம் _ மாகண்ணோய்
கன்ன நோய் வாந்தியும் போம் கட்டுவாதித் தொழிலில்
மன் எலுமிச்சங்கனியை வாழ்த்து.”

சாதிக்காய் .

“தாது நட்டம் பேதி சருவாசியம் சிர நோய்
ஓது சுவாசம் காசம் உட்கிரணி _ வேதோ
ஏலக்காய் வரும் பிணிபோம் ஏற்றமயல் பித்தம்
குலக்கய் அருந்துவர்க்குக் கூறு.”

சாதி பத்திரி .

“சாதி தரும் பத்திரிக்கும் தாபசுரம் தணியும்
ஓதுகின்ற பித்தம் உயரும் காண் _ தாது விருத்தி
உண்டாம் கிராணியோட கழிச்சல் அறும்
பண்டாங்குரையே பகர்.”

சாதிலிங்கம் .

“ஆதி இரத உருக்காதலால் சாதிலிங்கம்
ஓதில் இரத கணம் உற்று உடலில் _ தீது புரி
குட்டம் கிரந்தி கொடுஞ்சூலை வாதமுதல்
உட்டங்கு நோய்களை ஓட்டும்.”

சிற்றாமணக்கு .

“மருந்தின் அழலும் வளியின் மூலத்துள்
பொருந்து அழலும் போக்கும் _ குருந்திற்கு
நன்றாய் என வளர்க்கும் நாளும் அழல் தணிக்கும்
சிற்றாமணக்கின் நெய்தான் நேர்.”

சிறுநாகப்பூ .

“சிறுநாகப்பூவினது செய்கை சொல்வோம்
குறியாடும் மேகத்தைக் கொல்லும் _ நெறியை விட்டு
தீதா செல் வாயுவைத் தீர்க்கும் இருமல் போகும்
கோத்ஹ இதை அறிந்து கொள்.”

சிற்றரத்தை .

வாந்தி பித்தம் கரப்பான் வாத சிரோரோகம்
சேர்ந்த கபம் முத்தோடம் சீதமொடு _ நேர்ந்த சுரம்
மற்றரத்தை காட்டி வரும் இருமலௌம் தீரும்
சிற்றரத்தை வன் மருந்தால் தீர்.”

சிவனார் வேம்பு .

“சாய்க்கு இடிப்புண் பழம்புண் சர்மகுட்டம் பிளவை
தீக்கடுக்கால் வன்பெரு நோய் சிந்துமா _ நோய்க்கு
விதையாதி வேம்பினா மெய்க்கழகு காலை
உதையாதி வேம்பினால் நண்ணு.”

சிறுகீரை .

“கண்புகைச்சல் நேத்திர நோய் காசம் படலம் ரசப்
புண் கிரிச்சரம் சோபை பொங்கு பித்தம் _ மண்பரவு
தாவர விடங்கள் போம் தாழாத்திருவும் உண்டாம்
கூவு சிறுகீரைதனைக் கொள்.”

சிறுகுறிஞ்சான் .

“சிறுகுறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவு திரவு இல்லாத மாதர் _ உறு உலகில்
அத்திகரம் அகலாக் கடி விடமும்
அத்தி அகல தகர்க்குத்தான்.”

சிறுபீளை .

“பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக் கிரிச்சரம்
பூண்ட திரி தோடம் இவை போகும் காண் – தாண்டி
பரியவேளைத்துரத்தும் பார்வையில் கண் மாதே
சிறிய பீளைக்கு சிதைத்து.”

சிறு புள்ளடி .
“மாந்தகணம் பேராமம் வன்மந்தம் நீங்கிவிடும்
ஓய்ந்த முலைப்பாலும் ஒழுகும் காண் _ மோந்தே
சிறுபுள்ளடி உதையாத்தே மலர்ப் பூங்கோதாய்
சிறுபுள்ளடியை நிதம் சேர்.”

Advertisements