சித்த மருத்துவக் குறிப்புகள்.

குறுந்தொட்டி.

“வாதசுரம் தாகம் மதலை கணம் மாந்தம்
சீதசுரம் பித்தமென செப்பனங்கும் _ ஓது நம்பால்
சேரா முட்டிக்கேகும் செய்ய மடமயிலே
பேராமுட்டித் தூரைப்பேசு.”

கொடிக்கள்ளி.

“துய்ய கரப்பன் சொறி சிரங்கும் புண்ணும் போம்
செய்யகடி குட்டநோய் சேருமோ _ மெய்யில்
அடிக்கடி சேர் குன்மவலி அத்தனையும் தீரும்
கொடிகள்ளிப் பாலுக்குக் கூறு.”

கொத்தான் .

“சித்தரறிவார் செறிகுழலே நீ கேளாய்
கொத்தான் மிகக்குளிர்ச்சி கொண்டக்கால் _ சுத்தம்
பிரமேகம் உட்கிரிச்சம் பித்தம் இளைப்பும்
அறுமே தவறாது அறி.”

கொத்தமல்லி .

“கொத்தமல்லிக்கீரை உண்ணில் கோர அரோசகம் போம்
பித்தமெல்லாம் வேறுடனே பேரும் காண் _ சத்துவமாம்
வெச்சனவே போகம் விளையும் சுரம் தீரும்
கச்சுமுலை மாதே நீ காண்.”

கொடிவேலி.

“கட்டி விரணம் கிரந்தி கால்கள் அரையாப்பு
கட்டி சூலை வீக்கங்காழ் மூலம் _ முட்டி இரத்தக்
கட்டு நீரேற்றம் கனத்த பெரு வயிறும்
அட்டும் கொடிவேலியாம்.”

கோரோசனை .

“நீரிழிவு மேகசுரம் நீங்கா கனல் வேகம்
கூரிய உன்மாதம் குழந்தைகள் நோய் _ பாரகபம்
வீறும் மசூரியும் போம் வேகந்தண்ணில் இரண்டாய்
கூறும் கோரோசனைகட்கு.”

கோட்டம் .

“நாட்டில் உறு வெட்டை நடுக்கம் எனும் நோய்கள்
கோட்டம் எனச்சொன்னால் சூலையும் காண் _ கூட்டில்
கர தோடம் தொண்டை நோய் தோலாத பித்தம்
பரடேசம் போமே பறந்து.”

கோழி ஆவாரை இலை .

“ஆழி சுற்றும் வையத்தடர்ந்த பேராமை ஒரு
நாழியினில் கெட்டு நலியும் காண் _ தோழிகள்
கோழி அவரைத் தழைக்குக் குன்மம் குடல் வாதம்
ஊழி வரைக்கும் வாரா ஓது.”

கோவை .

“கண்ணும் குளிர்ச்சி பெறும் காசமொடு வாயுவறும்
புண்ணும் சிரங்கும் புரண்டேகும் _ நண்ணுடலம்
மதிலார் வெப்பகலும் வீழாநீர் கட்டேகும்
கோதிலா கோவை இலைக்கு.”

கோழிமுட்டை .

“வாத பித்தம் சேர்ப்பிக்கும் வன் தோடம் புண் போக்கும்
தாதுவை மெத்தத் தழைப்பிக்கும் _ ஓது
கபத்தை அடக்கும் கரப்பான் உண்டாக்கும்
இபத்தை உறும் கோழிமுட்டை எண்.”

சந்தனம் .

“கோதில் சந்தஞ் சீதோஷ்ணம் கொண்டிருக்கும்
வாத பித்தம் ஐயம் மனப்பிரமை ஓது சுரம்
மேகந் தனித்தாகம் வெப்பு சொறியும் போக்கும்
ஆகத் தனக்குறுதி ஆம்.”

சங்கம் வேர் .

“சங்கம் வேர்ப்பட்டை சளி இருமலை சுரத்தை
அங்கவாதக் கடுப்பை ஆட தப்பை _ பங்கமே
செய்யும் கிரந்தியை உள் தீக்கால் கிருமியை இவ்
வையந் தனிலொழிக்குமால்.”

சர்க்கரை .
“அருந்து மருந்தின் அனுபானமாக
பொருந்து மடல் வாந்தி பித்தம் போக்கும் _ அருந்த ருசி
மதிக்கபத்தை நீற்று மகிழ்ச்சி உண்டாக்கு
நறுஞ்சர்க்கரை.”

சடாமாஞ்சில் .

“குட்டம் சிலந்தி விடம் கோர பிராண சுரம்
உட்டினங்கால் பேதி கண்ணோய் ஒட்டிருமல் _ கொட்டிரத்த
பித்தம் இரப்பேகும் பெருங்கோரை என்றுரைக்கும்
சுத்த சடாமாஞ்சில் தனைச் சொல்.”

சதகுப்பை .

“வாதமொடு சூதிகா வாதம் சிரசு நோய்
மோது செவி நோய் கபநோய் மூடுசுரம் _ ஓதுகின்ற
மூளைக்கடுப்பு முதிர் பீனசம் போக்கும்
ஞால் சதகுப்பை நாடு.”

தகவல் தொகுப்பு – புதுவை ஞானம்.

Advertisements