PLAY WAY ETHNO MATHS

வேடிக்கைக் கணக்கு.
1.

ஒரு ஊரில் ஒரு பெரிய பனை மரம் இருந்தது.அதன் உயரம் 48 அடிகளாகும்.
அந்த மரத்தில் ஒரு ஓணான் 6அங்குலம் உயரே ஏறி ஒரு அங்குலம் கீழே
வழுக்கி விழுந்து விடும். எப்படியும் பனை மரத்தின் உச்சியை அடைந்து விட
வேண்டும் என்ற மன உறுதியுடன் ஓணான் பல நாட்கள் முயன்று இறுதியில்
உச்சியையும் அடைந்து விட்டது என்றால் அது எத்தனை நாள் முயற்சி
செய்திருக்க வேண்டும்?.

2.
ஒரு குதிரை ஒரு நாளைக்கு 30 மைல் வேகம் ஓடக்கூடியது.அதைத்
துரத்திக்கொண்டு ஒரு நாய் ஓடுகிறது. அந்த நாய் முதல் நாள், ஒரு மைல்
வேகத்திலும் இரண்டாம் நாள் இரண்டு மைல் வேகத்திலும், மூன்றாம் நாள்
மூன்று மைல் வேகத்திலும்,இப்படியாகநாளுக்கு நாள் ஒரு மைல் அதிக
வேகத்தில் ஓடும் சக்தி வாய்ந்தது.அந்த நாய் குதிரையைத் துரத்திக்
கொண்டே ஓடி, பல நாட்களுக்குப்பின் குதிரையை முந்தி விடுகிறது.
எத்தனையாவது நாளில் நாய் குதிரையை முந்தி இருக்கும் ?

3.

சில மாடுகள் மூன்று வயல்களில் சம எண்ணிக்கையாக மேய்ந்தன. பிறகு ஐந்து
வழிகளில் சம எண்ணிக்கையாகச் சென்றன. சம எண்ணிக்கையில் பிரிந்து ஏழு
குளங்களில் தண்ணீர் குடித்தன.பின்னர் ஒன்பது மரங்களின் அடியில் சம
எண்ணிக்கையில் பிரிந்து நின்றன. பின் பத்து வாசல்கள் வழியாக சம
எண்ணிக்கையாய் பிரிந்து வீடுசென்றன.அப்ப்டியானால் மொத்த மாடுகள் எத்தனை?

4.

ஒரு கடிகாரத்தில் ஆரு மணி ஆகும் போது ஆறு மணி அடித்து முடிக்க ஐந்து
செகண்டுகள் ஆகின்றன. அப்படி ஆனால் பன்னிரண்டு மணி ஆகும் போது
12 தடவை மணி அடித்து முடிக்க எத்தனை செகண்டுகள் ஆகும்?

5.
ஒரு ஊரில் ஒரு பணக்காரக் குடும்பம் இருந்தது. அதில் ஆறு சகோதரர்கள்
இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சகோதரி இருந்தாள், என்றால்
அக்குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எவ்வளவு?

6.

1,2,3,4,5,6,7,8,9 என்ற எண்களைக் கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ,
வகுத்தோ செய்து முடிவில் 100 என்ற விடையை மட்டும் வரச்செய்ய வேண்டும்.
எண்களின் ஏறு வரிசையை மாற்றவே கூடாது. எண்களில் எதையும் ஒதுக்கவும்
கூடாது.

எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் தருகிறோம். அது போலப் பல வழிகளைக்
கண்டு பிடிக்க வேண்டும்.

1+2 +3 + 4 + 5 +6 + 7 + (8 x 9) = 100.

____________________________________________________________________