Notes on siddhamedicine
____________________________
சித்த மருத்துவக் குறிப்புகள்.
____________________________

காட்டு சீரகம் .

“கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும்
மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி
கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும்
காட்டு நற்சீரகத்தைக் காண்.”

காந்தம் .

“காந்தத்தால் சோபை குன்மம் காமில மேகம் பாண்டு
சேர்ந்த திரி தோடம் வெட்டை சீதம்கால் _ ஓந்த பசி
பேருதரங்கண்ணோய் பிரமியம் நீர் ஆமை போம்
ஓரினிறை ஆயுள் உறும் உண்.”

கார்போக அரிசி.

“கார்போகமாம் அரிசி கண்டால் கரப்பான் புண்
பீர்சருவ நஞ்சிவை போம் பித்தமுண்டாம் _ பார்மீதில்
வாதகபம் நமைச்சல் வன்சொறி சிரங்கு அறும்
சீர் மலர் குழலாய் செப்பு.”

கிளியூரல் பட்டை .

“மணவர்க்கமாகும் வருகரத்தைப் போக்கும்
தணலாகிய வெப்பைத் தணிக்கும் குணமார்
கிளியூரல் பட்டையது சீதம் பயிலும்
அளியூரல் கூந்தன் மின்னே ஆய்.”

கிரந்தி நாயகம்.

“சீதமது மாவிஷமும் தீரும் விழி நோயகலும்
பூதமொடு மருளும் போகும் காண் _ மேதினியுட்
ஆயகத்துப் புண் கிரந்தி ஆறு மயிலே கிரந்தி
நாயகத்தினாலே நவில்.”

கூகை நீர்.

“கூகை நீற்றால் மாதர் குய்ய நோய் வித்திரதி
ஆகமென்னும் மார்பு நோய் அண்டுமோ _போகம் அதில்
வீரியமும் உண்டாகும் வீழ்கிருமி நோயோடு
தூர் இருமல் ஈளையும் போம் சொல்.”

குங்குமப்பூ.

“விந்து நஷ்டம் தாகம் அண்டம் மேகசலம் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி_ முந்து கண்ணில்
தங்குமப்பூவோடு உறு நோய் சர்த்தி இவை நீங்கவென்றால்
குங்குமப்பூ ஓரிதழைக் கொள்.”

குக்கில்.

“காச சுவாசம் கனத்த மேகக்கட்டி
வீசு விஷக்கடி விரிச்ச குட்டம் _ பேசு
படர் தாமர சிரங்கு பண்டை விரணங்கள்
இடர் செய்யில் குந்திரிக்கம் எந்து.

குறிஞ்சான்.

” சிறு குறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவுதிரம் இல்லாத மாதர் _ குறுமுலகில்
அத்தி சுரமும் அகலாக்கடி விஷமும்
தத்தி அகலத் தகர்த்தான்.”

குன்றி மணி .

“நேத்திர நோய் பித்தம் நிறமமுங்கல் காமாலை
வேர்த்திடும் தாபச்சோப வெப்புடனே _ கோத்திட்ட
ஐய முதல் யாவும் போம் ஆயிழையே காட்டிலுறை
செய்ய குன்றியின் விதையைச் சேர்.”

கொம்பு பாகல் .

“மருந்துகளின் நற்குணத்தை மாற்றும் அ·தொன்றோ
திருந்தவலி வாதத்தைச் சேர்க்கும் _ பொருந்து பித்தம்
கூட்டம் அவபத்தியத்தைக் கொண்டிருக்கும் வன்கரப்பான்
காட்டும் கொMபு பாகற்காய்.”

கொன்றை .

“மலக்கிருமி ஓடும் மது நீர் குடலாந்
தலத்து நோயும் குலைத்து சாயும் _ நிலத்துள்
என்றைக்கும் வாடாத இன்பமலர்க் கொம்பே
கொன்றைப் பசு மலரைக் கொள்.”

கொல்லன் கோவை .

“சூலை பாண்டு திரிதோஷம் அக்கி வெப்பு கண்ட
மாலைக்குடலின்வலி மாகுட்டம் _ ஆலவிடம்
உட்கரப்பான் மெய் எரிப்பும் உண்டோ கொல்லங்கோவை
கைக்குளிருக்க வின்னிங்காண்.”

குங்கிலியம்.

“பெரும்பாடு மேகம் போம் பேரா உடலில்
அரும்பிய புண் ஆறும் இவையல்லால் _ துரும்பாம்
எலும்புருக்கி புண் சீழும் ஏகும் உலகில்
சலம் பருகும் குங்கிலியத்தால்.”

குரோசானி ஓமம்.

“வெகு மூத்திரம் வாதம் வீரிய நட்டம் புண்
உகு பேதி உட்கடுப்புனூடே _ மிகு கரப்பான்
தீராக்கபம் இவை போம் செய்யக் குரோசானி என்றால்
வாரா மயக்கம் உறுமால்.”

குமட்டி .

“பற்று தீப்பூச்சிகலை பற்பலவா மந்தத்தை
சுற்றுந்திரப் பித்தத்தை தூவிட _ முற்றும்
அரிக்கும் அட்டி யாயிலை மாதங்கருரை அன்றோ
வரிக்குமட்டியாய் இலை மாதோ.”

குப்பைமேனி.

“தந்த மூலப்பிணி தீத்தந்திடு புண் சர்வ விஷம்
உந்து குன்மம் வாத உதிர மூலந்தினவு
சூலஞ் சுவாசம் தொடர்ந்து பீனசம் கபம் போம்
ஞாலங்கொள் மேனியதனால்.”

தகவல் தொகுப்பு _ புதுவை ஞானம்.

Advertisements