வேடிக்கைக் கணக்கு.
அமரர்,திரு.நாக முத்தையா எழுதிப் பதிப்பித்தது.

மணிவண்ணன் ஒருநாள் தாமரைக் குளத்துக்குக் குளிக்கச் சென்றான் . அங்கு நிறையப் பூக்கள் பூத்திருப்பதைக் கண்டான். கரையோரமாக இருந்த
பூக்களையெல்லாம் பறித்து வந்து கரையில் சேர்த்தான்.

அவற்றை இரண்டு இரண்டாக கூறு கட்டினான்.- ஒரு பூ மிஞ்சியது.

மூன்று மூன்றாகக் கூறு கட்டினான் – இரண்டு பூக்கள் மிஞ்சின.

நான்கு நான்காகக் கூறு கட்டினான் – முன்று பூக்கள் மிஞ்சின .

ஐந்து ஐந்தாகக் கூறு கட்டினான் – நான்கு பூக்கள் மிஞ்சின.

று று கக் கூறுகட்டினான் – ஐந்து பூக்கள் மிஞ்சின.

ஏழு ஏழு கக் கூறு கட்டினான் – ஒரு பூ கூட மிஞ்சவில்லை.

அப்படியென்றால் அவன் பறித்து வந்த பூக்கள் எத்தனை ?

2 .

ஒரு கிழவி கூடை நிறைய எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு
அயலூர் சந்தைக்குச் சென்றாள். அப்போது ஒருவன் சைக்கிளில் வந்து
கிழவியின் மீது மோதி விட்டான். கிழவி அதிர்ச்சியில் கூடையைக் கீழே போட்டு விட்டாள். பழங்கள் நாலாபுரமும் சிதறி ஓடின. சைக்கிளில் வந்தவன்
எல்லாப் பழங்களையும் பொறுக்கி கூடையில் போட்டுவிட்டு கிழவியைப் பார்த்து, “ பாட்டி! நீ மொத்தம் எத்தனை பழங்கள் கொண்டு வந்தாய்? எனக் கேட்டான்.

“மொத்தம் எத்தனைப் பழங்கள் என்பது எனக்குத் தெரியாது.
னால் ஒன்று மட்டும் தெரியும்.
இரண்டு இரண்டாகக் கூறு கட்டினால் ஒரு பழம் மிஞ்சும்.
மூன்று மூன்றாகக் கூறு கட்டினாலும் ஒரு பழம் மிஞ்சும்.
நான்கு நான்காகக் கூறுகட்டினாலும் ஒரு பழம் மிஞ்சும்.
ஐந்து ஐந்தாகக் கூறு கட்டினாலும் ஒரு பழம் மிஞ்சும்.
று றாகக் கூறு கட்டினாலும் ஒரு பழம் மிஞ்சும்
ஏழு ஏழாகக் கூறு கட்டினால் ஒரு பழம் கூட மிஞ்சாது.”
என்று கிழவி பதில் சொன்னாள்.

“அப்படியென்றால், நீ கொண்டு வந்த பழங்களையெல்லாம் சரியாகப் பொறுக்கிக் கூடையில் வைத்து விட்டேன்,” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
கூடையில் இருந்த மொத்தப் பழங்கள் எத்தனை ?

– 3 _

இராமனும் கண்ணனும் அயலூர்ச் சந்தைக்குச் சென்றனர். ளுக்கு ஐம்பது தேங்காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். வழியில் ஐம்பது சுங்கச் சாவடிகள் இருந்தன. ள் ஒன்றுக்கு ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தேங்காய்கள் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். இச்சட்டத்தையொட்டி 50 சுங்கச்சாவடிகளிலும் ளுக்கொன்று வீதம் தேங்காய்களைக் கொடுத்துவிட்டு வீடு திரும்புகையில் அவர்களிடம் சில தேங்காய்கள் மிஞ்சின. மிஞ்சிய தேங்காய்கள் எத்தனை ? அவை மிஞ்சியது எவ்வாறு ?

தகவல் தொகுப்பு _ புதுவை ஞானம்.

Advertisements