பகுதி – 5 .

கண்டங்கத்திரி *

“காசசுவாசம் கதித்த சய மந்தமனல்
வீசு சுரம் சன்னி விளைதோடம் சுறுங்கால்
டூத்தரயுணிற் கா எரிகாரம்சேர் கண்டங்
கத்திரி யுண்டாகில் காண்.”

சுவாசகாசம்,சயம்,அனல்,சுரம்,சன்னி என்பன தீரும்.

கற்றாழை *

“ பொல்லாமேகம் கபம் புழு சூலை குட்டரசம்
அல்லாடு மந்தம் பகரந்த குன்மம் _ எல்லாம் விட்
டேகுமரிக்கு எரிச்சல் கீரிச்சரமும்
கு குமரிக்கு மருண்டு.”

மேகம், கபம்,புழு, சூலை, குட்டம், மந்தம், குன்மம், எரிச்சல், நீர்த்தாரை,நீர்புழை, எரிச்சல் தீரும்.

கருநொச்சி *

“மாதக்கடுப்பகலும் மாறாத பினசம் போம்
ஓதப்பேய் ஓடி ஒளிக்கும் காண் – வேதை செய்யும்
மண்டைக்குடைச்சலும் மாறும் கரு நொச்சிக்குப்
பண்டைத்தலைவலி போம்.”

மாதவ்டாய் தொடர்பான கடுப்பு, பீனசம்,
மண்டைக்குடைச்சலைத் தீர்க்கும்.

கழற்சி *
“விரைவாதம் சூலை அறும் வெட்டையனல் ஏகும்
திரை சேர்ந்த குன்மம் நிலையா – துறைசேர்
அழற்சி விலகும் அருந்தில் கசப்பாம்
கழற்சி இலை என்றுரைக்கும் காண்.”

உண்ணக்கசக்கும், விரைவாதம், சூலை, குன்மம்
போக்கும்.

கழுதைப்பால் *
“கழுதைப்பால் வாதம் கரப்பான் விரணம்
தழுதளையுள் வித்திரதிதானே – எழுகின்ற
ஒட்டிய புண் மேகமொடு சொரிசிரங்கு
கட்டி இவை போக்கும் கழறு.”

வாதம், கரப்பான், விரணம், புண், மேகம், சொரி, சிரங்கு,
கட்டி போகும்.

கள்ளி *

“நரம்புச் சிலந்தி நளிர்வாத சன்னி
உரம்பெரிய வாதமிவை ஓடும் – செரும்புலியில்
கள்ளிமரப்பட்டயினால் காரநொச்சிப்பட்டையது
துள்ளு சன்னிவாத மகற்று..”

நரம்புச்சிலந்தி, வாதசனி என்பன போக்கும்.

கஸ்தூரி மஞ்சள் *

“ தலைவலி,நீரேற்றம், சளையாத மேகம்
உலைவு தரு பீனசத்தினோடே – வலி சுரப்பு
விஞ்சுகடி விடமும் வீறு விரணங்களும் போம்
மஞ்சட்கிழங்குக்கு மால். “

தலைவலி,நீரேற்றம், மேகம், கடிவிடம்,விரணங்கள் போம்.

கஞ்சாக்கோரை *

“ மாந்தக்கழிசலும் மாந்தம் கணம் போம்
சேர்ந்த மூலத்தின் இவை அடங்கும் – பூந்தடக்கை
அன்னமே மேகம் அறும் கஞ்சாக்கோரையினை
உண்ண இருமை ஓது.”

மாந்தக்கழிசல், மாந்தம்,கணம் மூலம் மேகம் போம்.

களிப்பாக்கு *

“களிப்பாக்கு தின்றக்கால் கண்டத்துள் கோழை
ஒளிப்பாகக் கட்டு•துண்மை – தளிர்ப்பான
பித்த அரோசகம் போம் பேதிமிக உண்டாகும்
சித்த மகிழ்ச்சியும் செப்பு.”

தொண்டையுள் கோழை போகும்.பித்தம் அரோசகம் போகும்.
பேதி உண்டாகும். மணமகிழ்ச்சி உண்டாகும்.

கற்பூரம் *
“ கிருமி சலதோடம் கிளைவலிப்பு சன்னி
பொருமல் மந்தம் அங்கிபட்டபுண் – எரிசுரங்கள்
வாந்தி பித்தம் சீதமுறு வாதம் செவி முகநோய்கள்
சன்னி கற்பூரம் ஒன்றால் சாற்று.”

கிருமி சலதோடம், சன்னி என்பன தீருமுட்கொள்ள வாந்தி பித்தம் தீரும்.
வெளித்தடவ வாதம் செவிமுகம் நோய்கள் தீரும்.

கல்நார் *
“ காசபித்தம் வாதங்கடுப்பீறு நோய் எரிவு வீசு
வீசுசர்த்தி நீரடைப்பு விந்து நட்டம் – பேசும் அசை
திண்ணாரைக்கூவு மந்தம் தீகுடர் கால் தாகமிவை
கன்னாரைக் கூவ விடுங்கான்.”

காசபித்தம், வாதக்கடுப்பு, எரிச்சல், வாந்தி, நீரடைப்பு ,விந்துநட்டம்
மாந்தம் நீர்த்தாரை எரிச்சல் என்பன நீங்கும்.

கரு ஊமத்தை *

“விந்திரதம் கட்டும் எழின்மேனிதரும் குட்டமொடு
வந்த வியர்ப்பரிப்பு மாற்றும் காண் – முந்த
பெருமத்தம் செய்சுரத்தை போக்குங்கயப்பாங்
சருமத்தம் நன் மூலி காண்.”

கணப்பூண்டு*
“கணப் பூண்டிலைமேகக்கட்டியைக் கரைக்கும்
மணக்குமிக வாய்க்கு மதுரஞ் – சிணுக்கான
வாதகணம் பித்தகணம் மாறும் பசுரத்தின் கப
பேதம் அறப்போக்குமெனப் பேசு.”

களாவேர் *

“விடத்துறு நோய் பித்தம் ஐயம் வேர்வை அதிதாகம்
திடத்த உதிரத்தினது சிக்கில் _ சடத்து எழும்
அக்னிமந்தம் இவை அண்டா தொருநாளும்
சிக்கெனக் களாவேரைச் சேர்.”

தவல் தொகுப்பு – – புதுவை ஞானம்.

Advertisements