EPIGRAPH – CHIDAMBARAM.
சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள்.
————————————————
காலிங்க ராயனின் சிதம்பரத்து வெண்பாக் கல்வெட்டுக்கள்.
(தென்னிந்திய சாஸனங்கள் – volume.IV-எண்- 225.)
———————————————————————–
1. எல்லை கடலா விகல் வேந்த ரைக்கவர்ந்த
செல்வமெலாந் தில்லைச்சிற்றம்பலத்துத் – தொல்லைத்
திருக்கொடுங்கை பொய்மேய்ந்தான் திண்மைக் கலியின்
தருக்கொடுங்க வேல் கூத்தன்றான்.

2. தில்லையிற்பொன் னம்பலத்தைச் செம்பொனால் மேய்ந்துவா
நெல்லையைப்பொன் நாக்கினான் என்பரால் – ஒல்லை
வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும்
இடைவேந்தன் தொண்டையர் கோ.

3, தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்
பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான் – ஒன்னார்க்குக்
குற்றம் பலகண்டோன் கோனிழைக்கும் வேல்கூத்தன்
சிற்றபலத்திலே சென்று.

4. பொன்னம் பலக்கூத்த ராடம் பலமணவிற்
பொன்னம் பலக்கூத்தர் பொன்மேய்ந்தார் – தென்னர்
மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக்
குலமன்னர் செல்வமெலாம் கொண்டு.

5. தில்லைசிற் றம்பலத்தே பேரம் பலந்தன்னை
மல்லற் கடற்றானை வாட்கூத்தன் – வில்லவர்கோன்
அம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றல்தனை மாற்றியகோன்
செம்புமேய் வித்தான் னெறிந்து.

6. ஏனை வடவரசர் இட்டிடைந்த செம்பொன்னால்
ஏனெ லெனத்தில்லை நாயகருக்- கானெய்
சொரிகலமா மாமயிலைத் தொண்டையர் கோன் கூத்தன்
பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.

7. தெள்ளு புனற்றில்லைச் சிற்றம்பலத்தார்க்குத்
தள்ளியெதி முரம்பலந்தா தன் பாதம் – புள்ளுண்ண
நற்பிக்கங் கொண்ட நரலோக வீரன்செம்
பொற்படிக்கங் கண்டான் புரிந்து.

8. இட்டா நெழிற்றில்லை யெம்மாற் கிசைவிளங்க
மட்டார் பொழின்மணவில் வாழ்கூத்தன் – ஒட்டரரை
யின்பமற்ற தீத்தானம் ஏற்றினான் ஈண்டொள்சேர்
செம்போற் றணிக்காளஞ் செய்து.

9. ஆகுந் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம்
நீடுந் திருவிளக்கு நீடமைத்தான் – கூடார்
அடிக்கத் தினைநரியும் புள்ளுந் —
கடிக்கப் பெருங்கூத்தன்றான்.

10. பொன்னம் பலம்சூழப் பொன்னின் திருவிளக்கால்
மன்னும் திருச்சுற்று வந்தமைத்தான் – தென்னவர்தம்
பூவேறு வார்குழலா ரோடும் பொரும்பேற
மாபெறு தொண்டையார் மன்.

11. சிற்றம் பலத்தானை யேத்தினான் தெவிடத்துக்
கொற்றத்தால் வ்ந்த கொழு நெதியால் – பற்றார்
தருக்கட்ட வஞ்சினவேற்றா னார்மணவில் கூத்தன்
திருக்கட்ட மஞ்சனமும் செய்து.

12.தொல்லைப் பதித்தில்லைக் கூத்தர்க்குத் தொண்டையர்கோன்
எல்லைத் திசைக்கரிகள் எட்டளவும் – சொல்லப்போய்ச்
சாலமுது பேய் நடிக்க{த் தார்தாங்கு} தொண்டையர்கோன்
பாலமுது செய்வித்தான் பார்த்து.

13. ஆடுந் தெளிதேனை ஆயிர நாழிநெய்யால்
ஆடும் படிகண்டான் அன்றினர்கள் – ஓடுந்
திறங்கண்ட தானன் சினக்களிற்றான் ஞாலம்
அறங்கண்ட தொண்டையர்கோன் ஆங்கு.

14.நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் ப்ருமான் திருப்பதியம் – முட்டாமைக்
கேம்போர்க்கு மண்டம்தைச் செய்தான்றெவ் வேந்தர்கெட
வாட்போக்குந் தொண்டையர்கோன் மன்.

15.மல்லற் குலவரையா நூற்றுக்கால் மண்டபத்தைத்
தில்லைப்பிரானுக்குச் செய்தமைத்தான் – கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்
கிழிவுகண்டான் தொண்டையர்கோ நேறு.

16. தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை
எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான் – தொல்லைநீர்
மண்மகளைத் தங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி
உண்மகிழும் தொண்டையர்கோ னுற்று.

17. புட்கரணி கல்சாத்து வித்தான் பொற் கோயிலின் வாய்
விக்கரணம் பார்ப்படத்தன் மேல் விதித்து – திக்களவு
மாநடத்திக் கோனடத்தும் வாட்கூத்தன் மண்ணிலறத்
தானடத்தி நீடுவித்தான் ருன்.

18.வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்
மாதுசூழ் பாக மகிழ்ந்தருளும் – போதுசூழ்
தில்லைக்கே செய்தான் திசைக்களிறு போய்நிற்கும்
எல்லைக்கே செய்தலிங்க ரேறு.

19. நடங்கவின்கொள் அம்பலத்து நாயகச் செந்தேனின்
இடங்கவின்கொள் பச்சையிளந்தேனுக்(கு) – அடங்கார்
பருமா ளிகைமேல் படுகைத்த கூத்தன்
திருமாளிகையமைத்தான் சென்று.

20. எவ்வுலகு மெவ்வுயிரு மீன்று மெழிலழியாச்
செவ்வியாள் கோயிற் ரிருச்சுற்றை – பவ்வஞ்சூழ்
எல்லைவட்டம் தன்கோற் கியல்விட்ட வாட்கூத்தன்
தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.

21. வாளுடைய பொன்பொதுவின் (மன்னனிடமாகும்)
ஆளுடைய பாவைக்கபிடேகம் – வேளுடைய
பொற்பினான் பொன்னம்பலக்கூத்தன் பாங்குகட
வெற்பினான் சாத்தினான் நேறு.

22. சேதாம்பல் வாய்மயிற்குந் தில்லையந் தேவிக்குப்
பீதாம் பரஞ்சமைத்தான் பேரொலிநீர் -பேன்மா
அலைகின்ற வெல்லை யணுக்கே யாக
மலை நின்ற தொண்டையார் மன்.

23. செல்வி {திருத்தறங்கடென்}னகரித் தில்லைக்கே
நல்லமகப் பாலெண்¦ணெய் நாடோறும் – செல்லத்தான்
கண்டான் அரும்பையர் கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாம்
கொண்டானந் தொண்டயர் கோன்.

24. பொன்னு லகுதாம் புலியூர் தொழுவதற்கே
உன்னி யிழிகின்ற தொக்குமால் – தென்னர்
(குடிவி)டா மன்செகுத்த கூத்தன்செம் பொன்னின்
கொடிபுறஞ் செய்த குழாம்.

25. ஆதிசெம்பொ நம்பலத்தி நம்மா நெழுந்தருளும்
வீதியும்பொன் மேய்ந்தனைனாய் மேல்விளக்குஞ் – சோதிக்
கொடியுடைத்தாய் பொன்னாற் குறுகவலா னென்றும்
படியமைத்தான் றொண்டையர் கோன் பார்த்து.

26. நாயகர் வீதி யெழுந்தருளும் நன்னாளால்
தூய கருவெழு தூபத்தாற் – போயொளிசேர்
வான்மறைக்கக் கண்டானிம் மண்மகளை வன்புகழால்
தான்மறை கூத்தன் சமைத்து.

27. {பரனுமை வேட்பவே சைவாசிரியர்}
திருவுருவமான திருக்கோலம் பெருகொளியாற்
காட்டினான் தில்லைக்கே காசினிவாய் வெங்கலியை
ஓட்டினான் தொண்டையர் கோன்.

28. மன்னுதிகழ் தில்லைக்கே வாணிக் கரசகணந்
துன்றும் பொழின்மணவிற் றொண்டைமான் – என்றும்
இருந்துண்ணக் கண்டான் இகல்வேந்த ராகம்
பருந்துண்ணக் கண்டான் பரிந்து.

29. தில்லைத் தியாவலி {விண்சிற் பஞ்சவினி}
எல்லை நிலங்கொண் டிறையிழிச்சித் – தில்லை
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்
குறை முடிப்பான் தொண்டையர் கோ.

30. என்றும் பெறுதலா லேரா ரெழிற்புலியூர்
மன்றி நடனுக்கு மாமத்தக் – குன்று
கொடுத்தருளி கொடுங்கலி வாராமே
தடுத்தனன் தொண்டையற்கோன்றான்.

31. முத்திறத்தாரீசன் முதற்றிறத்தப் பாடியவா
றோத்தமைத்த செப்பேட்டினுள்ளெழுதி – இத்தலந்தி
னெல்லைக் கிவா யிசையெழுதி னான் கூத்தன்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.

32. தில்லை யொளிரும் தெளிதேன் ஒளிதழைப்ப
நல்லதிரு நந்தாவனஞ்சமைத்தான் – வில்லத்திற்
கோட்டங்கொள் வாள்வேந்தர் கொற்றக்களியானை
யீட்டங்கொள் காலிங்க ரேறு.

33. நூறாயிரங்கமுகு மாங்கமைத் தான்சினத்தின்
மாறாக வெல்களிற்று வாட்கூத்தன் – கூறாளும்
வல்லி சிறுகிடைக்கு வான்வளர மாநடஞ்செய்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.

34. மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
பேசற் றவற்றைப் பெருமவழியும் – ஈசற்குத்
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்து
மன்புலியானை நடக்க வைத்து.

35. ஓங்கியபொன் நம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரபி
ஆங்களித்தா நேற்றெதிர்த்தா ராயினழையார் – தரங்கா
தொருக்கியுட லாவியுயிர்த்துநாட் போக்கி
யிருக்கவென்ற தொண்டையா ரேறு.

36. தொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமர்ந் தார்கோயில்
கல்லா லெடுத்தமைத்தான் காசினியிற் – றொல்லை
மறைவளர்க்க வெங்கலியை மாற்றிவழு வாமல்
அறம் வளர்க்கக் காலிங்க னாய்ந்து.

37. தில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர
எல்லையில் பேரேரிக் கெழின்மதகு – கல்லினாற்
றானமைத்தான் றெவ்வேந்தர்க் கெல்லாந் தலந்தவிர
வானமத்தான் தொண்டயர் மன்.

தகவல் தொகுப்பு _ புதுவை ஞானம்.
ஆதாரம் – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தமிழ் விரிவுரையாளர் புலவர்.துறை பட்டபிராமன் எம்,ஏ, எம்.பில்.
தொகுத்து வெளியிட்டது.

Advertisements