PART _ 3

ஊமத்தை *

“வாதம் அறும் பித்தமயக்கம் அறும் மாநிலத்தில்
தீது க்ரப்பான் சிரங்கு அகலும் கோதாய் கேள்
மாமத்தமாகும் வரநசி எல்லாம் போகும்
ஊமத்தங்காய் என்றுரை.”

வாதம் பித்தமயக்கம், கரப்பான், சிரங்கு என்பன ஊமத்தங்காய் போக்கும்.

ஊசிக்காந்தம் *

“காந்தத்தால் சோபை குன்மம் காமிலமேகம் பாண்டு
சேர்ந்ததிரி தோடம் வெட்டை சீதங்கால் _ ஓய்ந்தபசி
பேருதரம் கண்நோய் பிரமியம்நீர் மையும் போம்
ஒரினிறை யுட் உறும் உன்.”

சோபை குன்மம், மேகம்,பாண்டு, திரிதோடம், வெட்டை,சீதம்
அசீரணம்,பெருவயிறு, கண்நோய், பிரமியம்,நீர், மை
என்பன நீங்கும்.

எலுமிச்சை *

“தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”

தாகம், யானைக்கால், பயித்தியம், பித்தம், கண்ணோய்,
வாந்தி என்பன தீரும்.

பகுதி 4

எருக்கு *

“எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத்
திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது.”

கட்டிகளை உடைத்துக் கரைக்கும், வாயுவைப் போக்கும்,
பல செந்தூரங்களை அரைக்க எருக்கம்பால் பயன் படும். சந்நி நோய் வலி போக்கும்.

எருமை மோர் *

“தாகம் கிரகணி சலக்கழிச்சல் காமாலை
கம் குடையு மற்றுப்போ மோகமில்லா
தேவாமிரதமு மாஞ்சீர் மானிடர் தமக்கு
மோவா மருந்து எருமை மோர்.”

தாகம், கிராணி, சகலக்கழிச்சல்,காமாலை, வ்யிற்றுக்குடைச்சல் தீரும்.

எண்ணெய் *

“புத்திநயங்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகளும்
சத்துவங் காந்தி தனி இளமை மெத்தவுண்டாம்
கண்ணோய் செவிநோய் கபால அழல் காசநோய்
புண்ணோய் போம் எண்ணெய்யால் போற்று.”

குளிர்ச்சி, பூரிப்பு, இளமை,கண்ணோய்,செவிநோய், மூளையின் வெப்பம், காசநோய் என்பன நீங்கும்.

எருமை வெண்ணெய் *

“எருமை வெண்ணெய்க்கு எரி நீரிழிவு
பருவ மயிலே கேள் இப்பாரில் _ திருமியுறும்
மந்தமாம் வாதமிகு மாறா சுபங்கரப்பான்
தொந்தமா நோயடருஞ் சொல்.”

நீரிழிவு , கிருமி, மந்தம், கரப்பான் நீக்கும்.

ஏலம் *

“தொண்டை வாய் கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோய் அதிசாரம் பன் மேகத்தால்
உண்டைபோல் எழும் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷசுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழும் சோமப்பிணி விந்து நட்டம் உள்
அண்டை ஈளை வன்பித்தம் இவைகலாம்
லமாம் கமழ் ஏலமருந்தே.”

தொண்டை, வாய், சூதங்களில் உள்ள புண்கள், அதிசாரம்
கட்டிகள் மூத்திர நோய் என்பன தீரும்.

ஓரிதழ் தாமரை *

“ ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்
மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்
குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை
படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்.”

மங்கையருக்கு பால் பெருகும் மார்பு பெருக்கும் ,
கோர மேகம் போக்கும்.

ஓமம்*

“சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம் – ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல். “

சீதசுரம், மந்தம், பொருமல், பேதி, இரைச்சல்,
கடுப்பு, வயிற்று நோய் என்பன தீரும்.

கந்தகம் *

“நெல்லிக்காய் நீள் பதிணென் குட்டமந்தம்
வல்லைகலிசை குன்ம வாயு கண்ணோய் _ பொல்லா
விடக்கடிவன் மேகநோய் வீறுசுரம் பேதி
திடக் கிரகணி கபம் போம் தேர். “

18 குட்டம், ஈரல் நோய்கள், குன்மவாயு,கண்ணோய்,
விடக்கடுவன்,மேகம்,சுரம்,பேதி, கிரகணி என்பன தீரும்.

கடுக்காய் *

“கடுக்காயும் தாயும் கருதில் ஒன்றென்றாலும்
கடுக்காய் அத்தாய்க்கு அதிகம் காண் நீ – நோய்
ஒட்டி உடல் தேற்றும் உற்றஅன்னையோ சுவைகளை
ஊட்டியுடல் தேற்றும் உவந்து.”

தாய்க்கு ஒத்த குணம் கொண்டது கடுக்காய் அது உடல் தேற்றும், நோய் அகற்றும்.

கடுகு ரோகணி *

மாந்தம் ஐயம் கரம் வாயுகரப்பன் மஞ்
சேர்ந்த மலக்கட்டு திரிதோடம் – பேர்ந்த பொட்டு
புண் வயிறு நோய் இவைபோம் பொற்கொடியே பேதி
உண்டாம் திண் கடுகுரோகணிக்குத் தேர்.”
மாந்தம்,ஐயம்,கரம்,வாயு,கரப்பான், மலக்கட்டு, திரிதோடம், புண்
வயிற்று நோய் என்பன தீரும்.

கருஞ்சீரகம் *

“கருஞ்சீரகந்தான் கரப்பானொடு புண்ணும்
கருஞ்சீராய் பீனிசமும் மாற்றும் – அருந்தினால்
காய்ச்சல் தலைவலியும் கண்வலியும் போம் உலகினில்
வாய்ச்ச மருந்தெனெவே வை.”

கரப்பான், புண்,பீனிசம், தலைவலி,காய்ச்சல்,கண்வலி
போக்கும்.

கடுகு *
“இடிகாசம் நாசி சூர் ஈளை கபம் பித்தம்
கடிவாத சீதக்கடுப்போ – உடலில்
– – – – – – – – – – – – – – – – – – –
படுகோட்டு நோயென்னும் பங்கிவை களைப்புண்.”

காசம், பீசைம்,இரைப்பு, பித்தம்,சீதக்கழிச்சல் போக்கும்.

கஸ்தூரி *
“சொல்லரும் வசியம் காந்தி சுகமுதல் அணுகும் பின்னும்
மெல்லியலார் தமக்கு நாதருத்தியாம் தலை நோய் ஏகும்
பல்லுரு கபமும் தீரும் பகரொணா பலமும் உண்டாம்
மல்லடர் சன்னி ரூட்சை மாறும் கஸ்தூரிக்கென்னே.”

முகத்தில் ஒளி,வாசனை, நாதம் விருத்தி,உண்டாகும்.
தலை நோய் கபம் தீரும்.

Advertisements