PART—2 NOTES ON SIDDHA MEDICINE
* ஆலமரம் *

“ சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை
கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் – நல் வின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்.”

மேகம், உட்கடுப்பு, நீரிழிவு போக்கும் லின் பழம்,விதை,
பூ என்பன.

* ஆகாசக் கருடன் கிழங்கு *

“அரையாப்பு வெள்ளையகலாக் கொறுக்கை
கரையாத கட்டி இவை காணார் – வரையில்
திருடரெனச் செல்லும் விடம்சேர் பாம்பும் அஞ்சும்
கருடன் கிழங்கதனைக் கண்டு.”

கொறுக்கைப்புண், அரையாப்பு, கட்டி பாம்பு விடம் என்பன
கருடன் கிழங்கால் நீங்கும்.

*ஆ டாதொடை *

“ஆடாடைப் பன்னம் ஐயாறுக்கும் வாதமுதற்
கோடாகொடி சுரத்தின் கோதொழிக்கும் நாடின்
மிகுத்தெழுந்து சன்னி பதிமூன்றும் விலக்கும்
அகத்து நோய் போக்கும் அறி.”

கோழையை நீக்கும் சன்னி 13-ம் போக்கும்.

* ஆளிவிதை *

“ வீக்கம் அதிவாந்தி பேனி வலி வாயு
தூக்கு நரம்பின் குத்தல் தொல் அழலை _ஓக்காளம்
மளி அருசி விரைவாதப்போக்கும்
ளிவிதை தன்னால் அறி.”

வீக்கம் , மிகு வாந்தி, வாதக்குடைச்சல், அரோசகம்
விரைவாதம் போக்கும் .

* இளநீர் *

“இளநீரால் வாதபித்தமேகு மனதும்
தெளிவாய்த் துவங்கு இருமிகு திருஷ்டி தொளிவும்
குளிர்ச்சியுமுண்டாகும் கொடிய அனல் நீங்கும்
தளர்ந்தகன நொய்யதாகும் சாற்று.”

வாதபித்தம் போகும் , கண் ஒளி கூடும், உட்கொள்ள
குளிர்ச்சி உடல் இலகுவாகும்.

* இலவங்கப்பத்திரி *

“ மேகசுரம் சீத்சுரம் வெட்டை சவாசங்காசம்
தாக பித்தம் வாந்தி சர்வாசிய நோய் மேகத்திறன்
கட்டியொடு தாதுநட்டம் கைப்புருசி போக்கிவிடும்
இட்ட இலவங்கத்தின் இலை.”

மேக சுரம், சீத சுரம், சுவாசகாசம், வாந்தி, மேகக்கட்டி,
தாதுநட்டம் என்பன போக்கும்.

* இந்துப்பு *

“ அட்ட குண்மம் அசுர்க்கர சூர் சீதபித்த துட்ட
ஐயம் நாடிப்புண் தோடங்கள் – கெட்ட மல கட்டு
விடவிந்துப்பை காமிய நோய் வன்கரப்பான்
விட்டுவிட இந்துப்பை விள்.”

8 வகை குண்மம்,ஐயம், புண், இந்துப்பை
உண்ண தீரும்.

– * இரசம் *

“விழிநோய் கிரந்தி குண்மம் மெய் சூலை புண்குட்
அழிகால் இல் விந்துவினால் அத்தை – வழியாய்ப்
புரியும் விதியாதும் புரியினோயெல்லாம்
இரியும் விதி யாதுமிலை.”

கிரந்தி, குண்மம், சூலை, கண்ணோய், என்பன தீரும்.

* இண்டு *

“ பீனிசத்தைப் போக்கும் பெருகியதோர் நீரேற்ற
தானசிக்கச் செய்யும் இது சத்தியங்காண்_ வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்.”

பீனிசம் , நீரேற்றம்,மண்டைக்குடைச்சல், சன்னி தீரும்.
• *இலுப்பை *

“புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.”

புண், புரை, நீரிழிவு, மூலம், இரத்தக்கடுப்பு தீரும்.
துவர்ப்பு சுவை உள்ளது.

• இலந்தை *

பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண் – மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை ந்றுங்கனியை எண்.”

பித்தம், மயக்கம், அருசி, வாந்தி போக்கும். வெறும்
வயிற்றில் உண்ண எரிச்சலை உண்டு பண்ணும்.

• இரஸ்தாளி வாழை *

“ வெவ்வாழை வெள்வாழை சேர்ந்தரஸ்தாளி மொந்தன்
ஒவ்வும் இதை நோயோர்க்கு உலகத்தில் – சவ்வருக்கு
வாழை மலைவாழை பசும் வாழை கருவாழைகளில்
ஊழி கருவாழை நன்றாம் ஓது.”

• இஞ்சி *

“இஞ்சிக்கிழங்கு இருமல் ஐயம் ஓக்காளம்
வஞ்சிக்கும் சன்னிசுரம் வன்பேதி விஞ்சுகின்ற
சூலையறும் வாதம்போம் தூண்டாத தீபனமாம்
வேலையுறுங் கண்ணாய் விளம்பு.”

இருமல், கோழை,சுரம், சன்னி,பேதி சூலை என்பன நீங்கும்.

• உள்ளி *

“ சன்னியோடு வாத்தலை நோவு தாளின் வலி
மன்னியவரு நீர்க்கோவை வன்சீதம் _ அன்னமே
உள்ளுளிக் காண்பாய் உளை முலைரோகமும் போம்
கொள்ளுளி தன்னால் வெகுண்டு.”

சன்னி,வாதநோய், தலைவலி, கால்வலி, பீனிசம்,
மூலம் என்பன தீரும்.

Advertisements