மகப்பேறு புத்திர பாக்கியம் உண்டாக.
சரக்குகள் –
பிரண்டை சமூலம் ( வேரோடு)
நல்லெண்ணெய் 2 லிட்டர்
பிரண்டை சமூலம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து எண்ணெயுடன் கலந்து கொள்க. இளவெதுப்பாய் பிரண்டை சமூலத்தை வெதுப்பி வெயிலில் வைத்துக் கலந்து கொள்ளவும். ஒரு கரண்டி உட்கொள்ளவும்.
அகத்தி –
மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்
வெந்திருந்த சனம் செரிக்கும்
வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்
நாளும் அகத்தி இலை திண்ணுபவர்க்கு”

.மருந்தீடு, கிரந்தி, வாய்வேக்காளம் பித்தம்
என்பன போம்.

அதிமதுரம் –
வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்
சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி
பாம்பு இவற்றின் விடம் நீங்கும்.

அதிவிடையம் –

“அதிவிடையஞ் சர்க்கராற்புத நோய் வெப்பு
கொதிமருவு கோழையொடு எதிர் வாந்தி
என்றுரைக்கும் நோய்க்கூட்டம் இல்லாதகற்றி விடும்
குன்றி நகர் முலையாய் கூறு.”

பேதி, வெப்பு, கோழை, வாந்தி என்றுள்ள நோய்கள் போகும்.
அரத்தை –

“ தொண்டையிற் கட்டும் கபத்தை தூரத்துரத்திவிடும்
பண்டை சீதத்தைப் பனகழக்கும்
கெண்டைவிழி மின்னேரகரப் பனை வேருக்கும் பசி கொடுக்கும் சொன்னோம் அரத்தை சுகம்.”

கபம்,சீதம், கரப்பான் நீக்கும் பசியைத்தரும்.

அத்தி –
“காரமோ உட்டினமாம் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைத் தலை நீழ இரத்தம் சேரும்
கிரிசாரத்தைப் போக்கும் கிளர் கோளி எனும்
மரச்சரும் பாலதனை வாங்கு.”

காரம், உட்டிணம், பித்தம், நீரிழிவு,லை,மூத்திரக்கோளாறுகள்
எல்லாம் அத்திமரப்பால் போக்கும்.

( தகவல் தொகுப்பாளரின் குறிப்பு –
முற்றிய அத்திமரத்தின் , கிழக்குத்திசையோடும் வேருக்கு அடியில் பள்ளம் தோண்டி, ஒரு புது மண் கலத்தை வைத்துவிட்டு,
அந்தவேரைக் கத்தியால் காயப்படுத்தி கீறினால் சொட்டுச் சொட்டாக நீர் துளிர்க்கும்.இரவு முழுவதும் மண் கலையத்தில் சொட்டவிட்டு மறு நாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இதனை அத்திக்கள் எனவும் சொல்வதுண்டு.)

அகில்
“தளர்ந்தலிருத்தருக்காம் தக்க மணத்தால்
வனைந்த சுரமணைத்துமோடு – வளந்திக்கு
மானே அகில் புகைக்கு வாந்தி அரோசகம் போம்
தானே தளர்ச்சி அறும் சாற்று.”

முதியார்க்கு கும் அணத்தல் சுரம் வாந்தி அரோசகம் தளர்ச்சி நீங்கும்.

அத்திப்பட்டை –
“ வீறு கடுப்பு இரத்தம் வெண் சீத இரத்தமோடு
நாறு விரணங்களெல்லாம் நாடாவாம் – கூறுங்கால்
அத்தி தரும் மேகம்போம் யிழையே எஞ்ஞான்றும்அத்திப்பால் பட்டை கறி.”

சீதபேதி, இரத்தபேதி,இரணங்கள், மேகம் எல்லாம் பால்,பட்டை,காய் என்றவற்றால் தீரும்.

அரிதாரம்-
“ தாகைத்தின் பேருரைக்க தால் கவுல் நோய் குட்டம்
நீளக்குளிர் காய்ச்சல் நீடுகபம் – நாளங்கொள்
துட்டப் பரங்கிப்புண் சூழ் அழுகன் மண்டை நோய்
கிட்டப்படுமோ கிளத்து.”

குளிர்காய்ச்சல், கபரோகம், பரங்கிப்புண்,தாடை நாக்கில் உண்டாகும் நோய்கள்,குட்டம்,அழுகண், மண்டை நோய்
என்பன நீங்கும்.

அசுவகந்தி –
“கொஞ்சம் துவர்ப்பாம் கொடிய சுயம் சூலை அரி
மிஞ்சு கரப்பான் பாண்டு வெப்பதப்பு – விஞ்சி
முசுவுறு தோடமும்போம் மோகம் அனலுண்டாம்
அசுவந்திக்கென்றறி.”

துவர்ப்பு ருசி உண்டு,சயம், சூலை,கரப்பான், பாண்டு என்பன நீங்கும். வெப்பம் உண்டாக்கி, தாது விருத்தி.

அவுரி

“ பெரிய அவுரித் தழைதான் ஓதுபதிணென்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் கும் – தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்க்கு உறுமாந்தம்
சீதம் அகற்றும் தெரி..”

நஞ்சுமுறிப்பான், வாத வெப்பம், காமாலை, மாந்தம்
சீதம் போகும்.

அமுரி –

“ காணாக்கடிபோம் கதித்தெழுந்த வீக்கமது
காணாது காயசித்தி கைகுளாம் ஐ பூணே
பதித்த கொங்கை மாதே பகர் மாந்தருள்
உதித்த சிறு நீருக்கென்றோது.”

காணாக்கடி, வீக்கம் நீங்கும்.காயகற்பமாகும்.

அபின் –

“நல்ல அபின் குணத்தை நாடறியும் நாம் புகல்வ
நல்ல குன்மம் வாதம் அருஞ்செலி நோய் பல்லில் வலி
பேதி மந்தம் அத்தி நோய் பீனசம் போம் வன்மை
சாதி உதர துத்திதான்”

குன்மம், வாதம், செவிநோய்,பல்வலி,பேதி,அத்திகரம்
நீங்கிடும் பீனசம்.

அக்ரகாரம் –

“அக்ரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயஞ்தோடுங்காண்.”

ஊழி நோய் தாக சுரம் போம்.

அரக்கு –
“குட்டம் அசுர்க்கு பித்தம் குன்மம் இரைப்பென்
புருக்கி பட்டிடு புண் கச்சூர் பங்கநோய் தொட்டோர்
அரக்கரக்குஞ் சன்னிகரம் ஐயம் இவைக்கெல்லாம்
அரக்குரக்கு நூலை அறி.”
குட்டம்,பித்தம்,குன்மம்,இரைப்பு,என்புருக்கி,சன்னிசுரம்,ஐயம் என்பன நீங்கும்.
தவல் தொகுப்பு  – புதுவை ஞானம்.
Aதாரம் எண்ணெய் வாகடம்

Advertisements