பூநீறு
—–
பாடினோம் மிந்தப்படி எண்ணூறு தனில்
பரிபாசை அதீதமெல்லாம் பார்த்தாய்ந்து
உமை தீமை இவ்விரண்டுந்தான் நாம்
சொன்னோம், ஆயிரமாய் காண்டமெட்டாம்
சாடினோமப் பொருளை அறிந்தாராகில்
சமர்த்தென்ன மெய்ஞானி அவர்க்கீடுண்டோ ?
பேடியாய்த் திரிந்ததனால் ஆவதென்ன ?
பேய்மக்காள் இதையறிந்து பேசுவீரே.

பேசுவோம் சகல கலைஞானமெல்லாம்
பேரான இந்நூலின் கருவியெல்லாம்
நாகவோ மகராதி வேதாந்தமப் பாடம்
நண்பான சிவயோகி நலமாய்க் காண்பார்
மூசுவோம் முப்புவின் சாதி நாலு ஊணியே
சொல்லுகின்றோம் உண்மையாக
வாசிவோம் வாசிமலர் பரிமணங்கள்
வசனிப்போம் வழலையென்றும் பெயரே.

வாலையென்ற பூநீறு இது மூன்றாகும்
வாத்தி துக்காதியெனு சமாத்தாம் பேரு
காலையெனும் சாதி மூன்று பேரு
முப்பு வாச்சர காயங்கள் முதலான தீதமாச்சு
நாலையென்ற பொருளெல்லாம் மூலமாச்சு
நியாயமாறாக யென்றால் முப்புதானும்
ஆலையென்ற கன்னிமது சலம் பொசிப்பார்
ஆத்துமாவின் நிலையறிந்தோராமே.

உரை : பூநீறு என்ற வாலை மூன்றாகும்.வாத்திதுக்காதி எனவும் முப்பு,
வாச்சரகாயம், கன்னிமது சலம் பொசிப்பார் என்பன வேறு பெயர்கள்.

முப்பு

அறிவோர்கள் முப்புவை அறிய வேண்டும்
அடையறிந்து சிவயோகம் செய்ய வேண்டும்
அறிவோர்கள் அதன்பிறகு வாசி காண வேணும்
மகத்தான அப்பியாசஞ் செய்ய வேண்டும்
அறிவோர்கள் அதன் பின்னர் கற்பமுன்ன வேண்டும்
அதன் நல்கலியறிய கிருதமுண்ண வேண்டும்
நறிவோர்கள் மவுன நிலை அறிய வேண்டும்
ஞான வேதாந்த மெய்ஞான பரகதியே.

உரை : முப்புவைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் தேவை. பின்னர்
சிவயோகம், காற்றைப் பற்றிய பிராணயாமம் செய்யவும். வாசியைப்பற்றிய
பயிற்சி பின்னர் கற்பம் அடுத்து நெய் என்பன தொடர்ச்சியானவைகள்
இவற்றை அடைய பேசாமை வேண்டும்.

பூநீரின் பெயர்கள்

பரமான குருபதமென்றும் சமமென்றும் பேரு
பரிவான பூதநிசி சையமென்றும் பேரு
அரமான அசிதமயப் பூவென்றும் பேரு
அக்களவு என்றதற்கு அதீதப் பேரு
சரமான சாத்திர வசமென்றும் பேரு
சர பரிவான பூத கலையமென்றும் பேரு
துறமான சாத்திரச் சன்னியென்றும் பேரு
துருவான பூநீறு இலட்சனத்தின் பேரே.

உரை :பூநீறின் பெயர்கள்- குருபதம்,சமம், அசிதமயப்பூ,
அக்களவு, சாத்திரவசம்,பூதகலையம், சாத்திரசன்னி என்பன.

பேரான வாமப்பூ வாழமணத்தானென்றும் பேரு
பேசினோம் சங்காதியென்றும் பேரு
வாரான ரவிசஞ்ச மென்றும் பேரு
வளமான சிவபோதமென்றும் பேரு
தேரான சிரோதயலமென்றும் பேரு
தெளிவான கருவடமென்ற்ம் பேரு
ஆரான ஆத்திரோடமென்றும் பேரு
அருளினோம் பூநீர்ன் லட்சனத்தின் பெயரே.

உரை: வாமப்பூ வாழமணத்தான், சங்காதி,இரவிசஞ்சம்,
சிரோதயலம், கருவடம், ஆத்திசிரோடம் என்பன பூநீரின் பெயர்கள்.

வாலைப்பூநீறு.

பூணமெனும் பூபதி நீர்க்காதுடமென்றும்
போதகமா என்றதற்குப் பேருண்டாச்சு
வாணமென்றும் வாஞ்சையென்றும் பேரு
வளமான பீசமெனுமதற்குப் பேரு
தானமெனு மணரும் வேதவித்தார மென்றும் பேரு
தாசவகை வினோத பூசமென்றதற்குப் பேரு
ஆனமெனும் ஆதவாழ் பூடென்றும் பேரு
அருளினோம் வாலைப் பூநீரின் லட்சணமே.

உரை : வாலைப்பூரின் வேறு பெயர்கள் : பூபதி
நீர்க்காதுடம்,பொதகமாவாஞ்சை,பீசம், வேதவித்தாரம்,
வினோத பூசம், ஆதவாழ்பூடு.

பூநீறது மூன்றினிட போதகமே
சொல்லிவிட்டோம் மாதரசே நீ கேளாய்
மதியறிவை சாதனை செய்து பூநீறது
மூன்றினுட புகழ் அதனையே . . . . . . .
யாரறிவார்பேணியது போலே
இயம்பினோம் உண்மையறி
பூநீறது மூன்றினுக்கு போதமயமாகில்
வாதமெலாம் மனதறிவால் வணங்கக் காண்பாய்
பூநீறு மூன்றினுட பொருளதனையே நாமறிந்தோம்
சேதியிது மாமயிலே செப்பு.

தகவல் தொகுப்பு :
புதுவை ஞானம்.

Advertisements