ரசவாதம் – பரிபாஷை.
———————
சபலம் : முப்பது பலமுள்ள காரீயத்தை எருக்கம் பாலால் அரைத்து கால்
பல அளவு மீதமாகும்வரை புடமிட்டுக்கொண்டே வர சபலமாகும். இவ்விதம்
ஈயத்திலிருந்தும் சபலம் தயாரிக்கலாம். இது தாதுவாதத்தில், ரஸக்கட்டில்
மிகச் சிறந்தது.

பிராமக கந்தகத்தின் தூளை பலத்தில் ஐந்தில் ஒரு பங்கு எடுத்து, கற்றாழை
வேர் ஜலத்தாலும் புளியாரை ஜலத்தாலும் வகைக்கு ஒரு நாள் அரைத்துக்
கொள்ளவும். இவ்விதமே பூநாக தெளதத்தையும் செய்து கொள்ளவும். பிறகு அத்துடன்

ஒரு பலம் காரீயமும் ஒரு பலம் ஈயமும் எட்டு நிஷ்க அளவு ரஸமும் சேர்த்து
நன்கு அரைக்கவும். அத்துடன் ரஸமும் ரஸகலத்துடனும் வீசம் பல அளவு
சேர்த்தரைத்து முன் கலந்தத்டன் சேர்க்கவும். பிறகு சூடான காடியினால் அலம்பி
விடவும். துத்தம் அரைப்பல அளவும் ரஸம் எட்டு குண்டுமணி எடையளவும் சேர்த்து
வஜ்ர மூக்ஷையிலிட்டு மூடி ஒன்பது வராட்டிகளில் துருத்தியால் ஊதி மூக்ஷையில்
உள்ள ஸத்வத்தை எடுத்து , திறந்த மூக்ஷையில் வங்க நாளத்தால் சுத்தி செய்யவும்.
அப்பஸ்மம் 5/8 பல அளவு எடுத்து அதன் மேல் சாம்பலையும் உப்பையும் காடியினால்
அரைத்துப் பூசிப் புடமிட 3/8 பலமாகும். அப்பஸ்மத்தால் என்பது மடங்கு காரீயத்தை
நிர்வாஹணம் செய்ய ரசம் கட்டுப்படும். இதற்குச் சபலம் என்று பெயர். பிறகு பாகல்
வேர் சூர்ணத்துடன் பந்துப் புடமிட காரீயன் பிரிந்து விடும். பிறகு எந்த நிராஸத்தையும்
கிரகிக்கும் சக்தி பெறும்.

பூநாக கெளதம் : மண்ணுண்ணிப் பாம்பின் மலத்தை ஜலத்தினால் அலம்பி எடுத்த
கரு நிறமுள்ள ஸத்வதுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

{ தகவல் தொகுப்பாளர் புதுவை ஞானத்தின் விசேடக் குறிப்பு : செம்மண் பூமியில்
எட்டடிக்கு எட்டடி சதுரத்தில் எட்டடி ஆழம் குழி தோண்டி, வரகு வைக்கோலில்
சுண்ணாம்பு நீர் தாரளமாகத் தெளித்து, குழியில் போட்டு செம்மண்ணால் மூடி, ஒரு
மண்டலம் கழித்துத் திறந்தால் குழி முழுக்க பூநாகம் எனப்படும் மண்புழுக்கள் நிறையக்
கிடைக்கும். இதனை நீங்கள் இயற்கை உரமாகப் பயன் படுத்தவோ தங்க பஸ்பம்
தயாரிக்கவோ பயன் படுத்த முடியும் – குடிகாட்டார் அடியேனுக்கு உபதேசித்து

அருளியது.}

துவந்து வானம் : இரண்டு திரவியங்களை ஒன்று சேர்த்து ஊதி உருக்குவது
துவந்துவானமாகும்.

பஞ்சனி : மாற்றைக்குறைக்குமளவில் வேத சக்திக்கு மீறி லோஹங்களைச் சேர்த்தல்

பஞ்சனியாகும்.

சுல்லிகா : பதங்கிச் சாயத்தினால் வெள்ளியிலோ லோஹத்திலோ ஏற்படும் சுல்லிகா
என்ற தங்கச் சாயம் வெகுநாட்கள் நிற்காது.

பதங்கீராகம் : லோஹரஞ்சனம் செய்த பின்னர் மிகுதியான சாயம் (ரஞ்சனம்) வெகு
நாட்கள் லோஹத்துடன் சேர்ந்து இருந்தால் அதற்கு பதங்கீராகம் எனப்பெயர்.

ஆவாபம் : உருகிய லோஹத்தில் மற்ற திரவியங்களைப் போடுவது ஆவாபமாகும்.
பிரதீவாபம் ஆச்சாதனம் என்று மாற்றுப்பெயர்களும் உண்டு.

அபிஷேகம்-நிர்வாபம் : நெருப்பிலுள்ள உருகிய லோஹத்தில் திரவத்தை ஊற்றுவது
அபிஷேகம் எனவும், உருகிய லோஹத்தை திரவத்தில் சாய்ப்பது நிர்வாபம் எனவும்
கருதப்படுகிறது.

பாககால லட்சணங்கள் : தாதுக்களில் இருந்து ஸத்வம் எடுக்கும் பொழுது நெருப்பு
நன்கு சுடருடனும் பிரகாசித்தும் வெண்மையான புகை வெளிவந்தும் இருப்பது
ஸத்வம் வெளிவருவதற்கு அறிகுறியாகும். இதற்கு சுத்தவார்த் எனப்பெயர்.
திரவியங்களை உருக்கும் பொழுது உருகும் திரவியத்தின் நிறத்துடன் ஜ்வாலை
வந்தால் உருக ஆரம்பித்து விட்டதற்கு அது அறிகுறியாகும். அதற்கு பீஜாவர்த்தம்
என்று பெயர்.

ஸ்வாங்க சீதம் – அக்னி சீதம் : அடுப்பை அணைக்காமலே தானாக ஆறியதற்கு
ஸ்வாங்க சீதம் எனப்பெயர்.நெருப்பிலிருந்து விலக்கி எடுத்து குளிர்ந்ததற்கு
அக்னி பஹிச்சீதம் என்று பெயர்.

ஸ்வேதனம் : க்ஷாரங்களையும் அம்லவர்க்கத்தையும் ஒளஷதிகளையும் சேர்த்து
தேவாலய யந்திரத்திலிட்டு வேகவைத்து அழுக்குகளை நெகிழ வைப்பதற்கு
ஸ்வேதனம் எனப்பெயர்.

மர்தனம் :இது ஸ்வேதனத்துக்குள்ள மருந்துகளுடன் காடி சேர்த்தரைப்பது.
வெளி அழுக்குகளைப் போக்க வல்லது.

மூர்ச்சனம் : இது இந்த ஒளஷதங்களாலேயே அதன் ஸ்வரூபம் மறையும் வரை
அரைத்து பிஸ்டி செய்வதாகும். இது நஷ்ட பிஷ்டி என்றும் கூறப்படுகிறது.
ஜல-பூமி-கிரிகஞ்சுக தோஷங்களைப் போக்க வல்லது.

உத்தாபனம் : இது நஷ்ட பிஷ்டமாக செய்ததை ஸ்வேதத்தாலும் தாபத்தாலும்
மறுபடியும் அதன் உருவத்திற்கு திரும்பிக் கொணருவதாகும்.

பாதனம் : முன் கூறிய ஒளஷதாதிகளால் நன்கரைக்கப்பட்ட ரஸத்தையே
பாதன யந்திரத்திலிட்டு மேலோ கீழோ குறுக்கிலோ ரஸமாகப் பிரித்துக்
கொணர்வது பாதனமாகும்.

ரோதனம் : இது ஜலத்தில் ரஸத்தை உப்பு சேர்த்து மூன்று தினம் வைப்பது
ஆகும். இது ரஸத்துக்கு பலமளிக்கும்.

நியமனம் : பலமடைந்த ரசத்தின் சஞ்சலத்தன்மையை நீக்க பானையிலிட்டு
வேகவைப்பது நியமனம் ஆகும்.

தீபனம் : கிராஸம் கொடுப்பதை ஜீர்ணிக்க தீபன சக்தி ஏற்படுத்த மூன்று தினம்
தாதுக்களுடனும் வேர்களுடனும் ஸ்வேதனம் செய்வது தீபனமாகும்.

சாரணம் – ஜாரணம்- கர்ப்பத்துருதி- பாஹ்யத்துருதி : கிராணத்தை சாரணம்
செய்வதும் அது ரஸத்தில் துருதி அடைவதும் ஜீர்ணமாவதுமாக மூன்று ந்லைகளும்
ஜாரணமாகும். கிராஸம்,பிண்டம், பரிணாமம் என்று இந்த மூன்று நிலைகளுக்கு
மாற்றுப்பெயர் உண்டு. ஸமுகம், நிர்முகம் என ஜாரணம் இரு வகைப்படும்.சுத்தமான
தங்கம் அல்லது வெள்ளியை பீஜமென்பர். ரஸத்தில் கால் வீசம் பங்கு பீஜத்தைக்
கொடுப்பது, ரஸத்துக்கு முகத்தை ஏற்படுத்தும்.முகமடைந்த ரஸம் கடினமான
லோஹங்களையும் ஜாரணம் செய்யும்.இது ஸமுக ஜாரணம்.திவ்யெளஷதிகளின்
சேர்க்கையால் பீஜம் இல்லாமலே ஜாரணம் செய்வது நிர்முக ஜாரணம் ஆகும்.

ரஸத்தில் கிராஸத்தைக் கொடுப்பது சாதாரணம் எனவும், கொடுத்த கிராஸம்
ரஸத்துடன் திரவமாகி சேருவதற்கு கர்ப்பத்துருதி எனவும், வெளியிலேயே
கிராஸத்தைத் திரவமாக்கிப் பின்னர் ரசத்துடன் சேர்ப்பதற்கு பாஹ்யதுருதி எனவும்

கூறப்படுகிறது. ஒட்டாமலும் திரவமாகவும் லேசாகவும் காந்தியுடனும் ரஸத்துடன்
சேராமல் உருகி நிற்பது துருதியின் லட்சணமாகும். உருகித் திரவமான கிராசத்தை
பிடயந்திர உதவியால் ஜீர்ணிப்பதே ஜாரணமாகும்.

பிடம் : க்ஷாரங்கள், அம்லவர்க்கம், கந்தகம் முதலிய தாதுப்பொருட்கள்,
மூத்திரவாகம், உப்புக்கள் இவைகளால் ரஸத்திற்கு ஜீர்ணசக்தி அளிப்பதற்கு தயார்

செய்யப்பட்டது பீடமாகும்.

ரஞ்சனம் ; ரஸத்தில் ஸித்தமான பீஜம் தாதுக்கள் முதலியவற்றை ஜாரணம் செய்வதால்
மஞ்சள் முதலிய நிறங்களை ஏற்படுத்துவது ரஞ்சனமாகும்.

ஸாரணம் : இது தைல யந்திரத்திலிட்ட ரஸத்தில் தங்கம் முதலியவைகள் சேர்த்து
அதிக வேதம் செய்ய உபயோகமாகும் ஸம்ஸ்காரம் ஆகும்.

வேதம் : வெகு சீக்கிரம் பரவக்கூடிய மருந்துகளால் செய்யப்பட்டு ரஸம் லோஹங்களின்

எல்லா அணுக்களிலும் பரவி லோஹத்தன்மையை மாற்றும் தன்மை இந்த ஸம்ஸ்காரத்

தினால் ஏற்படுகின்றது. இது லேப வேதம், க்ஷேப வேதம்,குந்த வேதம், சப்த வேதம்,

தூமவேதம் என ஐவகைப்பட்டது. தங்கம் முதலியவைகளின் மேல் தடவி வராஹபுடம்
போட லேபவேதமும் உருகிய லோஹத்தில் தூவுவதால் க்ஷேப வேதமும், கிடுக்கிகளால்
ஏந்திய ரசத்தால் உருகிய லோஹத்தைக் குத்தி எடுப்பது குந்த வேதம் எனவும் ,
புகையும் நெருப்பிலிட்ட ரஸத்தின் புகையால் வேதம் செய்வது தூமவேதம் எனவும்,
வாயில் ரசத்தை அடக்கிக் கொண்டு ஊதுகுழாயால் எற்படும் வேதம் சப்த வேதம்
எனவும் கருதப்படுகிறது.

உத்தாடணம் : ஸித்த ரஸத்தின் அழுக்கை நீக்கி நிறத்தை அதிகப்படுத்துவது
உத்தாடணம் ஆகும்.

ஸ்வேதனம் : க்ஷாரங்கள் அமிலங்கள் போன்றவைகளுடன் பானையிலிட்டு மூடி
பூமியினுள் புதைத்து வைப்பது ஸ்வேதனம் ஆகும்.

ஸந்யாஸம் : இது ரஸத்தை மற்ற ஒளஷதங்களுடன் பானையிலிட்டு மூடி நெருப்புள்ள

அடுப்பினுள் வைப்பதாகும்.
ஸ்வேதனமும் ஸ்ந்யாசமும் ரஸத்திற்கு குணத்தையும்
பிரபாவத்தையும்
அதிகப்படுத்தவும், சீக்கிரமாக லோஹத்திலும் தேகத்திலும் பரவும்
சக்தி அளிக்க வல்லவை.

பரிபாஷை முற்றுப்பெற்றது.

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements