ரசவாதம் தொடர்ச்சி பகுதி – 2-
TAMIL INDIAN ALCHEMY Part – 2 –

மர்த்தனம்
———–
சுண்னாம்பு முதலிய ஸ்வேதனத்தில் கூறப்பட்டுள்ள சரக்குகளுடன் பேய்த்தும்மட்டி
சரக்கொண்ணை , அழிஞ்சில் , கரு ஊமத்தை , திரிகடு , இவை வகைக்கு சம எடை
சேர்த்து ரசத்தின் பதினாறில் ஒரு பங்கு, ரசத்துடன் கூட்டித் தப்த கல்வத்தில்
தான்யாம்பலத்தினால் ஒரு நாள் முழுவதும் அரைத்து சூடான காடியினால் அலம்பவும்.
இவ்விதம் 21 நாள் செய்யவும். (பின் கூறப்படும் அப்ரக ஜாரணம், பீஜ ஜாரணம் செய்த பிறகு
இந்த மர்த்தனம் செய்தால் ரசத்தின் அழுக்கைப்போக்கி ‘ ராசம்’ என்னும் வர்ணமேற்றும்
சம்ஸ்காரம் செய்வதற்கு உதவுகிறது.

மூர்ச்சனமும் உத்தாபனமும்

கடுகு ஆடு தீண்டாப்பாலை , சித்திரகம், திரிபலை, பால் முதுக்கங்கிழங்கு, காட்டுக்கரணை
ஈச்வரமூலி, மணத்தக்காளி, அவுரிவேர், வசம்பு, குருந்தோட்டி, கற்றாழை, கரு ஊமத்தை, ஆவாரை,
விஷ்ணுக்கிராந்தி, அழிஞ்சில், காவுஜபான், பாதாள கருடன் கிழங்கு,இவைகளின் சாறும் எருக்கம்பாலும்
விட்டு ரசத்தை தப்த கல்பத்திலிட்டு ரசத்தின் உருவம் மாறும் வரை அரைத்து மூஷையிட்டு மூடி
பூதாயந்திரத்தில் எரிக்கவும். இவ்விதம் 21 தடவை பூதாயந்திரத்தில் பாகம் செய்யவும். ரசம் மூர்ச்சை அடையும்.

(உருவம் மாறி மற்ற திரவங்களுடன் ஒன்றாகக் கலத்தல்) மூர்ச்சனை செய்தபிறகு ரசத்தை சூடான
காடியிலாவது வெந்நீரிலாவது அலம்பி எடுக்கவும்.

பாதனம்.
———-

ஊர்த்துவ பாதனம்:

வட்டத்திருப்பி, பிரமி சித்திரகம் புளியாரை, விஷ்ணுக்கிராந்தி, கற்றாழை, முன்¨னைலை, பூபாடலி
பாதிரி, நொச்சி, காகைச்சுண்டை, தண்ணீர்விட்டான், இஞ்சி, தேவதாளிப்பீர்க்கு, தில பர்ணீ, அவுரி
இலை, சரக்கொண்ணைப்பட்டை, பால்முதுக்கன், அழிஞ்சில், தேவதாரு இவைகளின் சாறு அல்லது
கஷாயத்தில் ரசத்தை அதன் நான்கில் ஒரு பங்கு சுத்தத் தாம்ரப்பொடியுடன் சேர்த்தரைத்து ஊர்த்துவ
பாதன எந்திரத்தில் ஒரு நாள் எரித்து தானாக ஆறியவுடன் பிரித்து மேல் சேர்ந்திருக்கும் ரசத்தை
எடுத்து முன் கூறிய சரக்குகளின் சாறு அல்லது கஷாயத்தால் (முன்போல் நான்கிலொரு பங்கு தாரப்
பொடியுடன் சேர்த்து) அரைத்து ஊர்த்துவ பாதனம் செய்யவும்.இவ்விதம் 7 தடவை செய்யவும்.

அதப்பாதனம்:
திரிகடு, உப்பு, சித்ரமூலம்,கடுகு, முருங்கைப்பட்டை, ரசத்துக்கு சமம் சேர்த்து தப்த கல்வத்தில்
தான்யாம்லம் விட்டரைத்துப் பாதன யந்திரத்தின் மேலிருக்கும் பானையினுள் தடவி இரு பானைகளையும்
சேர்த்து மண்சீலை செய்து, மேல் பானையில் லகு புடம் போட கீழ்ப்பானையில் ரசம் வந்து தங்கும்.
இவ்விதம் 7 தடவை செய்யவும்.

நிர்யக பாதனம்:
ரசத்துக்கு சம எடை தான்யாப்ரகம் கூட்டி ஒரு யாமம் தாண்யாம்லத்தினாலரைத்து திர்யக்பாதன யந்திரத்தில்

கடுந்தீயிட்டெரித்து எடுக்கவும். இவ்விதம் அப்ரகத்தின் ஸ்தானத்தில் கந்தகம், ஸ்வர்ணமாஷிகம் ,விமலை
இவைகளை ரசத்திற்கு சம எடையும், தாம்ரத்தின் ஸ்தானத்தில் ஸ்வர்னம், வெள்ளி, காந்தம் உருக்கு, இவை
ரசத்திற்கு கால் பங்கு சுத்திகரித்து சேர்த்தும் ஊர்த்வ-திர்யக் பாதனங்கள் செய்விக்க , அதனதன்
சேர்க்கைக்குத் தக்கவாறு விசேஷ குணங்களுடன் சுத்தி ஏற்படும். இயற்கையாகவோ செயற்கயாகவோ
ரசத்துடன் சேர்ந்திருக்கும் நாகமும் வங்கமும் தாம்ரம் போன்ற லோகத்துடன் சேர்ந்து ரசத்திலிருந்து பிரிந்து

விடுகின்றன. இவ்வித பாதன சம்ஸ்காரத்தில் மேற்கூறிய பாதன யந்திரங்கள் கிடைக்காவிடில்
தீபிகாயந்திரத்திலும் பாதனம் செய்யலாம்.

நிரோதனம் :
முன் கூறப்பட்டுள்ள சம்ஸ்காரங்களால் சக்தி இழந்து ஜடமாக இருக்கும் ரசத்துக்கு வீரியமளிக்க இந்த
சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. ஒரு ஸ்தாலியில் ( ஆப்யாயன யந்திரம்) ரசத்தையிட்டு அதன் மேல்
உப்பைப் பொடி செய்து தூவி , கொந்சம் ஜலமும் விட்டு ஸ்தாலியை சராவத்தால் மூடி மண் சீலையிட்டு
பானைமேல் லகு (குக்குட) புடமிடவும். இவ்விதம் 7 தடவ நிரோதனம் செய்ய ரசம் நல்ல வீரியம்
உள்ளதாகும்.

நியாமனம் :
புளியங்காய், பால்முதுக்கன், ஈச்வரமூலி, உப்பு, கரிசிலாங்கண்ணி,காட்டுப்பழுபாகலிலை , வேப்பிலை
இவைகளத் தான்யாம்பலம் விட்டரைத்து தான்யாம்லத்திலேயே கரைத்து அதில் ரசத்தை நியாமக யந்திரத்தில் 7

நாள் ஸ்வேதனம் செய்ய ரசத்தின் சபலத்தன்மை நீங்கி கட்டுப்படும்.

தீபனம் :

நிலாவாரை, மிளகு, யவச்சாரம்,ஸர்ஜக்ஷாரம்
, நவச்சாரம், ஜாதிப்பூ, மல்லி , செங்கழுநீர்ப்பூ
நிலக்கடம்பு, குசும்பப்பூ, படிக்காரம் , ஐந்து உப்புகள், கடுகு முருங்கை வேர், அன்னபேதி
முன்னை, கற்றாழை, பாதாள கருடன் கிழங்கு, திப்பிலி, பால்முதுக்கன், காட்டுப்பழுபாகல்,
வெள்ளைக்காகனம், பூனைக்காலி தேன், சித்திர மூலம், காகைச்சுண்டை, எல்லாவற்றையும்
அம்ல கணத்தினால் அரைத்துக் கல்கம் செய்துகொண்டுஅதன் நடுவே ரசத்தை வைத்து டோலா
எந்திரத்தில் ஒரு நாள் எரித்து எடுக்கவும். இவ்விதம் 7 நாட்கள் செய்யவும். இதனால் ரசத்துக்கு
நல்ல தீபன சக்தி உண்டாகி கிராசம் ஏற்கத் தகுதி ஏற்படும்.

அநுவாசம் :

இவ்விதம் செய்யப்பட்ட ரசத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 7 நாட்கள் பாவனைகள் செய்ய அநுவாசனமாகும்.
இந்த ஒன்பது சஸ்காரங்களால் கஞ்சுகம், ஒள்பாதிகம், யெளகிகம் போன்ற எல்லா தோஷங்களும் நீங்கி
பாதரசம் எல்லாவித ஒளஷதங்களிலும் உபயோகிக்கத்தகுதி உள்ளதாகிறது.