ரச சம்ஸ்காரங்கள்
——————-
{ ரசம் என்பது திரவ ரூபத்தில் உள்ள திடப்பொருளான , ஆங்கிலத்தில் நாம்
MERCURY எனவழைக்கும் பாதரசத்தைக் குறிக்கும். உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்த
அந்நாளைய அறிவியாளர்களும் மருத்துவர்களும் ஆகிய ரசவாதிகள் ( ALCHEMIST)
இந்தப் பாதரசத்தைப் பக்குவப்படுத்தி ( பாஷாணங்களை முறித்து மருந்து செய்வதற்குப்
பக்குவப்படுத்துவது போலவே) .பயன்படுத்தினார்கள்.இந்த முறைக்கு ரசவாதம் என்பது பெயர்.
இதனை இரும்பைத் தங்கமாக்கும் வித்தை எனத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் ஏராளம்.
MENDEL TABLES என நாம் ரசாயண வேதியல் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா ? அந்த
MENDEL ஒரு ரசவாதி தான். அவர் கொடுத்து வைத்தவர் வெளிநாட்டில் பிறந்ததால் உலக
அங்கீகாரம் கிடைத்தது. ரசவாதம் பற்றி ஏராளமான பாடல்களை ஓலைச்சுவடிகளில் எழுதி
வைத்த உள்ளூர் சித்தர்களுக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை.தமிழ் வளர்ச்சிக்காகவே அவதரித்து
“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என முழங்கிக் கொண்டு இருப்பவர்கள் இவ்வளவு உன்னதமான
அறிவியல் போதித்த சித்தர்களையும் அவர்கள் விட்டுச் சென்ற ஓலைகளையும் செல்லரிக்கவிட்டு
சல்லாபிக்கிறார்கள்.( தொகுப்பாளரின் வயிற்ரெரிச்சல் குறிப்பு இது, மன்னித்து விடுங்கள்.)

சம்ஸ்காரங்கள் பதினெட்டு வகையாகக் கூறப்பட்டுள்ளன.அவை யாவன:-
1 . ஸ்வேதனம் 2. மூர்ச்சனம் 3. மர்த்தனம் 4. உத்தாபனம் 5.பாதனம் 6. நிரோதனம்
7. நியமனம் 8. தீபனம் 9.அனுவாசனம் 10. சாரனம் 11.ஜாரனம் 12.கர்ப்பத்துருதி
13.பாஹ்யத்துருதி 14. ரஞ்சனம் 15.ஸாரணம் 16அனுசாரணம் 17.பிரதிஸாரணம்
18 வேதம்
இவைகளில் முதலில் கூறப்பட்டுள்ள ஒன்பது ஸம்காரங்கள் ( செய்முறைகள் )
ரசத்தை சுத்தி செய்து ஒளஷதங்களில் ( மருந்துகளில்).உபயோகிப்பதற்குத் தகுதி
உள்ளதாகச் செய்கின்றன. பின் கூறப்பட்டுள்ள ஒன்பது சம்ஸ்காரங்கள் சுத்தி செய்யப்பட்ட
ரஸத்தை தேக வேதத்திற்கும் (ரசாயண சிகிச்சை) லோகவேதத்திற்கும் ( ரசவாதம்) தகுதி
உள்ளதாகச் செய்கின்றன.

1,ஸ்வேதனம்.

ஒரு தடவை சுத்தி செய்வதற்கு 100 அல்லது 50 அல்லது 25 பலத்துக்குக் குறையாமல் ரஸத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். (இங்கு ஒரு பலம் என்று கூறப்பட்ட அளவு சுமார் 50 கிராமுக்குச் சமம்.)

காந்தத்தினால் செய்யப்பட்ட கல்வத்தில் ரசத்தைப்போட்டு சுண்ணாம்பு, ஒட்டடை, கொடிவேலி
வேர்ப்பட்டை, திரிபலை , வெல்லம், ஆட்டுரோமம் சுட்ட சாம்பல் ,செஙகல், கற்றாழை, உப்பு ,
கண்டங்கத்திரி , முள்ளுக்கத்திரி , திப்பிலி , கடுகு , காட்டுப்பழு பாகலிலை இவைகளை வகைக்கு
ரசத்தின் பதினாறில் ஒரு பங்கு சேர்த்து தான்யாம்பலம் விட்டு மூன்று தினங்கள் அறைக்கவும்.

தான்யாம்பலம் செய்யும் முறை
_____________________________
யவை, கோதுமை,சிறுமணி அரிசி, உளுந்து, பயறு, கேழ்வரகு, தினை போன்ற தான்யங்களை
கிடத்தமட்டில் உமி நீக்கி தான்யத்திற்கு நான்கு பங்கு ஜலத்தில் ஊறவைத்து அதில் சிறு புள்ளடி,
பொன்னாங்கண்ணி, வெள்ளைச்சாரடை, சிவப்புச்சாரடை,சித்திரகம், கருசலாங்கண்ணி
விஷ்ணுகிராந்தி ,தண்ணீர்விட்டான் கிழங்கு, ஈச்வரமூலி, கொட்டைக்கரந்தை,வெள்ளைக்காகணம்,
நெய்சட்டிப்பூண்டு,திரிபலை இவைகளைத் தாண்யத்தின் நான்கில் ஒரு பங்கு சேர்த்துப் புளிக்கும்
வரை சேர்த்துப் புளிக்கும் வரை வைத்து புளித்தவுடன் வடிகட்டி எடுக்கவும்.

தான்யாம்பலத்தை மூன்று நாட்களரைத்த பின் சூடான காடி விட்டலம்பி ரசத்தைத் தனிப்படுத்தவும்.
பிறகு உப்பு, கடுகு, திரி கடு முள்ளங்கி சித்திரகம், திரிபலை வெள்ளைச்சாரடை , ஆடு தீண்டாப்பாலை,
சிறுகீரை, காஞ்சூரி, இஞ்சி, மஞ்சள்,நாகபலா (துத்தி), நவச்சாரம் இவைகளை சம எடை எடுத்துத்
தான்யாம்பலம் விட்டு நன்கரைத்து ஒரு அங்குல கனமாகத் துணியில் தடவி , அதன் நடுவில்
முன் தயாராகி இருக்கும் ரசத்தை விட்டு முடிச்சு கட்டி தான்யாம்பலத்துடன் கூடிய தாம்ர பாத்திரத்தில்
தோலாயந்திரத்தில் {* தோலாயந்திரம் = தப்த கல்வம். பூதாயந்திரம் போன்று வரும் பரிபாஷை பதங்களுக்கு
பரிபாஷ பற்றிய உல்லாசத்தில் விவரணம் கொடுக்கப்படும்.)ஒரு தினம் முழுவதும் எரித்து எடுத்து சூடான
காடியால் அலம்பி எடுக்கவும். இவ்விதம்
21 தடவை ஸ்வேதனம் செய்யவும். (தொடரும்)
தகவல் தொகுப்பு :
புதுவை ஞானம்.

Advertisements