MEDICINAL  HERBS _ SIDDHA     _ 2

மருத்துவ மூலிகைகள் தொடர்ச்சி.
———————
” மறுப்பது உடல் நோய் மருந்து எனலாகும்
மறுப்பது உளநோய் மருந்து எனலாகும்
மறுப்பது இனி நோய் வராதிருப்ப
மறுப்பது சாவை மருந்து எனலாகும்.”

– திருமூலர் -.

கடந்த கட்டுரையில் முசுமுசுக்கை பற்றிப் பேசினோம் அல்லவா ?
அந்த மூலிகை பற்றி பஞ்சகாவிய நிகண்டு என்ன சொல்கிறது எனில்:

” பேரான விரங்கு மாதிரை யென்றும் பேரு
பேசினோம் மயகண்ட மயங்குறுதியென்றும்
ஆரான வாலனட்டக மென்றும் பேரு
அருளான தாக்கிப் பிடிப்பானென்றும் பேரு
சூரான கணை மேலாதி யென்றதற்குப் பேரு
செடிமேல் படரியென்றதற்குப் பேரு
பாரான பரங்கொடி யாழ்மூலி யென்றும் பேரு
பாடினோம் முசுமுசுக்கையதற்குப் பேரே.”

உரை : விரங்கு,மாதிரை,மயகண்ட மயங்குறுதி,வாலனட்டகம்,
தாங்கிப்பிடிப்பான், கணை மேலாதி,செடி மேல் படரி,பரங்கொடி
யாழ்மூலி என்பவை முசுமுசுக்கையின் பெயர்கள். இதனை நெய்யில்
வதக்கிச் சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.இதன் தாவர இயல்
பெயர் Mukiya maderaspatana.
முசுமுசுக்கை, ஒரு கொடிபோல் படரும் செடி.
BRISTLY BRYONIA – BRYONIA SCABRA என்றும் சொல்வதுண்டு.

வேறு.

சிறு நீரகக் கல் மருத்துவம்:
_________________________________

“சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண் ”

( தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)

சுக்கின் பெயர்கள்.
_________________

“மகத்தான வர்க்கமென்று நாகராதி என்று
மடவான வீயமென்தற்குப் பேரு
அகத்தான வகநாதமென்றும் பேரு
அருளினோம் வலதமென்றதற்குப் பேரு
வகத்தான வர்க்கொம்பென்றும் பேரு
வசனித்தோம் மஞ்சத்த மென்றும் பேரு
நகத்தான நாக்குமென்றும் பேரு
நளினமதாய் சொல்லிவிட்டேன் சுக்கின் பேரே.”

உரை : வர்க்கம், நாகராதி,வீயம்,வலதம்,வர்க்கொம்பு மஞ்சத்தம்,நாக்கும்
என்பன சுக்கின் பெயர்கள்.

– வேறு-

சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்

” நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளை
யாமிது கற்பேதி யறி.” (பதார்த்த குணபாடம் 291

சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.

சிறுபீளையின் பெயர்கள்
—————————-
“விளங்கக்கேள் சனுங்கு வூசையென்றும் பேரு
வீரான ஊணின் பூடதென்றிதற்குப் பேரு
உளங்கக்கேள் உரத்மென்றும் அதீதப்பேரு
உறுதி பெறு ஊட்டுப் பரமூலியென்றும் பேரு
மலஙக்கேள் மூதேவிமூலமென்றும் பேரு
முக்கியமாய் சொல்லிவிட்டோம் சிறுபூளையன் பேரே.”

உரை : சனுங்கு ஊசை, ஊணின்பூடு, உரதம் ஊட்டுப்பா மூலி ஊங்கனிமூலி,
மூதாரம், மூதேவி மூலம் என்பன சிறுபீளையின் பெயர்கள்.

– வேறு –

சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)

இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற
தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.

” சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்
கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்று
நெருஞ்சின்றும் வித்தே நினை.” (பதார்த்த குணபாடம் _ 876 )

பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு, மூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.

சிறு நெருஞ்சியின் பெயர்கள்

திறமான விங்குடாவக மென்றும் பேரு
திருவார்த்தை வாட்டமென்றும் பரமாதரை யென்றும்
கரமான காதுநெட்டி யென்றும் பேரு
கருணைபெறுமோர் ஒரு தாளியென்றும் பேரு
வரமான அக்கவலாதி யென்றும் பேரு
வசனித்தோம் கொக்கூறப்பூடென்றும் பேரு
நரமான நாட்டிடு வாதிக மென்றும் பேரு
நன்றாகச் சொல்லிவிட்டோம் நெருஞ்சியதன் பேரே

உரை: விளங்குடாவகம், வாட்டம், பரமாதரை, காதுடநெட்டி,ஒருதாளி,அக்கவலாதி
கொகூறப்பூடு, நாட்டு வாதிகம் என்பன நெருஞ்சிலின் எட்டுப் பெயர்கள்.

யானை நெருஞ்சிலின் பெயர்கள்

விட்ட யானைவணங்கியென்றும் கொட்டப்பூவென்றும்
விடாத்தாலி மூலியென்றும் விளம்பினோம் யாம்
விட்ட மஞ்சனத முள்ளுப்பூ டென்றும் பேரு
வெட்டத்திரா மூலியென்றும் வெகுபேர் அதற்குண்டு
விட்டகணை நெருஞ்சினதற்குப் பேரு
வீரமத்தாளியென்று மது பேரையா
அட்டவத்தி நெருஞ்சி மயன்றதற்குப் பேரு
ஆக எட்டுப் பேரதற்கு நெருஞ்சியின் பேரே.

உரை : யானை நெருஞ்சிலின் எட்டுப் பெயர்கள்
கொட்டப்பூ, விடாதாலி மூலி, மஞ்சதை,முள்ளும் பூடு
வெட்டத்திரா மூலி,விட்ட கணை,விமத்தாளி ,அட்டவத்தி என்பனவாகும்.

மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
” மாவிலங்கப் பட்டையினால் வாத மொடு
சந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. ”
பதார்த்த குணபாடம் _ 550.

பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )
கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.
பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்
ஆகியவை குணமாகும்.

” வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்
சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்
சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலே
பேரா முட்டித் தூரைப் பேசு. ”
(பதார்த்த குணபாடம் _51 )

தகவல் தொகுத்தவர் : புதுவை ஞானம்.