பழந்தமிழ் நூல்களில் உயிர் வகைகள். — நூல் அறிமுகம்.
—————————————
ஒரு நாட்டைப்பற்றி அறிந்து கொள்ள விழைவோர் அந்த நாட்டின் நிலவமைப்பு ஆங்கிலத்தில்
FLORA AND FAUNA எனப்படும் தாவரம் மற்றும் உயிரினங்கள் பற்றிய அடிப்படைத் தவல்களைத்
திரட்டுவது மரபு. தற்காலத் தமிழகத்தில் இத்தன்மையான படைப்புகள் வெளிவருகின்றவா என்பது
எனக்குத் தெரியாது. இது போன்ற தகவல்கள்தான் டார்வின் போன்ற ஆய்வாளர்களை உருவாக்கியது.

மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற தலைப்பில் ம்யிலை சீனிவேன்ங்கடசாமி அவர்கள் எழுதிய
ஒரு நூல் நினைவுக்கு வருகிறது அந்த வரிசையில் சேர்க்கத்தக்க ஒரு நூல் பழைய புத்தகக்டையில் எனக்குக் கிடைத்தது.பல பக்கங்களைக் காணவில்லை.படித்தபோது தமிழில் விலங்கினங்கள் பற்றி தொ¦Ìகௌக்கப்பட்ட நல்லதொரு நூலாக இருக்கும் போல இருக்கிறது.கிடைத்த பக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த நூலினை திரு.செ.வேங்கடராமச் செட்டியார், தமிழ் விரிவுரையாளர்,ஆராய்ச்சிப் பகுதி அண்ணமலைப் பல்கலைக் கழகம் எழுத முத்ற்பதிப்பு 1960 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. மறு பதிப்பு வந்ததா என்பது தெரியவில்லை. உரிமை ஆசிரியருக்கே எனவும் விற்பனை உரிமை பாரி நிலையம் 59 , பிராட்வே – சென்னை 1
எனவும் தெரிய வருகிறது.

அன்னம் 😦 பக்கம் 97)

________

இது பெருமைசான்ற பறவையாகும். நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பினது.இதி பெரும்பாலும் பனி மிக்க இடத்தில் வாழும் தன்மையுடையது.பிற்கால இலக்கியங்களில் புலவர்கள் தமிழ் நாட்டில் மிகுதியாக அன்னங்கள் வாழ்ந்ததாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் அவ்வாறு பேசப்படவில்லை. காரணம் , அவை பனி மிக்க இடத்தில் வாழும் இயல்புடையதாலும் , தமிழ்நாட்டில் மிகு பனியிலதாதலும் ஆகும்.அன்னம் அழகுமிக்க மெல்லிய பறவயாக இருத்தலின் நம் நாட்டு மன்னர், தம்முடைய எழில்மிக்க அதனைக் கொணர்ந்து வளர்த்த்ப் பழக்கியிருக்கின்றனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் கவரி மானும் அன்னமும் துள்ளி
விளையாடிக்கொண்டிருந்த் வனப்பை நெடுநல்வாடை யுணர்த்துகின்றது.

” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.” என்பது காண்க.

நெடுமயிர் எகினம் என்றது கவரி மானினை. ஏற்றை _ ஆண் கவரி, உகளுதல் துள்ளுதல்
கவரியும் அன்னமும் பனிமலையில் வாழும் இயல்பினவாதலின் பிறந்தவிடத்துத் தொடர்பால் பாண்டியன் அரண்மனை முன்வாயிலில் அவை இஅண்டும் நட்பு கொண்டு துள்ளி விளையாடுகின்றன. இவை தமிழ் நாட்டில் காணப்படாத்வை. இவற்றைக் கொணர்ந்து அரண்மனையில் வளர்த்து விளையாடச் செய்ததற்குத் தக்க காரணம் உண்டு.

மயிர் நீப்பின் வாழாத மானமுடையது கவரிமான். பாலும் நீரும் கலந்து வைத்த வழியும் நீர் நீக்கிப் பாலுண்ணும் இயல்பினது அன்னப்பறவை குறை வேண்டியும் முறை வேண்டியும் அரண்மனைக்குச் செல்லும் குடிமக்கள் இத்தகைய கவரிமானையும் அன்னப்பறவையையும் காண்பார்கள்.பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக இருந்தால்மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் போல உயிர் நீப்பன் என்ற கருத்தை உணர்வார்கள். நீர் நீக்கிப் பாலுண்ணும் அன்னம் போல மன்னவனும் பொய் வழக்கை அறிந்து நீக்கி மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான் என்பதையும் உணர்வார்கள்
þவ்வாறு மன்னவனின் மாண்புகளை உய்த்து உணர வேண்டியே அன்னமும் கவரியும் அரண்மனையில் வளர்க்கப்பட்டன எனலாம்.
இத்தகைய கருத்துடன் வளர்ப்பதாதான் போக்கமில் புலவர்நக்கீரனார், அரண்மனையின் முன்வாயிலுக்கு அடையாக அன்னமும்
கவரியும் துள்ளி விளையாடுவதைக் கூறியுள்ளார் என்க.

தலைவியைப் பிரிந்திருந்த தலவன் மீண்டு வ்ந்து தலைவியோடு கூடிய மகிழ்ச்சிக் கூடலுக்கு இக்காதல் மிக்க அன்னப்பறவையின்
புணர்ச்சியை உவமை கூறியுள்ளார் நல்லஞ்துவனா என்ற நல்லிசைப் புலவர்.

” மென்னடைப் பேடை துணைதரத் தற்சேர்ந்த
அன்னவான் சேவற் புணர்ச்சி போல் ” (கலி-147) என்பது காண்க.

இதனால் அன்னப்பறவை காதலுணர்ச்சி மிக்கது என்பது விள்ங்கும். இவ்வன்னங்கள் மனமகிழ்ந்து கூடும் அன்புறு புணர்ச்சிக்
காலத்தில் உதிர்கின்ற அவற்றின் மெல்லிய தூவியைச் சேர்த்துவைத்து செல்வச்சிறப்புடைய மன்னவர் மாண்புக்கேற்ப மெல்லிய
நல்லணையமைப்பதுண்டு. இதனை :

” துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டு ” (நெடுநல்)
என நகீரர் நவின்றிருத்தலால் அறியலாம்.இயற்கையாக உதிரும் தூவியை விடத் துணை புணர் அன்னங்கள் என்பு நெகிழ்ந்து
புல்லுங்கால் உதிர்கின்ற தூவி, மென்மையிற் சிறத்தலின் அவற்றாலாய அணையே மிகச் சிறந்த்தாக மதிக்கப்பட்டது.

கடலில் வளரும் சங்கினை பெண் அன்னம் என்று கருதி ஆண் அன்னம் மருண்டு மிதிக்கும் செயலை,

” அன்னந் துணை செத்து மிதிக்கும்
தன்கடல் வளை ” (ஐங்_106)

என்ற அடிகள் விளக்குகின்றன. அன்னத்தின் கால்கள் குறியன என்பதைக் ‘ குறுங்காலன்னம் என்ற சொற்றொடர்
விளக்குகின்றது.

அன்னம் வெள்ளை நிறமுடையது என்பதே பலர் நம்பிக்கை.வெள்ளன்னம் இருப்பது போலக் கருப்பு அன்னமும் உண்டு
காரன்னத்தைப்பற்றித் தமிழ் நூல்களில் பெரும்பாலும் கூறப்படவில்லை என்பதுண்மை. ஆயினும் சிந்தாமணியில்
வெள்ளன்னம் என்ற தொடரை விளக்க வந்த நச்சினார்க்கினியர்,
” காரன்ன முண்மையின் வெள்ளன்னம் என்றார்”
என எழுதியுள்ளார்.கயிலாய யாத்திரை சென்று வந்தவர்களும் மானச மடுவில் காரன்னமும் வெள்ளன்னமும் இருப்பதாகக்
குறிப்பிடுகிறார்கள். பிசிராந்தையார் என்னும் பெருந்தகைப் புலவர், அன்னச்சேவல் ஒன்று குமரியும் பெருந்துறையில்
அயிரை என்னும் மீனை மாந்தி விட்டு வடதிசை நோக்கிச் செல்லும் காட்சியைக் கூறியுள்ளார். ( ப்ற நா – 67).
இதனால் அன்னப் பறவை மீனையும் உண்ணும் என்பதுணரலாம். ( தொடரும்)

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.

Advertisements