தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)

எண்கள்,எண்ணிக்கை,அளவைகள் பற்றிய சில தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம்.
1.எண் அளவைகள்.

“அற்புத யெண்வாய் தன்னில் தத்தம றாத தெல்லாங்
கற்புடை மானே கேளு கற்பமே நாற்பத்தேழு
புற்புதம் நாற்பத்தொன்று புணரியே முப்பத்தேழு
பற்பமுப் பத்திமூன்று பனிச்சங்க முப்பத்தொன்றே.

தாயிருபத் தொன்பது தந்தையிருப்பத்தேழு தனிவருக்கம்
இருபத்தி மூன்று பாயல் முத்தொகை பத்தொன்பது
பதினேழு பந்தம் பதினஞ்சு சின்னமாய் குணமும் மூன்று
சிந்தை பதிமூன்று கும்மி பதினொன்று பாகம் நாலு
அணிவெளிம்மி இருபத்தொன்றே.”

கற்பம் 47 கொண்டது – புற்பதம்
புற்பதம் 41 கொண்டது – புணரி
புணரி 37 கொண்டது- பற்பம்
பற்பம் 33 கொண்டது – பனிச்சங்கம்
பனிச்சங்கம் 31 கொண்டது – தாய்
தாய் 29 கொண்டது – தந்தை
தந்தை 27 கொண்டது -தனி வருக்கம்
தனி வருக்கம் 23 கொண்டது- முத்தொகை
முத்தொகை 19 கொண்டது- பந்தம்
பந்தம் 17 கொண்டது- சின்னம்
சின்னம் 15 கொண்டது- குணம்
குணம் 3 கொண்டது – சிந்தை
சிந்தை 13 கொண்டது – கும்மி
கும்மி 11 கொண்டது – இம்மி
இம்மி 21 கொண்டது – அணு.

அணு என்பதான ஒரு முழு அலகினை (UNIT) ஒன்று எனும் முழு எண்ணாகக் கொண்டால் 1 / 21 . = இம்மி , அதனை 11 ல் வகுத்தால் கும்மி , அதனை 13 ல் வகுத்தால் சிந்தை , அதனை 3 ல் வகுத்தால் குணம்.இவ்வாறாக வகுத்துக்கொண்டே போனால் இறுதியாக வரும் மிகச்சிறிய பின்னம் கற்பம் என்றாகிறது.( 1 / 21 *11 *13 * 3 * 15 *17 *19 * 23 * 27 * 29* 31 *33 * 37 *41 *47 ) என்னிடம் உள்ள Packet calculator உதவியுடன் இவ்வளவு நீண்ட கணக்கைப் போட முடியவில்லை.கணிதமும் தமிழும் தெரிந்தவர்கள் ய்வு செய்து பண்டைத் தமிழர்தம் கணித அறிவைப் புரிந்து கொள்ளலாம். பண்டைய தமிழர்கள் பிரிக்க/பகுக்க முடியாத அலகு என உலகம் சமீப காலம் வரை நம்பிய அணுவுக்கும் கீழான நுட்மமான அளவைகளை ( Minute Fractions) ஏன் எதற்காகப் பயன் படுத்தினார்கள் ?
அவை பற்றிய வாய்ப்பாடுகளை பனை ஓலைகளில் எதற்காக எழுதி வைத்தனர் ?

இவை பற்றியெல்லாம் http://www.thinnai.com திண்ணை இணைய தளத்தில் நான் ஏற்கனவே எழுதியுள்ளவற்றை படித்துப் பார்க்கலாம்.

(இன்னும் தொடரும்)

Advertisements