மனைவிக்கு ஒரு கடிதம்
_____________________
எனது ஒரே ஒரு அன்புத் துணவியே!
” எனது தலை விண்ணென்று அதிர்கின்றது
எனது இதயமே நின்று போய் விட்டது.! ”
“அவர்கள் உம்மைத் தூக்கிலிட்டால்
உம்மை நான் இழந்து போனால்
உயிர் தறியேன்!”
என்பதாகச் சொல்லுகிறது கடைசியாக வந்த
உனது கடிதம்.

நீ உயிர் வாழுவாய், எனது அன்பே !
எனது நினைவுகள்தான்
கரும்புகையாய்க் கரைந்து போகும் காற்றில் .
எனது இதயத்தின் செங்கூந்தல் அழகியே
நீ வாழுவாய்.
இந்த இருபதான் நூற்றாண்டில்
சோகம் நிலைத்திருப்பது மிஞ்சி மிஞ்சி
ஒரு ஆண்டு காலந்தான்.

மரணத்தை
ஒரு கயிற்றின் நுணியில்
எனது சடலம் ஊசலாடுவதை
ஏற்கவே மறுக்கிறது
எனது இதயம்.
ஆனால், உன்னால்
பந்தயம் கட்ட முடியும்

ஒரு நாடோடியின் கருமுடியடர்ந்த கைகள்
எனது கழுத்தைச்சுற்றி
தூக்குக்கயிற்றை இறுக்கும் போது
நசீமின் நீலக்கண்களில்
சோகம் தோன்றுமென எதிர் பார்த்தால்
ஏமாந்து போவார்கள் !

கடைசிக் காலையின் உதய வெளிச்சத்தில்
காண்பேன் எனது நண்பர்களையும்
உன்னையும்.
எனது கல்லறை நோக்கிச் செல்வேன்
எதற்காகவும் வருத்தப்படாமல் ஆனால்
இன்னும் முடிக்கப்படாத பாடலைப் பற்றிய
வருத்தத்துடன் மட்டும்……..

இஸ்தான்புல்லில் இருந்து கிளம்பி
போஸ்பரசைக் கடந்து
எனது அறையை நிரப்பியிருக்கும்
நினைவுகளோடு…..
சில பசிய விழிகளுடன்
சில கை விலங்குகளுடன் அல்லது
சில கைக்குட்டைகளுடன்
லாவெண்டர் மணக்கும்
அக்கைக்குட்டையில்.

உன்னால் உறங்க முடியாது எனது அன்பே வர்னா
வர்னாவின் BOR HOTEL உள்ளே !

மூலம்: நசீம் இக்மத் – ஆங்கிலத்தில் :முட்லி கோனுக்.
தமிழாக்கம்: புதுவை ஞானம்.

Advertisements