யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
—————————————————–
நாம் சிந்திக்கும் செயல் படும் எந்தவொன்றும்
பயனற்றதோ முக்கியமற்றதோ அல்ல.
ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் செல்லும்
கட்டவிழ்ந்த சக்தி தான்.யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
—————————————————–
நாம் சிந்திக்கும் செயல் படும் எந்தவொன்றும்
பயனற்றதோ முக்கியமற்றதோ அல்ல.
ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் செல்லும்
கட்டவிழ்ந்த சக்தி தான்.
மரணமற்ற நம் கடந்த காலத்தை நிர்ணயிப்பவர்கள்
நமது நடவடிக்கைகளின் குழந்தை என
விதியை நிர்ணயித்து இருக்கிறார்கள்.
நமது விருப்பம் ஆழ முயன்று உழுத நிலத்தில் இருந்து
நாமே மறந்து போன நமது செயல்களின்
விளைவுக் கனியை அறுவடை செய்கிறோம்.இந்தக்
கனியைத் தாங்கிய மரம் கண்ணுக்குத் தென்படாததாலும்
தெரிய வராத கடந்த காலத்தில் இருந்து பிறந்த
இக்கணத்தில் நாம் வாழ்வதனாலும்
ஒரு யாந்திரீக சக்தியின் பாகங்களாகத் தோன்றுகின்றன அவை ;
பூமியின் சட்டங்களுடன்பிணைக்கப்பட்டவொரு யாந்திரீக மனதாக
இருந்தபோதிலும், ஒரு உயரிய விறுப்புறுதியின் கருவிகள்தாம் அவை.
எல்லாவற்றையும் கண்காணிக்கும்- மேலிருந்து நோக்கும் விழிகளால்
இன்னமும் பார்க்கப் படுகின்றன அவை.

விதியையும் வாய்ப்புகளையும்
முன் கூட்டி உணரும் ஒரு கலைஞன்
முன்னமே வகுக்கப்பட்ட வடிவத்தில்
கட்டியமைக்கிறான் நம் வாழ்வினை
ஒவ்வொரு அடியெடுப்பின் பின் விளைவும்
தெரியும் அவனுக்கு_கண்காணித்துக் கொண்டிருக்கிறான் அவன்
தாழ்ந்த தடுக்கி விடும் சக்திகளை.

மூலம் :மகான் அரவிந்தர் தமிழாக்கம் :புதுவை ஞானம்.
சாவித்திரி காண்டம் மூன்று , நூல் 4.
——————————————————————————–
சக்திகளின் லீலைகள்
_____________________
கொஞ்சம் புத்தியுடனும், கூர்ந்து நோக்கும் திறனுடனும், அகம் நோக்கிய உள்ளுணர்வுடன் வாழ்பவர்கள்
எவர் ஒருவரும், தமக்குத் தெரியாமலேயே,
கண்ணுக்குப் புலப்படாத சக்திகள் இயங்குவதையும்,
லீலை புரிவதையும்- நாடகமாடுவதையும்
ஒவ்வொரு கட்டத்திலும் அவதானிக்க முடியும்.
யோகத்தின் மூலமோஅல்லது ஒரு உள்ளுணர்வின் மூலமோ; யோகத்தின் மூலமாக அல்லாமல்
ஒருவித உள்ளுணர்வை வளர்த்துக்கொண்ட சிலர்-
சாக்ரடீஸ் போன்றவர்களில் சிலர் தான்
இந்த கண்ணுக்குப் புலப்படாத சக்திகளை
உணர்ந்து கொள்கிறார்கள் என்பதுடன்
உணர்வு பூர்வமாக அவற்றால் லாபமடைகிறார்கள்.
அவற்றைப் பயன் படுத்தி இந்த வழியில் செல்ல வேண்டும்
என கட்டுப் படுத்துகிறார்கள். அவ்வளவு தான்.

உள்ளுறையும் சக்திகளின் நாடகம் மிகவும் சிக்கலானது. அவற்றைப் பற்றிய உணர்வு உள்ளவர்கள்,
அவற்றைக் கண்டுகொண்டு அவற்றின் விருப்பம் போல
ஏன் சம்பவங்கள் நடக்கின்றன என்பதை உண்மையில்
புரிந்து கொள்ள முடியும்.

ஒரு சம்பவத்தை நாம் கவனிக்கும் போது ,
அதன் விளைவைக் கொண்டு அதனைப் பற்றி மதிப்பிடவும், விளக்கவும் செய்கிறோம்.
அதையும் கூட
மிகவும் வெளிப்படையான கூறுகள், சூழ்நிலைகள், அல்லது சாதனங்களைப் பார்ப்பதன் மூலம் விளக்குகிறோம்.
ஆனால் ஒவ்வொரு சம்பவமும்
ஒரு சிக்கலான வலைப்பின்னலின் விளைவுஎன்பதை
நாம் கவனிப்பது இல்லை.
எனினும் கவனிக்க முடியும்.
ஏனெனில்,
எல்லா சக்திகளும் கண்ணுக்குப் புலப்படாதவை
ஆனால் அவை எல்லையற்றதான ஆன்மீகப் பார்வைக்குப் புலப்படாதவை அல்ல.
அவற்றுள்
சில ஒரு மெய்மையை உருவாக்க அல்லது நிகழ்த்திக் காட்ட செயற்படுபவை ஆகும்.
சில ஏற்கனவே வாழும் மெய்மைக்கு அருகாமையில்
உள்ள நிகழ்வுகளாக, ஒரு வகையில் அப்படிப்பட்டவற்றின், முழுமையில் அடங்கி உள்ளன.ஆனால்
எந்த மெய்மையை விளைவிக்க இந்த சாத்தியக் கூறுகள் உழைக்கின்றனவோ அவற்றின் பின்னால், உந்து சக்தியாக , எப்போதுமே ஒரு புதிய சாத்தியக் கூறு குறுக்கிட முடியும். அது திடீரென வீரிய மிக்க சக்தியாய்
அந்த வலைப்பின்னலுடன் சேர முடியும்.
அதற்கும் மேலாக அதே சக்திகளின் இணைவில் இருந்து வெவ்வேறு விளைவுகள் வரக்கூடும்.

இவற்றிலிருந்து என்ன விளைவுகள் ஏற்படும் என்பது, எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் தெய்வீக ஆணையினால்
ஏற்கனவே தயாராகக் காத்திருக்கும் ஒரு மேலிடத்தின்
இசைவால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன.

.இவையனைத்தையும் நமது அறிவு புரிந்து கொள்ளாது, ஏனெனில் அது அறியாமையின் ஒரு கருவி.
அதற்கென்று குறுகிய பார்வையும்
கொஞ்சமேயான ஆனாலும் நிச்சயமற்றதும்
நம்பகத்தன்மை அற்றதுமான அறிவு அது.
அத்தோடு கூட நேரடியான விழிப்பிற்கான
எந்த வழி வகையும் அதற்கு இல்லை.
ஏனெனில் இது தான் அறிவுக்கும்
யூகத்துக்கும் இடையிலான வேறு பாடு.
யூகம் என்பது நேரடி விழிப்புணர்விலிருந்து பிறக்கிறது.
அறிவு என்பதோ தெரியாத சைகைகள்,குறியீடுகள் ஆகியவற்றிலிருந்து சிரமத்துடன் சேகரித்து
உருவாக்கப்பட்ட தகவல்களின் மறைமுக செயற்பாடு ஆகும்.

சாதாரன அறிவில் இரண்டு விதமான அறியப்படக்கூடிய செல்வாக்குகள் தாம் இருக்கின்றன.
அவை ஒருவரது
சிந்தனைகளும் உணர்வுகளும் செயற்பாடுகளும்
(ஒரு புறம் )சூழல் மற்றும் பௌதீக சக்திகளின் லீலைகள்
(மறு புறம்)எனவாக இருக்கின்றன.
ஆனால் ஒருவர்,விஷயங்களின்
உட்காட்சியை அறிந்து கொள்ளத் தொடங்கும் போது
அது வேறு விதமாக ஆகின்றது.
சக்திகளின் அனைத்து செயற்பாடுகளும்
பிரகிருதியின் உளவியல் மற்றும்உடலியல் சக்திகள்-
நமது இயற்கையின் சுபாவத்தின் மீது செயல் புரிபவை அனைத்தும் நமக்குப் பின்னால் உள்ள
ஒரு உள்ளுணர்வால் ஊக்குவிக்கப் படுகின்றன என்பதை அனுபவ பூர்வமாக உணருகிறார்.
மிகப்பெரிய பிரபஞ்ச
செயற்பாட்டின் மத்தியில் அவர் இருப்பதனால் ஒவ்வொன்றையும் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரமான ஆளுமையின்
விளைவுகள் என விவரிக்க முடிவதில்லை.

மறைந்துறையும் உயிர்ச் சக்திகள்.
—————————————————-
தன் இதயத்தின் உள் வைத்து, தான் மட்டும் அறிந்திருக்கும்
எல்லையற்றுப் பரந்ததோர் திட்டத்தின் பகுதிகள் தாம்
அண்டத்திலும் அதற்கு அப்பாலும் நிகழும் அனைத்தும்.
வெளிப்புற நிகழ்வுகளின் வித்துக்கள் அனைத்தும்
அவற்றுக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றன.
தற்செயலை ஒத்திருக்கும் இந்த நோக்கமற்ற விதியும்
புரிந்து கொள்ள இயலாத பிரம்மாண்டமான முடிவுகளும்
காணப்படாத அப்பணியின் ஊமை வரைபடங்கள் தான்.
அறியப்படாத விதிகள் தான்
அறியக்கூடியவற்றை கட்டமைக்கின்றன.
அரிதாக நாம் உணரும் அல்லது வியக்கும்
வாழ்வின் புறத்தோற்றத்தை வரையும் சம்பவங்களோ…….
புலன்களுக்கு எட்டாத அலைவரிசையின்
மறைக் குறிகள் தாம்.
தூலமான பகல் நேரத்தில் தென்படாத
ஒடுக்கப் பட்ட யதார்த்தங்களின்
வெளிப்பாடு தான்.

மர்மங்கள் நிரைந்த இந்த ரகசிய வளைகுடாவை
யாரால் துளைத்து ஊடுறுவ முடியும் ?.
தற்காலிக சம்பவங்களையும் பின் விளைவுகளையும்
எந்த ஆன்மாவின் தேவை ஏற்படுத்தியது என்பதனை
யாரால் புரிந்து கொள்ள இயலும் ?

அன்றாட நடவடிக்கை எனும் வெளிப்புறத் தோற்றத்தில்
ஆழ்ந்து போயின நமது கண்கள்.
சூழ்நிலைகளின் சக்கரங்கள் உராய்வதைச் செவிமடுத்து
வியப்பிலாழ்ந்து போயின நம் செவிகள்
பின்னணியில் மறைந்துறையும் காரணங்கள்
என்னவென்று அறியாமல்.

மூலம்: மகான் அரவிந்தர். சாவித்திரி-நூல் 1. காண்டம் 4.
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

——————————————————————————————————————————————————————————–
முத்திரையிடப்பட்ட தோற்றுவாய் கொண்டவை
நமது உள்ளுணர்வின் அசைவுகள்.
ஆனால் நிழலார்ந்த அந்த உட்பொருளை
வாங்க முடியாது யாராலும்.நமது தோழமை
வளர்க்கும் எந்தப் புரிதலும் அதனக் கட்டுப் படுத்தாது.
அறிவு அலட்சியப்படுத்தும்
மர்மங்களில் இருந்து நமது நடவடிக்கைகள் பிறக்கின்றன.
மிக ஆழமான நமது
எண்ணங்கள் கூட தம்மைப் பற்றிய அறியாமையில் இருக்கின்றன
நமது உடல் கூட
ஒரு ஆச்சரியமான பட்டறைதான் ;
நமது பூமியின் வேர்கள் ஆழப் பிளந்து ஊடுருவுகின்றன
பூமிக்குள் – இப்படித்தான் நமது அறிவின் வேர்களும் உயிரின் வேர்களும் காண முடியாத ஆழத்தில் உள்ளன.

நமது எண்ண ஊற்றுக்கள் உள்ளுக்குள்ளேயே ஆழத்தில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன.
அவற்றுக்கு அப்பாலுள்ள சக்திகளால் நமது ஆன்மாக்கள் இயக்கப் படுகின்றன.
அந்த ஆன்மாக்களால்
எட்ட முடியாத நிலத்தடி நீர் போல
ஒரு சக்தி செயல் படுகிறது.
தான் நினைத்ததை அழித்து விடுவதில்லை அது.

நினைவற்ற புலனுறுப்புகளையும்
வழிகாட்டிகளையும் பயன் படுத்தி
அதுவே தான்,
நாம் நினைப்பதற்கும் உணர்வதற்குமான
காரணம் ஆகிறது.
ஆழ்மனதின் ஆதிமனிதம்,
சரியாகப் பயிற்றுவிக்கப்படாத தடுக்கி விழும் விரிவுரையாளர்கள் தங்களது சின்னஞ்சிறிய அன்றாடப் பணிகளை மட்டுமே அறிந்தவர்கள்
தம் உயிரணுக்களின் பதிவுகளில் சுறுசுறுப்பானவர்கள்.

புலணுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ரகசியங்களில்
தெளிவற்ற மறைவிடமாக அண்ட சக்தியின்
நற்செய்தியை அதுஒலி பரப்புகிறது.
உயிரின் உட்கணுக்களுக்குள் ஒரு கிகிசுப்பு கேட்கிறது.
உணர்வற்ற இருண்ட குகைகளில் அது
எதிரொலிக்கிறது.
பேச்சு தாவுகிறது, எண்ணங்கள் துடிக்கின்றன.
இதயம் படபடக்கிறது.
மனத்திட்பம் பதிலளிக்கிறது.
தசைகளும் நரம்புகளும் மனத்திட்பத்துக்கு அடிபணிகின்றன.
இந்த நுண்ணிய உறவுகளை நமது உயிர்
மொழி மாற்றம் செய்கிறது.
இவை அனத்தும் ஒரு ரகசிய சக்தியின் வாணிகம் தான்.

மூலம் :மகான் அரவிந்தர் சாவித்திரி நூல் 2. காண்டம் 5.

உயிர் ஒற்றுமை
————————-
எனது இதயத்தின் உள்ளே இடம் கொடுத்தேன்
அனைத்து உயிர்களுக்கும்
எனக்குள்ளே உணர்ந்தேன்
அகிலத்தில் உயிர்த்த அனைத்து இதயத் துடிப்பையும்
பகிர்ந்து கொண்டேன்
படைப்புகளின் இன்ப கீதம் அனைத்தையும்.
பருகினேன் கசப்பின் பழரசமாய்
அனைத்தின் துயரங்களையும்.
உணர்ந்தேன்
மற்றவரின் இதயத்தின் ஆத்திரத்தை ……

அனைத்துக் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளும்
வந்து விழுந்தன
என் இதயமெனும் சொந்த உலகில்;
ஒரு கோடி இதயங்கள் வெளிப்படுத்திய
ஒற்றை அன்பினைப் பகிர்ந்து கொண்டேன்.
மனிதன் வேட்டையாடும் மிருகமும் நான் தான்
மனிதன் ஏற்றுக் காப்பாற்றும் மிருகமும் நான் தான்.
இன்பம் துன்பம் என்னும் பற்றியெரியும்
சிறகை விரித்துப் பறக்கிறேன்.
கரும் நெருப்பும் பொன் நெருப்பும்
ஒற்றைக் கருணையை
நோக்கித்தான் பறக்கின்றன.
இணைந்து எழுகிறேன் நான்
ஒரு தெய்வீக வான் நிலைக்கு
சக்தியும் அன்பும் மரணமற்ற பேரின்பமும் நோக்கி.

எந்தக் கரங்களாலும் தீண்ட இயலாத
ஆழ்ந்ததோர் ஆன்மீக அமைதி – இந்த
இன்ப துன்ப நாடகத்தின் விளங்காத் தன்மையை
உறுதிப் படுத்துகிறது.

மகான் அரவிந்தர் collected poems p.146
————————————————————————————————————

நீலப் பறவை.
——————–

கடவுளின் பறவை நான்
இறை நீல வண்ணமும்
தெய்வீகத் தூய்மையும்
உயரமும் என் வெளி.

இனிமையும் உண்மையுமான
இராகங்களை இசைக்கிறேன் நான்
கடவுளின் செவிகளும் அவன்
சிரத்துக்கு மேல் மிதக்கும்
தேவதையின் செவிகளும் குளிரும் வண்ணம்.
(Seraph :இசையாவின் தரிசனத்தில் வந்த இறைவனின் மேலாக
மிதக்கும் தேவதை.)

மனிதனின் பூமியிலிருந்து
தீயென எழுகிறேன் யான்
துயரத்தின் சுவடற்ற விண்வெளி நோக்கி
மீண்டும் விழுகிறேன் அவன் பிறந்த
துயர பூமியில் – மெய் மறந்த இன்பத்தின்
அக்கினி வித்துகளாய்.

காலமும் வெளியும் கடந்து
சிறகடித்துச் செல்கிறேன் யான்
மங்காதவோர் ஒளியினை நோக்கி
நித்தியத்தின் கருணை முகத்தையும்
ஆன்மீகத்தின் அதிர்ஷ்டப் பறவையையும்
கொண்டு வருகிறேன் யான்.
எனது பவழ விழிகளால் அளக்கிறேன் உலகத்தை
ஞான விருட்சத்தின் கிளைகளில் தாவி அமர்ந்து கொண்டு
சொர்கத்தின் மலர்த் தூவலும்
நித்தியத்தின் நீரோடைகளும்
நனைக்கின்றன என்னை.

கொழுந்து விட்டெரியும் எனது இதயத்திலிருந்து
எதுவுமே மறைக்கப் பட வில்லை
கரையற்றதும் சலனமற்றதும் என் மனம்.

பேரானந்தத்தின் அர்ப்பனக் கலையே
எனது பாடல்
சாகாக் கலையின்
விறுப்புறுதியே
எனது சிறகடிப்பு.

முலம் :மகான் அரவிந்தர் Collected poems -Sri Aurobindoo birth centinary Library Vol.5

Advertisements