சும்மா விடுவார்களா என்ன ?
________________________
Oaths,promises,love,affection,all
are words just words;
No bonds exist between people,
those are bonds, mere bonds.

the messiah may stand before you,
But will not be your saviour;
In the endyour own blood to your lips will put fire,
Soar high inthe skies today
but dust to dust you will be ……..

In fair times they will walk along,
intimes foul avert their eyes,
The wordly wise will take youto
heart onlu to break the heart
they deceive the God himself
Would they spare a lesser mortal……?

————————————————————–

உறுதி மொழிகள்- வாக்குறுதிகள்
அன்பு பாசம் எல்லாமும்
வெற்று வார்த்தைகள்.
மக்களுக்கிடையில்
பந்தம் எதுவும் இருக்கவில்லை.
தளைகள் இருக்கின்றன
வெறும் விலங்குகள்- தளைகள் !

இறைத்தூதர்
உங்கள் எதிரே பிரசன்னமாகலாம்_ ஆனாலும்
உங்களது மீட்பர் ஆகவோ…._
மீட்டு விடவோ……. முடியாது !
முடிவில்
உங்கள் சொந்த ரத்தம்
உங்கள் உதடுகளில்
தீப்பற்றி எரியும் !
இன்றே வானத்தை நோக்கி
உயர்ந்தெழுங்கள்
ஆனாலும்
நீங்கள் செல்வீர்கள்
புழுதியிலிருந்து புழுதிக்கு.
நல்ல நாட்களில்
உங்கள் கூட வருவார்கள் அவர்கள்
நீங்கள்
நல்ல நேரம் பார்த்து நழுவி விடுங்கள்
அவர்களின் பார்வையிலிருந்து !

லெளவுகீக வாதிகள் தங்கள் இதயத்தில் ஏற்பார்கள்
உங்களை-உங்கள் இதயத்தை
சுக்கு நூறாக உடைப்பதற்காய்.
கடவுளையே ஏமாற்றி விடுவார்கள் அவர்கள் !
அற்பாயுசுக்காரனான உங்களை
சும்மா விடுவார்களா என்ன ?

மூலம்: UPKAR, indeevar,
THE TELEGRAPH , MARCH, 1997

தமிழாக்கம்: புதுவை ஞானம்.

Advertisements