புத்தாண்டு _ பொங்கல் நல்வாழ்த்துக்கள்
__________________________________

பேரரசு முழுமைக்கும்
நன்னெறியை எடுத்தியம்பி நிலைநாட்ட
விழைந்த முன்னோர்கள்

முன்னதாக
தங்கள் மாநிலத்தை நெறிப்படுத்தினார்கள்
மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்

முன்னதாக
தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள்
குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் ஆளுமையை நெறிப்படுத்தினார்கள்
ஆளுமையை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் இதயத்தை நெறிப்படுத்தினார்கள்
இதயத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் சிந்தனையை நெறிப்படுத்தினார்கள்
சிந்தனையை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் அறிவை விரிவுபடுத்தினார்கள்
அந்த அறிவின் விரிவாக்கமே
அனைத்தையும் ஆராய்ந்து உணர்வதுதான்.

அனைத்தையும் ஆராய்ந்து உணர்ந்ததனால்
அறிவு முழுமை பெற்றது
அறிவு முழுமை பெற்றதனால்
சிந்தனை தூய்மையுற்றது
சிந்தனை தூய்மையுற்றதனால்
அறிவு நெறிப்படுத்தப்பட்டது
அறிவு நெறிப்படுத்தப்பட்டதனால்
ஆளுமை வளர்ச்சியுற்றது
ஆளுமை வளர்ச்சியுற்றதனால்
குடும்பம் நெறிப்பட்டது
குடும்பம் நெறிப்பட்டதனால்
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டதனால்
பேரரசு முழுமைக்கும்
அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்ந்து நிலவியது.
.
மூலம் : கன்பூசியஸ் , சீனா.
தமிழாக்கம் : புதுவை ஞானம்

Advertisements