ஓ…துருவத் தாரகையே !

—————————————–

அனைத்தையும் பிரிய முடியும் என்னால்
பிரிய இயலாது அந்த மரத்தை மட்டும்
இருக்கட்டும் அது அவ்வாறாகவே
விளங்கட்டும் விழிப்புடன்
நெடிதோங்கி அழகாக – எனது
வாழ்நாள் உள்ளவரை !

அனைத்தையும் பிரிய முடியும் என்னால்
பிரிய இயலாது அந்த நதியை மட்டும்
இருக்கட்டும் அது அவ்வாறாகவே
ஓடட்டும் எப்போதும் விழிப்புடன்
மரத்தை ஒட்டி – எனது
வாழ்நாள் உள்ளவரை !

அனைத்தையும் பிரிய முடியும் என்னால்
பிரிய இயலாது அந்த ஓடத்தை மட்டும்
இருக்கட்டும் அது அவ்வாறாகவே
மிதக்கட்டும் எப்போதும் விழிப்புடன்
நதியின் மீது – எனது
வாழ்நாள் உள்ளவரை !

அனைத்தையும் பிரிய முடியும் என்னால்
பிரிய இயலாது உன்னை மட்டும்
மரமும் நதியும் ஓடமும்
கரிய இருளில் மூழ்கிப் போனாலும்
நிலைத்து நின்று வானத்தில்
ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பாய்
ஓ. . . துருவத் தாரகையே !

மூலம் : உமாதேவி
தமிழாக்கம் : புதுவை ஞானம்
SOURCE : THE COMING RACES
BY :NOLINIKANTA GUPTA
27 December 2008

Advertisements